Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

பெரும்பாலான மனிதர்களுக்கு ஒத்துப் போவதில்லை - வேற்றுமை ஏற்படுகிறது என்கின்ற கருத்து ரீதியான சச்சரவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனுடைய உளவியல் பாதிப்பாக வார்த்தை அழுத்தம், செயல் அழுத்தம், சிந்தனை அழுத்தம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. முடிவில் விலகுதல் நிகழ்கிறது!

இதற்கான உறவியல் - உளவியல் காரணங்களை எம் எஸ் கே கோட்பாட்டின் அடிப்படையில் சிந்தித்தால் அவை பெரும்பாலும் செயல் அர்த்தம் சொல் அர்த்தம் என்கின்ற முரண்பாட்டின் அடிப்படையிலேயே உருவாகிறது.

ஆகவே ஒருவரிடத்தில் மொழி ரீதியாக தொடர்பு கொள்ளும்பொழுது நாம் பயன்படுத்தும் சொல் அவர்களுடைய சமூகப் பயன்பாட்டில் எந்த வகையான அர்த்தங்களைக் கொண்டுள்ளது என்பதை கவனித்துக் கொண்டுதான் அந்த சொல்லை உரையாடலில் எழுத்தில் பேச்சில் உபயோகப்படுத்த வேண்டும். அப்படி ஒவ்வொரு நபர்கள் இடத்தில் பேசுவதற்கு தகுந்த சூழல் இல்லை எனில் சாதாரணமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி அவர்களுடைய மனதில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.


எம் எஸ் கே உலகியல் கோட்பாட்டின்படி ஒவ்வொரு மனிதனும் தனித்தனி சொல்லாடல் சொல்லிலக்கணம் சொல்பொருள் சொல்லின் செயல் அர்த்தம் இவற்றை தனித்தனியான முறையில் அர்த்தமாக அறிவாக மனதில் சேகரித்துக்கொண்டு அதனடிப்படையிலேயே தங்களுடைய வாழ்நாளை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். ஆகவே இதுபோன்ற சூழ்நிலையில் சமநிலைச் சொற்களை தொடர்பு சொற்களை மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கருத்தாழமிக்க சொற்களை தொடர்புபடுத்தி பேச்சு வழக்கை உருவாக்கிய தவிர்த்துக்கொள்ள வேண்டும்.


இந்த சொல்லாடல் உலகில் நுட்பத்தின் படி ஒவ்வொரு தனிமனிதனும் தனிமனிதன் அல்லது நிறுவனம் அல்லது சமூகம் இவற்றை கையாளும் திறனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே எங்களுடைய எம் எஸ் கே லைஃப் தே பவுண்டேஷன் சொல்லாடலில் சொற்பயன்பாடு சொல்லாக்கம் சொல் செயல் விதி இவற்றை உருவாக்கி உள்ளது.

ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்ற வார்த்தை அமைப்பும் விவரிக்கும் வைத்துள்ளார்கள். அந்த சொல் அந்த வார்த்தை அமைப்பு யார் வெளிப்படுத்துகிறார்கள் அந்த சொல் அமைப்பு வார்த்தை அமைப்புகளை மட்டுமே ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்... தான் பழக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட சொல் வெளிப்படுத்தும் வாணி வார்த்தை அமைப்பு இவைகளுக்கு மாற்றமாக இருந்தால் இவர்களுக்கு பிடித்தமான பொருளை அர்த்தத்தை கொடுக்கக்கூடிய சொல்லாக இருந்தாலும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை அதன் காரணமாகவே பேச்சு சார்ந்த உழவு சார்ந்த முரண்பாடுகள் ஏற்படுகிறது.

ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென வார்த்தை அமைப்பும் விபரிக்கும் முறையையும் மனதில் பதிவாக வைத்துள்ளனர். அவ்வாறு பதி வாக்கப்பட்ட வார்த்தை அமைப்பு சொல்லாடல் சொல் வெளிப்படுத்தும் உணர்ச்சி போன்றவை தன்னுடைய மனப்பதிவு க்கு மாற்றமாக இருந்தாள் அதை நிராகரித்து முரண்பாடாக வேற்றுமை உண்டு உறவு ரீதியாக நட்பு ரீதியாக பிரிவை ஏற்படுத்திக் கொள்கின்றனர்..

