Posts

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

Image
 எவ்வாறு உளவியல் ரீதியாக சமூக மக்களை இயக்கும் தனிமனித சக்தியாக உருவெடுப்பது இது அனைவருக்கும் உண்டான கேள்வி. இதற்கான பதில்... ஒரு வரியில் முடிந்து விடாது .. ஒரு வருடத்தில்... முடிந்து விடாது.... நடக்கும் வரை தொடர வேண்டும் சக்தி பெறும்வரை சக்தியூட்டும் செயல்களை மக்களில் இருந்து மாறுபட்டு மக்களால் செய்ய முடியாத அளவு செய்ய வேண்டும்... அவமானங்களை அதிகமாக சந்தித்து அதன்மூலம் பலத்தை தாங்கும் திறனை பல மடங்கு அதிகரிக்க வேண்டும்... எப்பொழுதெல்லாம் உடல் தாங்கும் சக்தியை இழந்து விடுகிறது அப்பொழுதெல்லாம் உளவியல் நிபுணரின் சக்தியூட்டும் செயல்களை கேட்டுப் பெற வேண்டும்.. அதுமட்டுமல்லாமல் சக்தியூட்ட செயல்களை உளவியல் நிபுணரின் மேற்பார்வையில் அடிப்படையில் செய்ய வேண்டும்.... இப்படிச் சொன்னாள் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும்... நான் ஏன் உளவியல் நிபுணரின் ஆலோசனையில் செய்ய வேண்டும் என தோன்றும்.... உங்களுக்கு இதய பிரச்சினை வந்துவிட்டால் நீங்கள் இந்த கேள்வியை கேட்க முடியுமா நான் என் இதயம் மருத்துவர்களின் வழிகாட்டல் அடிப்படையில் ஆலோசனை அடிப்படையில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது உணர்வுகளை எவ்வாறு எடுத்துக்

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

Image
பெரும்பாலான மனிதர்களுக்கு ஒத்துப் போவதில்லை - வேற்றுமை ஏற்படுகிறது என்கின்ற கருத்து ரீதியான சச்சரவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனுடைய உளவியல் பாதிப்பாக வார்த்தை அழுத்தம், செயல் அழுத்தம், சிந்தனை அழுத்தம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. முடிவில் விலகுதல் நிகழ்கிறது! இதற்கான உறவியல் - உளவியல் காரணங்களை எம் எஸ் கே கோட்பாட்டின் அடிப்படையில் சிந்தித்தால் அவை பெரும்பாலும் செயல் அர்த்தம் சொல் அர்த்தம் என்கின்ற முரண்பாட்டின் அடிப்படையிலேயே உருவாகிறது. ஆகவே ஒருவரிடத்தில் மொழி ரீதியாக தொடர்பு கொள்ளும்பொழுது நாம் பயன்படுத்தும் சொல் அவர்களுடைய சமூகப் பயன்பாட்டில் எந்த வகையான அர்த்தங்களைக் கொண்டுள்ளது என்பதை கவனித்துக் கொண்டுதான் அந்த சொல்லை உரையாடலில் எழுத்தில் பேச்சில் உபயோகப்படுத்த வேண்டும். அப்படி ஒவ்வொரு நபர்கள் இடத்தில் பேசுவதற்கு தகுந்த சூழல் இல்லை எனில் சாதாரணமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி அவர்களுடைய மனதில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எம் எஸ் கே உலகியல் கோட்பாட்டின்படி ஒவ்வொரு மனிதனும் தனித்தனி சொல்லாடல் சொல்லிலக்கணம் சொல்பொருள் சொல்லின் செயல் அர்த்தம் இவற்றை தனித்தனியான மு

குவாலிட்டி ஆப் லைப் (Quality of Life)

Image
தரம் தகுதி குறைவாக உள்ளவர்களை தரமுள்ள தகுதியுள்ள மனிதர்களிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்தால்... அந்த தரம் குறைந்த தகுதி குறைந்த மனிதர்கள் சாரம் மிகுந்த சாரம் அதிகமுள்ள மனிதர்களை தன்னுடைய தரத்தின் அளவிலேயே எடை போடுவார்கள் அவர்களுடைய மதிப்பை அவர்களுடைய சுய அனுபவத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடுவார்கள்.. இதனால் பாதிப்பு யாருக்கு என்றால் இந்த தரம் குறைந்த மனிதர்களை தரமிக்க மனிதர்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்த அந்த நபர் தான் பாதிக்கப்படுவார்.... சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தரம் குறைந்த மனிதர்கள் தரம் குறைந்த மனிதனோடு சேர்வார்கள்... தரம் குறைந்த மனிதர்கள் சிறந்த மனிதர்களை தரம் குறைவாக பார்ப்பார்கள். இவர்களை யார் அறிமுகப்படுத்தி வைத்தார்களோ அவர்களும் தரம் குறைந்தவர்கள் தான்... எப்படி எனில் அறிமுகம் செய்து வைத்த நபர் சரம் உள்ள மனிதராக இருந்தால் இந்த தரமற்ற மனிதர்களோடு அவர் இணைந்து இருக்க மாட்டார்... நெருங்கிய உறவாக இருந்தாலும் அறிவு வேறு மதிப்பு வேறு நடத்தை வேறு என்பதை புரிந்து தரமற்ற மனிதர்களை தரமுள்ள மனிதர்களிடத்தில் அறிவும் செய்து வைக்க மாட்டார்கள்.... இதைத்தான் குவாலிடி ஆஃ லைஃப் என்று உள

