குவாலிட்டி ஆப் லைப் (Quality of Life)

தரம் தகுதி குறைவாக உள்ளவர்களை தரமுள்ள தகுதியுள்ள மனிதர்களிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்தால்... அந்த தரம் குறைந்த தகுதி குறைந்த மனிதர்கள் சாரம் மிகுந்த சாரம் அதிகமுள்ள மனிதர்களை தன்னுடைய தரத்தின் அளவிலேயே எடை போடுவார்கள் அவர்களுடைய மதிப்பை அவர்களுடைய சுய அனுபவத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடுவார்கள்..

இதனால் பாதிப்பு யாருக்கு என்றால் இந்த தரம் குறைந்த மனிதர்களை தரமிக்க மனிதர்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்த அந்த நபர் தான் பாதிக்கப்படுவார்.... சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தரம் குறைந்த மனிதர்கள் தரம் குறைந்த மனிதனோடு சேர்வார்கள்... தரம் குறைந்த மனிதர்கள் சிறந்த மனிதர்களை தரம் குறைவாக பார்ப்பார்கள்.


இவர்களை யார் அறிமுகப்படுத்தி வைத்தார்களோ அவர்களும் தரம் குறைந்தவர்கள் தான்... எப்படி எனில் அறிமுகம் செய்து வைத்த நபர் சரம் உள்ள மனிதராக இருந்தால் இந்த தரமற்ற மனிதர்களோடு அவர் இணைந்து இருக்க மாட்டார்... நெருங்கிய உறவாக இருந்தாலும் அறிவு வேறு மதிப்பு வேறு நடத்தை வேறு என்பதை புரிந்து தரமற்ற மனிதர்களை தரமுள்ள மனிதர்களிடத்தில் அறிவும் செய்து வைக்க மாட்டார்கள்....

இதைத்தான் குவாலிடி ஆஃ லைஃப் என்று உளவியல் கூறுகிறது. உங்கள் நண்பர் யாரென்று சொல்லுங்கள், நான் உங்களைப் பற்றி சொல்கிறேன் என்பது நட்பு உளவியல்.

உனக்கு எது விருப்பமாகவும் பொழுதுபோக்காக உள்ளதோ... அதில் ஆழமாக உன்னை செலுத்தி உன் அறிவை வெளிப்படுத்தி வெற்றி பெற தோல்விகளை சந்தித்து உன்னை மாற்றியமைத்து பொழுதைப் போக்காமல் வாழ்க்கையை வாழ உழைப்பு உளவியலை பயன்படுத்து.


எச்செயலில் தன் உள்ளார்ந்த ஆற்றல் முழுமையாக செயல்படுகிறது என்று ஒருவன் உணர்கிறானோ அதுவே இயற்கை கொடுத்த படைப்பின் பங்கீடு ஆகும். அதில் ஈடுபட்டு, முறைப்படுத்தி அதனை சமூகத்திற்கு அறிவு சார்ந்த சொத்து உரிமையாக உலகத்திற்கு கொடுப்பவர்கள் தான் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழும் இயற்கையின் பிரதிநிதிகள்.. இந்நிலையை அடைவதற்கு பல்வேறு எதிர்ப்புகள் அடக்குமுறைகள் நிராகரிப்புகள் போன்ற எதிர்வினைகளை அறிவின் மூலம் கையாண்டு அதனை நிலைப்படுத்த கடுமையான செயல் உழைப்பு செய்ய வேண்டும்... 



கற்பனை வளம் உழைப்பாக உருமாற்றம் பெறவில்லை என்றால் அது பகல் கனவு... அதாவது உழைப்பில்லா நினைப்பு...

கற்பனையை உழைப்பாக மாற்றுவதற்கு பல்வேறு செயல் திட்டங்கள் செயல் நுட்பங்கள் செயல் ஆலோசனைகள் செயல் மாற்றங்கள் நிபுணர்களின் ஆலோசனை அவசியம் என்பதை புரிந்து கொண்டவர்கள் தான் உலகில் மிகச்சிறந்த மிகப்பெரிய பெருநிறுவனம் என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் நிறுவன தொழிலதிபர்கள்...



இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று கேட்டுக்கொண்டு பிரச்சனையை வெளியே சொல்லாமல் தன்னுடைய பிரச்சினையை பெருமை கொண்டு வாழும் மனிதர்கள் கடைசி காலகட்டத்தில் தான் பிரச்சனை முற்றிவிட்டது என்று உணர்வார்கள் அதையும் கூட சிலர் இது கிரகத்தின் பயன் பெயர் ராசி எண் கணித கோளாறு எதிர்மறை எண்ணங்கள் என்று தன் திறமைக்கு மாற்றி வடிவ பெயர்களைக் கூறி தப்பித்துக் கொள்வார்கள் அதிலும் ஒரு சிலர் இது கடவுளுடைய செயல் என கடவுளை குற்றம் சாட்டி விட்டு தான் நல்லவனாக குடும்பத்தினரையும் நண்பர்களின் நம்ப வைப்பார்கள்... இவர்கள் தன்னுடைய சுய திறமை பற்றாக்குறை என்பதை உணர மாட்டார்கள்... அப்படி உணரக்கூடிய சந்தித்தால் அவர்களை ஏளனமாக பார்த்துவிட்டு தனக்கு சாதகமாக உள்ளவர்களை மட்டுமே நட்பாக்கிக் கொள்வார்கள் அவர்களுக்கு மாற்றமான விலை விட்டு விலகி விடுவார்கள் இது அவர்களின் உளவியல் கோளாறு...



பிறந்ததிலிருந்து தன்னையறியாமல் சேர்த்து வைக்கப்பட்ட பிரச்சனைக்கு ஒரு வரியில் ஒரு வார்த்தையில் தீர்வைத் தேடுவது மனக் கோளாறின் மாற்று வடிவம்... 


MSK Muhaiyuddin, Founder & CEO, MSK Life Clinic Foundation


Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்