உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!




உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். ஆனால் உண்மை என்கின்ற சரியான நடப்பைப் பேசுபவர்கள் தோல்வி அடைகின்றனர். இதற்கு உளவியல் காரணம் என்ன? இந்த உளவியல் காரணத்தை புரிந்து கொள்ளாமல் பலர் கடவுளின் செயல்… கடவுள் ஏன் என்னை தண்டிக்கிறார்… பொய்யான அவர்களுக்கு வளத்தை கொடுக்கிறார்… உண்மையான எனக்கு ஏன் தோல்வியை கொடுக்கிறார்… என்று தன்னையும், கடவுளையும் நொந்து கொள்கின்றனர். 




உண்மையில் பொய் பேசக்கூடியவர்கள் ஒரு செயலுக்காக பலவழிகளில் சிந்திக்கின்றனர். பேசும்பொழுது எந்த வார்த்தையை எப்படி வலிமையோடு சொல்லவேண்டும், வலிமையோடு வார்த்தைகளை வெளிப்படுத்தும் போது என்ன உணர்வு எந்த உடல் அசைவில் வெளிப்படுத்த வேண்டும் என்பதை மனதுக்குள் பலமுறை ஒத்திகை பார்க்கின்றனர். ஆனால் உண்மையை சொல்பவருக்கு தான் சொல்வது உண்மைதான் என்ற ஒற்றை சிந்தனையினால் வேறு எதைப்பற்றியும், வார்த்தை அளவிலும் வெளிப்பாடு அளவிலும் கூட சிந்திக்க தெரிவதில்லை… தெரிந்தாலும் சிந்திப்பது இல்லை. 




இவர்களுடைய செயல்பாட்டுக்கு கடவுளை காரணம் காட்டி கொண்டு தங்களைத் தாங்களே நொந்து கொள்கின்றனர்! இதோடு பொய் பேசக் கூடியவர்கள் பொய்யை பேசும்பொழுது எந்தவிதமான வார்த்தை இடைவெளியும் கொடுப்பதில்லை. வார்த்தைகளை வெளிப்படுத்தும்போது வலிமையோடு வெளிப்படுத்துகின்றனர். அடுத்தவர்கள் பேசுவதற்கு எந்த விதமான இடைவெளியும் கொடுப்பதில்லை. ஆனால் உண்மை பேசுபவர்கள் தாங்கள் பேசுவது மட்டுமே சரி… அதை அடுத்தவர்கள் கேட்டுக் கொள்வார்கள் என்ற எண்ணத்திலேயே காலத்தை நேரத்தை கழிக்கின்றனர் . 



பொய் பேசுபவர் உண்மை பேசுவதில் அவருடைய பொய் வாதத்தை எடுத்து வைக்கும் பொழுது சம்மந்தம் இல்லாத ஒன்றை தொடர்பு படுத்தி பேசக்கூடிய திறமை உள்ளவராக இருக்கிறார். உண்மை பேசக்கூடியவர் நடந்தவற்றை மட்டுமே பேசுகிறார். பொய் பேசுபவர் மாற்றி கூறும்பொழுது உண்மை பேசுபவர் இவன் அல்லது இவள் சொல்வது சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என்று சிந்திப்பதில் நேரத்தை வீணாக்குவார். இவருடைய வாதத்தை கேட்கக் கூடியவர், இந்த உண்மை பேசக்கூடியவர் அதிக நேரம் இடைவெளி விடுவதால் இது பொய்யான வாதம் என யூகித்துக் கொள்ள வாய்ப்பை இவரே கொடுத்து விடுகிறார். இந்த உலகம் எந்த வார்த்தையை வலிமையாக சொல்கிறாரோ அந்த வார்த்தை மட்டுமே உண்மை. நடந்த உண்மையான விஷயத்தை வலிமை இல்லாமல் ஒற்றை விஷயமாக சொல்லக்கூடியவர்களாக உள்ள அனைவருமே தோல்வி அடைந்து விடுவார்கள். 



