நல்லவன் தோல்வி அடைகிறான்! கெட்டவன் வெற்றி அடைகிறான்!! இதற்கான உளவியல் காரணம்

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 




நல்லவன் தோல்வி அடைகிறான்! கெட்டவன் வெற்றி அடைகிறான்!! நல்லவன் தோல்வி அடைந்ததற்கு உளவியல் காரணம், அவனுக்கு ஒற்றை வழியில் மட்டுமே சிந்திக்க பழக்கப் படுத்தப் பட்டுள்ளது. மாற்று வழிகளில் சிந்திப்பது தவறு என புகட்டப்பட்டுள்ளது. ஆனால் கெட்டவனுக்கு எந்தவிதமான வழிமுறையும் கிடையாது. விதிமுறையும் கிடையாது. அவன் நம்புவதும் இல்லை. அவன் அதை அடைவதற்கு சூழ்ச்சியாக இருந்தாலும் சரி, வீழ்ச்சியாக இருந்தாலும் சரி, ஒற்றை நோக்கத்திற்காக பலவழிகளில் போராடுகிறான்.


இதில் முக்கியமான விஷயம் அவன் கடவுளை நம்புவதில்லை. நன்மை தீமை கணக்கு போடுவது இல்லை. அவ்வாறு சொல்பவர்களை தன் கூட வைத்துக் கொள்வதும் இல்லை. அவனது நோக்கம் அடைவதுதான். ஆகவேதான் கெட்டவன் உயர்கிறான். உயர்ந்த பின் அவன் நமக்கு கொடுக்கும் அறிவுரை இது. எல்லாம் கடவுள் கொடுத்தது என்னுடைய உழைப்பில் ஒன்றும் இல்லை. எனவே நீங்களும் இதே போல கடவுளை நம்புங்கள் என திசை மாற்றி விட்டு மற்றவர்களை அதே சிந்தனையில் வாழ வைத்து விடுகிறான். இவன் மாற்றுச் சிந்தனைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதுவே கெட்டவனுக்கு பின் உள்ள உளவியல் நடத்தைகள்! 




எண்ணத்தை எண்ணத்தைக் கொண்டே சரி செய்ய வேண்டும். – MSK Theory

கெட்ட செயல்களில் ஈடுபடக்கூடியவன் யாரையும் பொருட்படுத்துவதில்லை அவனுடைய நோக்கம் வெற்றி அடைவது தான். ஆனால் நல்லவர்கள் என்ற பெயரில் சிலர் நமக்கு எவ்வாறு சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றால், அவன் நன்றாக இருக்கட்டும்.. அவன் அவன் மிக நல்லவன்… நன்றாக இருக்கட்டும் என ஆசிர்வதிக்கும் பொழுது பிரார்த்தனை செய்யும் பொழுது அவனுடைய செயல் அதாவது அவன் செய்துகொண்டு இருக்கும் கெட்ட செயல் வலிமை அடைந்து கொண்டே இருக்கிறது. 




நல்ல செயல்களாக செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தில் இவர்கள் தன்னைத் தானே அழித்துக் கொள்கின்றனர். எப்படி என்றால் கெட்டவனை வாழ்த்தும் பொழுது கெட்டவனை மனதளவில்எதிர்க்காத பொழுது அவன் தன்னுடைய செயலில் வெற்றி அடைந்து கொண்டே இருக்கிறான். இதற்கு உதாரணம் வீட்டில் விஷ ஜந்து வந்துவிட்டது என்றால் அது நல்லது அது ஒரு நல்ல உயிரினம் என்று வழி விட்டால் என்னாகும் அதேபோலதான் கெட்டவனை வாழ்த்துவது என்பது செயலை அதிகப்படுத்துவதற்கு இந்த முரண்பாடான சிந்தனையை புரிந்து கொள்ள நிறைய இடிபாடுகள் வேதனைகள் தேவைப்படுகிறது. 




ஆகவே எதிரியை பலப்படுத்துவதற்கு எதிரி சமூகத்துக்கு எதிரான செயல் தனி நபருக்கு எதிரான செயல் இவற்றை செய்யக்கூடிய நபர்களை எண்ணத்தின் வலிமை கொண்டு தான் அவர்களை அவர்களின் செய்ய பாட்டை குறைக்க முடியும். நல்லது என்ற பெயரில் அமைதியாக இருக்கும் பொழுது அவனுடைய செயல் உச்சநிலை அடைந்து மற்றவர்களை தாழ்ந்த நிலைக்கு தள்ளிவிடுகிறது. இதற்கு ஒரு பழமொழி ஒன்று உண்டு! தீய செயலைக் கண்ட நீங்கள் முதலில் உடலால் உங்களின் கைகளால் தடுங்கள். அப்படி தடுக்க முடியவில்லை என்றால் மனதால்தடுத்து நிறுத்துங்கள். எண்ணங்களின் வலிமை கொண்டு சமூகத்துக்கு தீங்கு இழைக்கக் கூடிய உன்னுடைய எண்ணத்தை எண்ணத்தின் மூலமாகத்தான் வெற்றியடைய முடியும்! 




