அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கான உளவியல் காரணம்

அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அதை பெருமையாக நான் கூலி வேலைக்கு உங்களை அனுப்புகிறேன், கூலி வேலைக்கான வேலை செய்திகளுக்கான பயிற்சிகள் தருகிறேன் என்று சொல்கிறவர்களும்… ஒரு நிறுவனத்தின் கூலிக்காரர்கள் என்பதை கூலி வேலைக்குப் போகக் கூடியவர்கள் தெரியாமல் இருப்பதுதான்.. அவர்களுடைய இன்றைய மனப்பாட தேர்வின் அறிவு நிலை!



பெற்றோர் கூட தன்னுடைய குழந்தைகள் பெரிய பண்ணையில் வேலை செய்கின்றன… நல்ல கூலி கொடுக்கிறார்கள்… அவ்வப்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று கூலி வேலைக்கான பயிற்சி கொடுக்கிறார்கள்… என்று பெருமைப் பட்டுக் கொள்கின்றனர்! ஆனால் அனைவருமே அந்த கூலிவேலை நிறுவனத்தை உருவாக்கியவர் எப்படிப்பட்ட அறிவு பெற்றவர் என்று யோசிக்கும் அறிவு அற்றவர்களாகவே இருக்கின்றனர். 



அதைப்பற்றி பேசினால் உடனடியாக உலகத்திலுள்ள அனைவரும் முதலாளியாக ஆக முடியுமா… முதலாளி முதலாளி தான்…. கூலிக்காரன் கூலிக்காரன் தான்… என்று சொல்வதில் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். தொழில் நிறுவனங்களில் மட்டுமல்ல… கல்வி நிறுவனங்களிலும் இப்படித்தான் பழக்கப் படுத்தப் படுகின்றனர். உதாரணமாக ஒரு கல்வி நிறுவனம் ஒரு முதன்மை கூலியை வேலைக்கு வைத்துள்ளது என்று சொன்னால் அந்த கூலிக்காரன் தனக்கு கீழ் உள்ள கூலி காரரை கீழ் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும் என்று கடுமையான வேலை கொடுக்கிறார். கூலியை குறைத்து கொடுக்கிறார். 



நான் ஒரு கூலி என்பதை மறந்து, தன்னுடைய முதலாளியிடத்தில் இவர்களுக்கு குறைந்த கூலி கொடுத்தால்தான் நம்மிடத்தில் தொடர்ந்து வேலை செய்வார்கள் என்று முதலாளி இடத்தில் சொல்லும்பொழுது முதலாளி அதை புரிந்து கொள்கிறார். அதனால் தான் முதன்மை கூலியாக உள்ள உன்னை குறைந்த கூலிக்கு நான் வைத்துள்ளேன் என்று மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொள்கிறார்! இன்னும் விளக்கமாக சொன்னால் இந்த முதன்மை கூலி என்பவர் குளிரூட்டப்பட்ட அறையில் கண்காணிக்கிறார். கடைநிலை கூலி என்பவர், அந்த நிறுவனத்தின் எல்லை பகுதியில் நுழைவாயிலில் நின்றுகொண்டு அவரும் முதலாளி இட்ட கட்டளையை தெளிவாக செய்கிறார். 



ஆகவே இந்த உலகத்தில் படித்தவர்கள் கூலியாக இருப்பதற்கும், படிக்காதவர்கள் கூலி கொடுக்கும் நிலையில் இருப்பதற்கும், ஒரு மெல்லிய வித்தியாசம் உள்ளது. அதுதான் மனப்பாட தேர்வுமுறை வெற்றிக்கும் செயல்பட்ட தேர்வில் தெளிந்த அறிவு நிலைக்கும் உள்ள வேறுபாடு!! இதை நாங்கள் உளவியல் ரீதியாக மனப்பதிவு சார் அறிவு என்று வகைப்படுத்தி ஒவ்வொருவரையும் கூலி கொடுக்கும் முதலாளி ஆக மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய செயல் நோக்கமாக இருக்கிறது. 