இவை மட்டுமின்றி இவர்களுக்கு மாற்றமான சொல்லாடல் சொல்லமைப்பு வாக்கிய அமைப்பு உணர்ச்சி அமைப்பு இவை சமூகத்தின் முன்பு பிறரால் வெளிப்படுத்தும் பொழுது அது மிகப்பெரிய சமூக சிக்கலை உருவாக்கி மிகப்பெரிய சண்டை சச்சரவுகளை உடலளவிலான தாக்குதலை ஏற்படுத்தும் அளவு வார்த்தை அமைப்பு தூண்டிவிடுகிறது.. இரு குடும்பத்தினருக்கும் நிர்வாகத்திற்கும் தனிமனிதனுக்கும் இன்னும் சொல்லப்போனால் நாட்டிற்கும் முழு உலகத்திற்கும் பொருந்தும்.



ஆகவே ஒவ்வொரு தனிமனிதனும் கரு காலத்திலிருந்து அதாவது கருவுற்ற காலத்தில் இருந்து தற்சமயம் நிகழ்காலம் வரை எந்தெந்த வார்த்தை அமைப்புகள் சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தார்களோ அல்லது அவர்களுக்கு அவ்வாறு உருவாக்கப்பட்டதோ அந்த சொல்லாடல் வாக்கிய அமைப்பு மட்டுமே அவர்கள் நினைத்த அடுத்த படி எடுத்துக் கொள்ளப்படுகிறது. இவற்றிற்கு மாற்றமாகும் அதே பொருளில் இருந்தாலும் அவை முரண்பாடாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.


இந்த சொல்லாடல் காரணமாகவே ... காதலர்களாக இருந்தவர்கள் பிரிந்து விடுகின்றனர்.. சிலர் திருமணமான பின் வெறுப்புக் உள்ளவர்களாக வெறுப்பவர்காக மாறிக்கொண்டு பிரிந்து விடுகின்றனர்..

ஆகவே ஒவ்வொரு தனிமனிதனும் பேச்சு திறன் வார்த்தை திறன் உணர்ச்சியை வெளிப்படுத்தும் திறன் இவற்றை முறைப்படுத்த எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன் டாக்கிங் இன்ஃப்ளூயன்சி.. டாக்கிங் பிசினஸ். கார்ப்பரேட் கம்யூனிகேஷன்.. கப்பில்ஸ் கம்யூனிகேஷன் போன்ற சிறப்பு பேச்சு தொடர்பான உளவியல் ஆலோசனை சிகிச்சை வழிகாட்டலை வழங்கி வருகிறது.


ஆகவே ஒவ்வொரு தனிமனிதனும் தனித்தனி மென்பொருள்கள் என்கின்ற சொல் பொருட்கள் சொல் குறியீடு குறியீடான வார்த்தை அமைப்புகள் இவற்றின் மூலம் பதி வைக்கப்பட்டு அவனை அறியாமல் இயக்கப்பட்டு கொண்டிருக்கிறான் ஆகவே தனிமனித இயக்கத்தை மாற்றியமைக்க ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உளவியல் சார்ந்த அணுகுமுறை செயல்முறை இயக்குமுறை இவற்றை கற்றுக் கொள்வது அவசியம்

 அதற்காக எங்களுடைய நிறுவனம் சமூக தொடர்பியல் தனிமனித தொடர்பியல் குடும்ப கணவன் மனைவி தொடர்பியல் குழந்தை தொடர்பியல் போன்றவற்றுக்கான உளவியல் ஆய்வு உளவியல் பகுப்பாய்வு உளவியல் கண்டறிதல் உளவியல் திறன் மேம்பாடு இவற்றை கல்வித் துறையிலிருந்து கார்ப்பரேட் நிறுவனம் வரை உடல்நலம் மேம்பாட்டில் இருந்து உடல் நோயை குணப்படுத்துவது செய்துவருகிறது.

Kind Attention 

"உளவியல்"சார்த்த கட்டுரையையும், புத்தகங்களையும் படித்து விட்டு இவ்வளவு தான் "உளவியல்" என்று முடிவு செய்து விடுகின்றனர். "உளவியல்" (தகவல் என்பது வேறு) (சிகிச்சை அளிப்பது (என்பது வேறு) தகவலை அனைவரும் தெரிந்து கொள்ளலாம் ஆனால் "உளவியல்" சிகிச்சை அளிப்பதற்கு (உளவியல் சிகிச்சை நிபுணர் தான் தேவை) என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.


MSK Muhaiyuddin, Founder & CEO, MSK Life Clinic Foundation


Comments

Popular posts from this blog

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்