வைரத்தை வைரத்தை கொண்டு அழிக்க முடியும் என்ற எண்ணத்தைக் கொண்டு தான் எடுக்க முடியும் தடுக்க முடியும் ஒடுக்க முடியும் நீக்க முடியும். எண்ணத்திற்கு மருந்து எண்ணம் தான்! படித்தவன், தான் எந்த செயலை செய்தாலும் அதைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என சிந்திப்பதில் சிக்கலை உருவாக்கி கொள்கிறான். ஆனால் முட்டாள், தான் என்ன செய்ய வேண்டும் என்ன சொல்ல வேண்டும் என்பதை பற்றி மட்டும் சிந்தித்து அதில் தெளிவாக உள்ளான். பிறருடைய எதிர்வினையை யோசிப்பதைவிட தனிமையை மட்டுமே பன்முகத் தன்மையோடு சிந்திக்கிறான். ஆகவே தான் படித்தவன் கல்வி இருந்தும் தோல்வி அடைகிறான். படிக்காதவன் கல்வி இல்லாமல் வெற்றி வருகிறான். அவனிடத்தில் உள்ளது தான் வெற்றி பெறும் கல்வி! இதையே கார்ப்பரேட் அறிவு எனக் கூறுகிறோம். 




ஆனால் பலபேர் ‘கார்ப்பரேட் அறிவு’ என்பதை தவறாக திரித்து அதன் மீது வெறுப்பு கொள்ள வைத்து அதன் பக்கம் அதாவது அந்த அழிவின் பக்கம் யாரும் சென்று விடக்கூடாது என மிகப்பெரிய சுற்றுச்சுவரை ஏற்படுத்தி விடுகின்றனர். ஆகவே இதைப் படித்தவுடன், உங்களுக்கு படிக்காமல் இருப்பது நல்லது தானா… அடிப்பது மோசமா.. என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இங்கேதான் உள்ளது பிரித்து அறிந்து செயல்படும் செயல் அறிவு. நான் எப்படி இதை கையாள வேண்டும் என்பதைவிட நீங்கள் கேட்கும் கேள்வி யோசித்துப்பாருங்கள் தப்பா ரைட்டா என்று கேட்பதிலே காலத்தை கழித்து தங்களைத் தாங்களே அறிவாளிகள் என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்தி வாழ நம்மை பழகியுள்ளனர்.




படிக்காதவர்கள் ஒரு செயலில் தெளிவை ஏற்படுத்திக் கொள்ள அந்த செயல் தெரிந்தவர்களிடத்தில் நுட்பமாக பழகி, அதனுடைய விபரங்களை பணத்தின் மூலம் பெற்றுக்கொள்கின்றனர். உண்மையை சொல்லப் போனால் படிக்காதவர்கள் தான் சரியான நிபுணர்களை பயன்படுத்தி வெற்றிக்கான சூத்திரத்தை விலை கொடுத்து வாங்கி அவர்களையும் தங்களையும் நல்ல நிலையில் வைக்கின்றனர். ஆனால் படித்த உடன் எல்லாம் தெரியும் என்ற மனநோய் உள்ளவர்கள் உண்மை நிலையை மாற்றிக்கொண்டு யாரைப் பற்றியும் யோசிப்பதில்லை… எந்த நிபுணர்களையும் வாழ்க்கைக்கு பயன்படுத்துவதில்லை! 




எண்ணத்தை எண்ணத்தை கொண்டே எண்ணிய பிறகு அழித்து விட வேண்டும். இல்லையென்றால் செயலாக மாறி விட்டு அனைவரையும் சிரமத்துக்கு உள்ளாகி விடும்! – MSK Theory எண்ணங்களைப் பற்றிய விதிகள் ஒருவன் தவறான சமூகத்துக்கும் முரண்பாடான செயல்களை செய்து கொண்டிருக்கிறான் என்றால் அந்த செயலை உருவாக்குவது எண்ணம் தான். அந்த எண்ணத்தை அழிப்பதற்கு நேரான வலிமையான எண்ணத்தை அந்த எண்ணத்தின் மீது அதிக பலத்துடன் பாய்ச்ச வேண்டும். அவனுடைய எண்ணத்தை யாரோ ஒருவர் தடுத்து காப்பாற்றுவார் என்று நம்ப வைப்பதுதான் கெட்ட எண்ணத்தை செயலாக செய்வதன் செயல்பாடு. 