இந்த தோல்விக்கு காரணம் கடவுள் என்று இவர்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்… கடவுளை குறை சொல்கிறார்கள்.. ஆனால் இவருடைய திறமையை புரிந்து கொள்வது இல்லை! அதற்கு மேல் இவ்விடத்தில் யாரேனும் கேட்டால் என்னுடைய சூழ்நிலையில் நான் என்ன செய்வதென்று புரியவில்லை என்று சோகத்துடன் சொல்கின்றனர். ஆனால் இதே சூழ்நிலையில் பொய் பேசுபவர் இவர்களுடைய உண்மையை குற்றச்சாட்டின் மூலமாக, புகார் மூலமாக, ஆவேசத்தில் மூலமாக, கோபத்தின் மூலமாக, உணர்ச்சியின் மூலமாக, பொய்மையை பொய்யாக அடுத்தவருக்கு நிரூபித்து விடுகின்றனர். ஆகவே உண்மை என்பது ஆடையில்லா நிர்வாணம்! பொய் என்பது ஆடை அலங்காரத்தோடு வெளிப்படுத்தப்படும் அழகு ஆபரணம்!!



உலகம் நிர்வாணத்தை அலங்கோலமாக பார்க்கும். ஆனால் பொய்யை ஆடை அலங்காரத்தோடு இருப்பதால் அதிசயமாக பார்க்கும். இதுதான் உளவியல் உண்மை. ஆகவே உண்மையைப் பேசுவதற்கு பன்முறை பயிற்சி தேவை! உண்மையை பேசுபவர் பயிற்சி எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை! முயற்சி எடுத்துக் கொள்ளவும் விரும்புவதில்லை. இவர்கள் ‘என்னிடத்தில் உண்மை உள்ளது, எனவே இன்னைக்கு சரியான பலனை கடவுள் கொடுப்பார்’ என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் இவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர். இவர்கள் பேசுவது… இவர்கள் நியாயத்தை எடுத்து வைப்பது… கடவுள் முன் அல்ல! மனிதர் முன் என்பதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். 



மனிதர்களுக்கு தேவை வார்த்தை வலிமை. இடைவெளி இல்லாத பேச்சு. நிறைய நபர்களை தெரிந்ததாக காட்டிக் கொள்ளுதல். தான் ஒரு மிகப் பெரிய மனிதனின் அடியாள்அல்லது தொடர்பில் உள்ளவர் என்பது போல பல்வேறு காரணிகளை வைத்து பொய் சொல்பவர் மதிக்கப்படுகிறார். போரில் வெற்றிபெற போர் கருவிகள் தேவை. பிரச்சனைகளில் வெற்றி பெற வார்த்தைகளைப் பயன்படுத்தும் வெளிப்படுத்தும் உள நுட்பம் தேவை. போர்க் கருவி இல்லா போராளி தோற்றுவிடுவான். பேச்சாற்றல் இல்லாத நியாயவாதி உண்மையானவனாக இருந்தாலும் தோற்றுவிடுவான். 



இதற்கும் கடவுளுக்கும் இயற்கைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொய் பேசுபவன் தன்னுடைய எண்ணத்தை கடினமான முறையில் வலிமை படுத்துகிறான். ஆனால்உண்மையை தெரிந்தவர் அந்த உண்மையை தெளிவாக வலிமையாக எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் இல்லாததால் அவர் பேசும் உண்மையே பொய் போல் பிறருக்கு காட்சி அளிக்கிறது. 



ஆகவே நண்பர்களே உண்மையை வலிமையாக எப்படி சொல்வது, இடைவெளியில்லாமல் பேச்சை எப்படித் துவக்குவது, பேசுவதற்கு முன் மனதளவில் என்னென்ன ஒத்திகைகள் பார்க்கவேண்டியுள்ளது, நினைக்காத ஒன்றை செய்யாத ஒன்றை நடக்காத ஒன்றை பொய் பேசுபவர் பேசும் பொழுது அவற்றிற்கு இடைவெளி இல்லாமல் பதில் கொடுப்பது எப்படி, அந்த பதிலையும் பொய் பேசுவர் காயப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதற்கு என்னென்ன வார்த்தை ஆற்றல் – பேச்சு ஆற்றல்- வெளிப்படுத்தும் ஆற்றல் தேவை என்பதை புரிந்து செயல்பட உளவியல் ஆலோசனை என்பது மிக மிக அவசியம். 



MSK முகயுதீன் Founder & CEO MSK லைப் கிளீனிக் பவுண்டேசன் 
தொலைபேசி: 9360052930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?