கல்வி என்பது பள்ளிக்கூடத்தில்… கல்லூரியில் சொல்லிக்கொடுக்கும் பாடத்திட்டத்தில் உள்ளது என்று மிக சரியாக (தவறாக) புரிந்து கொண்டதின் விளைவு.. பள்ளிக்கான கல்லூரிக்கான செலவை எவ்வளவு அதிகப்படுகிறதோ, அந்த அளவு அறிவு அதிகமாக கொடுக்கப்படும் என்று பெற்றோர்கள் புரிந்துகொண்டு செலவு செய்ய கடன் வாங்குகின்றனர். குழந்தைகளை மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக கேளிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பொழுதுபோக்குக்கு முதலிடம் செய்கின்றனர்.. இதன் விளைவு குழந்தைகள் பள்ளி கல்லூரி படிப்பை ஜாலியான ஒரு வாழ்க்கை என்ற அளவிலே புரிந்து செயல்படுகின்றனர்.. அதனால்தான் எங்களுடைய எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன் சர்வதேச கற்றல் திறன் என்கின்ற உளவியல் வாழ்வியல் மேம்பாட்டு நிறுவனத்தை துவக்கி மிக சிறப்பாக செயலாற்றி வருகிறது. இதன் ஒரு விழிப்புணர்வாக கல்வியைப் பற்றிய வகைகளை விளக்குகிறோம். ஒவ்வொரு மனிதனும் குழந்தை முதல் பெரியவர் வரை ஆற்றல் என்கின்ற செயல்படும் உண்டு சக்தியில் தன்னை அறியாமல் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.. 



நாம் எவ்வாறு இயங்குகிறோம் எந்தத்துறையில் மன உடல் இணைந்து செயல்படுகிறதோ அந்தத் துறைக்கான ஆற்றல் மறைமுகமாக வினையூக்கியாக தூண்டிக் கொண்டிருக்கிறது அதேபோல கல்வி என்பது சிலபஸ் என்கின்ற பாடத்திட்டம் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும் அதன் மூலம் கிடைக்கும் சான்றிதழ் வாழ்க்கையை பணக்காரனாக மாற்றும் என்று இன்றுவரை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது உங்களில் எந்தவிதமான ஆற்றல் செயல்படுகிறது? வளர்ச்சி ஆற்றல் கேளிக்கை ஆற்றல்… கல்வி என்பது… மொழிக்கல்வி பரிட்சை கல்வி கல்விச்சாலை கல்வி அறிவுக் கல்வி அறிவை பயன்படுத்தும் கல்வி அறிவை மேம்படுத்தும் கல்வி அறிவே ஆற்றலாக செயலாற்றும் கல்வி அறிவை பயன்படுத்தி படைப்பாற்றல் ஆக உருவாக்கும் கல்வி சமூகக் கல்வி இசைக் கல்வி பாடல்கள் கல்வி வளர்ச்சி கல்வி பண நிதி உருவாக்கும் கல்வி உணர்ச்சிகளைக் கையாளும் கல்வி உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும் கல்வி மன இயக்கம் ஆரோக்கியத்தை வளர்க்கும் கல்வி இயற்கையை புரிந்து கொள்ளும் கல்வி ஒன்றிணைந்து செயல்படும் சமூக கல்வி இயற்கைபை உணரும் கல்வி பண நிதி உருவாக்கும் 



கல்வி உணர்ச்சிகளைக் கையாளும் கல்வி உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும் கல்வி மன இயக்கம் ஆரோக்கியத்தை வளர்க்கும் கல்வி இயற்கையை புரிந்து கொள்ளும் கல்வி ஒன்றிணைந்து செயல்படும் சமூக கல்வி இயற்கைபை உணரும் கல்வி அரசியல் கல்வி அரசருக்கு உண்டான கல்வி தொழில் கல்வி வியாபார கல்வி தொழில் நிறுவன கல்வி உற்பத்தித் திறன் கல்வி படைப்பாற்றல் கல்வி கேளிக்கை கல்வி கேளிக்கை ரசிக்க வைக்கும் கல்வி விளம்பர கல்வி வாழ்க்கைத் திறன் கல்வி குடும்பவியல் கல்வி குழந்தைக் கல்வி குழந்தை வளர்ப்பு கல்வி குழந்தைகளைக் கையாளும் கல்வி பெற்றோர்களை முறைப்படுத்தும் கல்வி திறன் என்பது சிலபஸ் அல்ல நிபுணர் மூலம் செயல் ஆக்கத்தை உருவாக்கி அதன் ஒவ்வொரு நிலையிலும் தேவையான மாற்றத்தை செயல்திறனை முறையாக உருவாக்குவது ஆகும்… நல்லவை நல்லவர்கள் ஜெயிப்பார்கள் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்து செயலாற்றலை தடுத்து நிறுத்தும் மறைமுக நச்சு ஆற்றல்தான் நல்லவை ஜெயிக்கும் என்று…. அடிக்கடி சொல்லப்பட்டு நல்லவை என்ற எண்ணத் அளவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. 