உதாரணமாக இவர்கள் தன்னுடைய தீய செயல்களை தீய எண்ணங்களை சூழ்ச்சியை பிறர் மீது திணிப்பார்கள். மாறாக இன்னொரு இடத்திலிருந்து இது எல்லாம் கடவுள் செய்கிறான் என நம்ப வைப்பார்கள். அப்படி பார்க்கும்போது, இந்த எண்ணத்தை பற்றிய அறிவியல் இல்லாதவர்கள் எண்ணம் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் அவனுடைய செயலை வலிமை படுத்துவதற்காக நமக்கு அமைதியாக இருக்க சொல்லக் கூடிய செயல்களை உண்மை என நம்பி நம் எண்ணத்தால் நம்மை நாமே குறைத்துக்கொண்டு பலவீனப்படுத்துவதாகிவிடும். இதன் விளைவாக சமூக முரண்பாட்டை உருவாக்கக் கூடிய முறையில் எண்ணம் பலம்பெற்று பலரை வேதனை படுத்துவதற்கும் பலரை கஷ்டப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.




ஆகவே எண்ணத்தை அழிப்பதற்கு பலமான எண்ணத்தை பயன்படுத்த வேண்டும். அதுவும் முழு பலத்துடன் பயன்படுத்த வேண்டும். Power of thought Powerful thought Energy of thought Energetic thought எண்ணம் பற்றிய எம் எஸ் கே விதிகள்! ஒருவரை ஒருவர் உடல் பலத்தால் தாக்குகிறார் என்றால் அல்லது அவரை தள்ளுகிறார் அல்லது இழுக்காகின்றார் என்றால் அந்த இழுவிசை க்கும் தள்ளு விசைக்கும் எதிரான அதிக விசையை பயன்படுத்தும் போதுதான் அதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும். இல்லை என்றால் அவரின் விசை நம்மை பலவீனப்படுத்தி விடும். இது போல தான் எண்ணங்களால் செயல் உருவாகின்றது. செயலை செய்யக் கூடியவர்களுக்கு எண்ணம் தான் முதல் காரணம். 




அவருடைய செயலை தடுப்பதற்கு நம்முடைய பானமான எண்ணத்தை உபயோகப்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்த எண்ணத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால் பலர் “அடுத்தவர் செய்வதை தாங்கிக் கொள்… அவனை கடவுள் பார்த்துக் கொள்வார்” என்று நம்முடைய எண்ணத்தை ஆரம்பத்திலேயே பலவீனப்படுத்தி விடுகிறார்கள். சிலர் இதற்கு துணையாக பல கட்டுக்கதைகளை பயன்படுத்தி நம்மை கட்டுக்குள் வைத்து விடுகின்றனர். இதனுடைய விளைவு எண்ணம் பலமுடைய ஒருவன், எண்ணம் இல்லாத ஒருவனை எண்ணத்தால் தாக்கி பின்பு செயலால் தாக்குகிறான். 




ஆகவே தீய எண்ணங்களை நாம் தடுப்பதற்கு அதை விட பலமான எண்ணங்களை உருவாக்கி பலப்படுத்தி அந்த தீய எண்ணத்தை விட வலிமை மிக்கதாக மாற்றி அந்த கெட்ட எண்ணத்தை அளிக்க வேண்டும். இதுதான் எண்ண வலிமை விதி. இதைவிடுத்து அவனுடைய எண்ணத்தை யாரோ ஒருவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்வது அவனுடைய எண்ணத்தை பலப்படுத்தி மற்றொரு எண்ணத்தை பயன்படுத்தும் உத்தி ஆகும். மரத்தை வெட்டுவதற்கு கோடாலி இருந்தாலும், அதை கையாளுவதற்கு அதே மரத்தினால் செய்யப்பட்ட ஒரு மரத்துண்டு தேவைப்படுகிறது. 