நல்லவன் தோல்வி அடைகிறான்! கெட்டவன் வெற்றி அடைகிறான்!! இதற்கான உளவியல் காரணம்

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!  நல்லவன் தோல்வி அடைகிறான்! கெட்டவன் வெற்றி அடைகிறான்!! நல்லவன் தோல்வி அடைந்ததற்கு உளவியல் காரணம், அவனுக்கு ஒற்றை வழியில் மட்டுமே சிந்திக்க பழக்கப் படுத்தப் பட்டுள்ளது. மாற்று வழிகளில் சிந்திப்பது தவறு என புகட்டப்பட்டுள்ளது. ஆனால் கெட்டவனுக்கு எந்தவிதமான வழிமுறையும் கிடையாது. விதிமுறையும் கிடையாது. அவன் நம்புவதும் இல்லை. அவன் அதை அடைவதற்கு சூழ்ச்சியாக இருந்தாலும் சரி, வீழ்ச்சியாக இருந்தாலும் சரி, ஒற்றை நோக்கத்திற்காக பலவழிகளில் போராடுகிறான். இதில் முக்கியமான விஷயம் அவன் கடவுளை நம்புவதில்லை. நன்மை தீமை கணக்கு போடுவது இல்லை. அவ்வாறு சொல்பவர்களை தன் கூட வைத்துக் கொள்வதும் இல்லை. அவனது நோக்கம் அடைவதுதான். ஆகவேதான் கெட்டவன் உயர்கிறான். உயர்ந்த பின் அவன் நமக்கு கொடுக்கும் அறிவுரை இது. எல்லாம் கடவுள் கொடுத்தது என்னுடைய உழைப்பில் ஒன்றும் இல்லை. எனவே நீங்களும் இதே போல கடவுளை நம்புங்கள் என திசை மாற்றி விட்டு மற்றவர்களை அதே சிந்தனையில் வாழ வைத்து விடுகிறான். இவன் மாற்றுச் சிந்தனைகள

அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கான உளவியல் காரணம்

Image
அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அதை பெருமையாக நான் கூலி வேலைக்கு உங்களை அனுப்புகிறேன், கூலி வேலைக்கான வேலை செய்திகளுக்கான பயிற்சிகள் தருகிறேன் என்று சொல்கிறவர்களும்… ஒரு நிறுவனத்தின் கூலிக்காரர்கள் என்பதை கூலி வேலைக்குப் போகக் கூடியவர்கள் தெரியாமல் இருப்பதுதான்.. அவர்களுடைய இன்றைய மனப்பாட தேர்வின் அறிவு நிலை! பெற்றோர் கூட தன்னுடைய குழந்தைகள் பெரிய பண்ணையில் வேலை செய்கின்றன… நல்ல கூலி கொடுக்கிறார்கள்… அவ்வப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று கூலி வேலைக்கான பயிற்சி கொடுக்கிறார்கள்… என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்! ஆனால் அனைவருமே அந்த கூலிவேலை நிறுவனத்தை உருவாக்கியவர் எப்படிப்பட்ட அறிவு பெற்றவர் என்று யோசிக்கும் அறிவு அற்றவர்களாகவே இருக்கின்றனர்.  அதைப்பற்றி பேசினால் உடனடியாக உலகத்திலுள்ள அனைவரும் முதலாளியாக ஆக முடியுமா… முதலாளி முதலாளி தான்…. கூலிக்காரன் கூலிக்காரன் தான்… என்று சொல்வதில் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். தொழில் நிறுவனங்களில் மட்டுமல்ல… கல்வி நிறுவனங்களிலும் இப்படித்தான் பழக்கப் படுத்தப் படுகின்றனர். உதாரணமாக ஒரு கல்வி நிறுவனம் ஒ