அந்த எண்ணத்தை தாண்டி அதற்கு அப்பால் செயலாக உருமாற்றம் செய்ய தடை ஏற்படுத்தப்பட்டு அதே நிலையில் நிலைப் படுத்தப்படுகிறது ஆனால் உண்மையில் எண்ணம் என்ற முதல் படியை தாண்டி செயலாக்கம் என்ற பல்வேறு படிநிலைகளை முறைப்படி கடந்துதான் செயல் உருவம் பயன்பாடு என்பதை அடைய முடியும் தாவர இயற்கை விதிப்படி நல்லதை வளர்த்த நல்ல தாவரத்தை வளர்த்த அதீத பாதுகாப்பு அதிக கவனம் போன்றவற்றை தினம் தினம் செய்து கொண்டிருக்க வேண்டும் ஆனால் கெட்ட வியை வாழ்ந்த எதுவும் தேவையில்லை தானாக வளர்ந்துவிடும் வறட்சியைத் தாங்கும் மழை இல்லாமல் வாழும் அழித்தாலும் அழியாது.



ஒரு இசையமைப்பாளர்… அவர் எடுத்த பாடலின் கருத்து, அந்த பாடல் நிகழும் இடம், அந்த பாடலுக்கான கதாநாயகன்- கதா நாயகி அவர்களின் நடத்தை இயல்புகள் போன்றவற்றோடு அந்த பாடலுக்கு சூழலுக்கு அல்லது சூழலை வெளிப்படுத்தும் இசை கருவிகள் அந்த கதையை சூழலுக்கேற்ப புறச் சூழலுக்கு ஏற்ப குரல் அமைப்பு இவற்றை முழுமையாக புரிந்து உணர்ந்து உள்வாங்கி அவற்றை பாடலின் மூலம் அல்லது பாடலின் உள் வைத்தல் அந்த இசையை முழு வடிவமாக மாற்றுகிறார்.. அதேபோல ஒரு மாணவன் அல்லது தொழிலதிபர் இவர்கள் செயலை முழுமையாக உணர்ந்து புரிந்து அதற்கேற்ப மனதளவில் தன்னை தயார்படுத்தி உழைத்தால் மட்டுமே முடிவை வெற்றியாக மாற்ற முடியும் இதற்காகத்தான் எங்களின் எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன் சர்வதேச கற்றல் என்ற திறன் மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது.. படித்தல் என்ற செயல்உருவாகுவதற்கான அனைத்தும் உளவியல் சமூகவியல் ஆய்வு அடிப்படையில் ஒரு தனி மனிதனையும் நிறுவனத்தையும் மாற்றி வருகிறது.



பயிற்சி மையம் தேவையா 
படிப்பு மையம் தேவையா

டியூசன் சென்டர் தேவையா
லெனிங் என்ற கற்றல் சென்டர் தேவையா

அறிவை புரிந்து கொள்ள ஆயிரம் நாட்கள்

அறிவை மாற்ற 1000 நாட்கள்

அறிவை திருத்தி அமைக்க ஆயிரம் நாட்கள் 

அறிவை செயலாக உருமாற்றம் செய்து பலனை பயன்படுத்த 1000 நாட்கள்




மனப்பாடம் இல்லாத சிந்திக்கக்கூடிய செயல்படுத்தக்கூடிய கற்றலை உருவாக்க, சர்வதேச கற்றல் திறன் மற்றும் மேலாண்மையை உருவாக்கி வருகிறோம். எங்களுடன் இணையுங்கள்/

MSK முகயுதீன் எம் எஸ் கே லைப் கிளீனிக் பவுண்டேசன் 
தொலைபேசி: +91 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்