அது போலதான் தீய செயல்களை உருவாக்கும் மனிதனுடைய எண்ணத்தை நம்முடைய பலமான எண்ணத்தைக் கொண்டு அழித்துவிட வேண்டும். அப்படி அழித்தால் மட்டுமே அந்த எண்ணம் அவன் மனதை விட்டு நீங்கும். அதனால் சமூகம் காப்பாற்றப்படும். ஆனால் நமக்கோ அந்த எண்ணம் அவனை அழித்துவிடும்… அதுவரை பொறுமையாக இரு… என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு நீண்ட அடி பாட்டுகள் இடிபாடுகள் வேதனைகள் தேவைப்படுகிறது. ஆனாலும் ஒரு சிலருக்கு வேதனைகளையும் விளக்கங்களையும் புரிந்து கொள்ளாமல், பழைய கணக்கிலேயே சொல்லிக்கொடுக்கப்பட்டவற்றை நம்பி நம்பியே இவர்களுடைய தோல்விக்கான காரணத்தை கடவுள் மீது பழி போட்டுவிட்டு தன்னைத் தானே வருத்திக் கொள்கின்ற மனநோயாளியாக மாறுகின்றனர். 




ஆக கெட்ட செயலை செய்பவன் எவனும் மூன்றாம் சக்திகளை நம்புவதில்லை. நன்மை தீமைகளையும் நம்புவதில்லை. அவன் நம்புவதெல்லாம் அவன் எண்ணத்தையும் செயலையும் மட்டும்தான். ஆகவே எதிரி எண்ணத்தை, எண்ணத்தைக் கொண்டே அழித்துவிடுங்கள்! இதில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், உங்கள் வாழ்க்கையை திருப்பி பாருங்கள்… அதில் இருந்து விடையை கண்டு கொள்ள முடிந்தால் கண்டு கொள்ளுங்கள்… இல்லை என்றால் உளவியல் ஆலோசனைக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்! 




நேர் எண்ணங்களும் எதிர் எண்ணங்களும்! நண்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்டார்கள். தவறான செயலில் ஈடுபடுகிறவர்களை வாழ்த்த வேண்டும் என்றுதான் சொல்லிக் கொடுக்கிறார்கள்… அது எப்படி என்று கேட்டார். இதற்கு உதாரணம் ஒரு முள் செடி உள்ளது. அது அனைவருக்கும் தீங்கு இழைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அந்த செடியை வளர்ப்பீர்களா?அல்லது அந்த செடியை அழித்து மக்களுக்கு நலன் செய்வீர்களா? இதை கேட்டபோதுதான் அவர்களுக்கு எண்ணத்தை அது தோன்றும் பொழுது எப்படி அழிப்பது என்று புரிந்தது !மீண்டும் ஒரு உதாரணம் வேண்டுமென்றால், ஒருவருக்கு செல் செயலிழந்து இறந்த செல்கள் ஒன்றிணைந்து நோயை உருவாக்குகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். 




இப்பொழுது நீங்கள் இது ‘நன்றாக இருக்கிறது’ என்றால் என்ன நிகழும்? செல்கள் வளரும் நிலைமை மோசமாகும். இந்த அடிப்படையில் பார்த்தால் இறந்த செல்களை அழிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர அதை பெறுவதற்கு முயற்சி செய்யக்கூடாது… என்பதை புரிய வைத்தோம். இதை ஒட்டியே உங்கள் எண்ணத்திற்கு, எண்ணத்தை வைத்தே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொல்கிறோம். எண்ண மாற்று சிகிச்சை…. எண்ணத்தை வேரறுக்கும் சிகிச்சை என்று இரண்டு வகைகள் உள்ளன. தீய எண்ணத்தை அதைவிட கடுமையான எண்ணத்தை வைத்துதான் அழிக்க முடியும்.




வலிமையான யானை தாக்கி வருகிறது என்றால் வலிமையான சுவர்களை எழுப்ப வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால் அதன் வலிமை அடுத்தவர்களை அழித்துவிடும். ஆகவே தீய எண்ணத்தை அழிப்பதற்கு பலம் பொருந்திய, பலம் மிகுந்த வலிமையுள்ள எண்ணத்தை உருவாக்க வேண்டும். இதில் சரியான தெளிவு இல்லாமல், முரண்பாடு ஏற்பட்டால் உங்களுக்குள் சுய எண்ணத்தை நினைவில் இருந்து எடுத்து, அதையே பதிலாக கொள்ளாமல் விளக்கம் பெற நிபுணர்களை அணுகவும். 

இது எங்களுடைய பல ஆண்டுகால எண்ண ஆய்வின் விழிப்புணர்வு! 

மேலும் விவரங்களுக்கு எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்

எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேசன் 
தொலைபேசி: 93600 53930



Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்