Posts

Showing posts from February, 2022

நல்லவன் தோல்வி அடைகிறான்! கெட்டவன் வெற்றி அடைகிறான்!! இதற்கான உளவியல் காரணம்

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!  நல்லவன் தோல்வி அடைகிறான்! கெட்டவன் வெற்றி அடைகிறான்!! நல்லவன் தோல்வி அடைந்ததற்கு உளவியல் காரணம், அவனுக்கு ஒற்றை வழியில் மட்டுமே சிந்திக்க பழக்கப் படுத்தப் பட்டுள்ளது. மாற்று வழிகளில் சிந்திப்பது தவறு என புகட்டப்பட்டுள்ளது. ஆனால் கெட்டவனுக்கு எந்தவிதமான வழிமுறையும் கிடையாது. விதிமுறையும் கிடையாது. அவன் நம்புவதும் இல்லை. அவன் அதை அடைவதற்கு சூழ்ச்சியாக இருந்தாலும் சரி, வீழ்ச்சியாக இருந்தாலும் சரி, ஒற்றை நோக்கத்திற்காக பலவழிகளில் போராடுகிறான். இதில் முக்கியமான விஷயம் அவன் கடவுளை நம்புவதில்லை. நன்மை தீமை கணக்கு போடுவது இல்லை. அவ்வாறு சொல்பவர்களை தன் கூட வைத்துக் கொள்வதும் இல்லை. அவனது நோக்கம் அடைவதுதான். ஆகவேதான் கெட்டவன் உயர்கிறான். உயர்ந்த பின் அவன் நமக்கு கொடுக்கும் அறிவுரை இது. எல்லாம் கடவுள் கொடுத்தது என்னுடைய உழைப்பில் ஒன்றும் இல்லை. எனவே நீங்களும் இதே போல கடவுளை நம்புங்கள் என திசை மாற்றி விட்டு மற்றவர்களை அதே சிந்தனையில் வாழ வைத்து விடுகிறான். இவன் மாற்றுச் சிந்தனைகள

அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கான உளவியல் காரணம்

Image
அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அதை பெருமையாக நான் கூலி வேலைக்கு உங்களை அனுப்புகிறேன், கூலி வேலைக்கான வேலை செய்திகளுக்கான பயிற்சிகள் தருகிறேன் என்று சொல்கிறவர்களும்… ஒரு நிறுவனத்தின் கூலிக்காரர்கள் என்பதை கூலி வேலைக்குப் போகக் கூடியவர்கள் தெரியாமல் இருப்பதுதான்.. அவர்களுடைய இன்றைய மனப்பாட தேர்வின் அறிவு நிலை! பெற்றோர் கூட தன்னுடைய குழந்தைகள் பெரிய பண்ணையில் வேலை செய்கின்றன… நல்ல கூலி கொடுக்கிறார்கள்… அவ்வப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று கூலி வேலைக்கான பயிற்சி கொடுக்கிறார்கள்… என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்! ஆனால் அனைவருமே அந்த கூலிவேலை நிறுவனத்தை உருவாக்கியவர் எப்படிப்பட்ட அறிவு பெற்றவர் என்று யோசிக்கும் அறிவு அற்றவர்களாகவே இருக்கின்றனர்.  அதைப்பற்றி பேசினால் உடனடியாக உலகத்திலுள்ள அனைவரும் முதலாளியாக ஆக முடியுமா… முதலாளி முதலாளி தான்…. கூலிக்காரன் கூலிக்காரன் தான்… என்று சொல்வதில் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். தொழில் நிறுவனங்களில் மட்டுமல்ல… கல்வி நிறுவனங்களிலும் இப்படித்தான் பழக்கப் படுத்தப் படுகின்றனர். உதாரணமாக ஒரு கல்வி நிறுவனம் ஒ

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். ஆனால் உண்மை என்கின்ற சரியான நடப்பைப் பேசுபவர்கள் தோல்வி அடைகின்றனர். இதற்கு உளவியல் காரணம் என்ன? இந்த உளவியல் காரணத்தை புரிந்து கொள்ளாமல் பலர் கடவுளின் செயல்… கடவுள் ஏன் என்னை தண்டிக்கிறார்… பொய்யான அவர்களுக்கு வளத்தை கொடுக்கிறார்… உண்மையான எனக்கு ஏன் தோல்வியை கொடுக்கிறார்… என்று தன்னையும், கடவுளையும் நொந்து கொள்கின்றனர்.  உண்மையில் பொய் பேசக்கூடியவர்கள் ஒரு செயலுக்காக பலவழிகளில் சிந்திக்கின்றனர். பேசும்பொழுது எந்த வார்த்தையை எப்படி வலிமையோடு சொல்லவேண்டும், வலிமையோடு வார்த்தைகளை வெளிப்படுத்தும் போது என்ன உணர்வு எந்த உடல் அசைவில் வெளிப்படுத்த வேண்டும் என்பதை மனதுக்குள் பலமுறை ஒத்திகை பார்க்கின்றனர். ஆனால் உண்மையை சொல்பவருக்கு தான் சொல்வது உண்மைதான் என்ற ஒற்றை சிந்தனையினால் வேறு எதைப்பற்றியும், வார்த்தை அளவிலும் வெளிப்பாடு அளவிலும் கூட சிந்திக்க தெரிவதில்லை… தெரிந்தாலும் சிந்திப்பது இல்லை.  இவர்களுடைய செயல்பாட்டுக்கு கடவுளை க

வழிபடுவதா? விஞ்ஞானத்தை நம்புவதா? உளவியல் விளக்கம்!

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! எம் எஸ் கே உளவியல்.. இது எங்களுடைய நவீன உளவியல் கோட்பாடு!  இந்த எம் எஸ் கே நவீன உளவியல் – உலகியல் கோட்பாடானது, மனிதனுடைய செயல்பாடு ‘மனம்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் முடித்துக் கொள்வதை தாண்டி, அந்த மனம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் செயல்பாடான இணை மையம் என்ன என்பதை விளக்குகிறது. ஒரு மனிதனுடைய மூளை என்பதில் என்னென்ன செயல்பாட்டுகள் உள்ளன என்பது போலவே மனம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எது செயல்பாடாக – செயல் ஊக்கியாக – செயல் நினைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது இந்த எம் எஸ் கே நவீன உளவியல்!  எம் எஸ் கே என்பது மைண்ட் செட் நாலேஜ் என்பதன் சுருக்கம்தான். தமிழில் மன பதிவு சார் அறிவு என்று குறிப்பிடுகிறோம். இந்த எம் எஸ் கே நவீன உளவியல் கோட்பாட்டின்படி மனம் என்பது அறிவு என்பதனுடைய தொகுப்பாகும். இந்த அறிவு, உயிரினம் கருவுற்றிருக்கும் சமயத்தில் தன்னுடைய பதிவு நிலையை துவக்கி, தொடர்ந்து அந்த உயிரினத்தின் வாழ்நாள் எல்லை வரை தொடர்கிறது… இந்த பதிவை மையமாக வைத்து வாழ்க்கையில் அனைத்து முடிவுகளும

அனைவரும் உங்களை புறக்கணிக்கிறார்களா? உங்களுக்கானஅரவணைப்பை அறியுங்கள்.

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!  யாரோ உங்களைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறீர்கள் ? யார் உங்களைப் புறக்கணித்தால் என்ன? இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உங்களைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது சூரியனோ, சந்திரனோ… என்றாவது உங்களைப் புறக்கணித்துத் தன் ஒளியை தர மறுத்ததுண்டா? இயற்கை உங்களை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. உங்கள் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீங்கள் மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறீர்கள்..  உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாருங்கள் அது மனதின் வேலை. உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உங்களைப் புறக்கணிப்பதுண்டு. நீங்களும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு. எல்லாப் புறக்கணிப்புகளும் உங்களுக்கு வலியைத் தருவதில்லை. இயற்கையில் உயர்வு-தாழ்வு ஏதுமில்லை. சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.ஆக இப்போது உங்களுக்குத் தேவை சமநோக்குப் பார்வை.  Mind Set Knowledge (MSK) பயிற்சியினை செய்யுங்கள். இயற்கையை நேசியுங்கள்.

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!   ‘மனஅழுத்தம்’ என்பது இப்பொழுது வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுகிறது! இதற்கு காரணம் கண்டறிவதை விட அதை குணப்படுத்துவது தான் சிறந்த வழி என்று சொல்கிறது மனோதத்துவம்!! பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்திற்கு ஒரே ஒரு நாளில் தீர்வு வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்…  ஆனால் இந்த மன அழுத்தம் ஏற்படுவதற்கு எத்தனை ஆண்டுகாலம் ஆகி இருக்கும்? அல்லது எத்தனை ஆண்டு கால வாழ்வியல் பிரச்சினைகள், தொழில் சார்ந்த பிரச்சினைகள், குடும்பம் சார்ந்த பிரச்சினைகள், நட்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பணம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முயல்வதில்லை! ஆகவே ‘மன அழுத்தம்’ என்பது பல ஆண்டுகால பிரச்சினைகளின் வெளிப்பாடு என்பதால் இதனை உடனடியாக தெரிந்து கொள்ள முடிவதில்லை.  ஆனால் இதை மருந்தில்லா மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும். இது குணமாகும் கால அளவு என்பது மன அழுத்தம் உருவான கால அளவு, அது எத்தனை மாதங்களாக அல்லத