கடவுளாக இருந்தாலும்…
இது MSK முகையுதீன், Founder & CEO, MSK Life Clinic Foundation அவர்களின் சமுதாய முன்னேற்றத்திற்கான ஒரு விழிப்புணர்வு பதிவு!
இந்த கொரானா காலம் மக்களின் கருத்துக்களை மாற்றி உள்ளது ..
அதாவது சிந்திக்கக்கூடிய மக்களின் கடவுள் பற்றிய கருத்துக்களை மாற்றி உள்ளது ….
கடவுள் நிறுவனங்கள் தங்களிடம் பணி செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்ற அறிவிப்பு வெளியிட்ட பொழுது பல சிந்தனையாளர்கள் ஒரு கேள்வியை கேட்டனர் ..
சம்பளம் கொடுப்பது கூட வழியில்லை என்று சொன்னால் கடவுள் என்பது நம்பிக்கைதானா ….
என்ற விழிப்புணர்வு பல பேருக்கு ஏற்பட்டுள்ளது…. ஆகவே கடவுள் நம்பிக்கை பற்றிய பல்வேறு கருத்துகளை கொரானா மாற்றி உள்ளது …
குறிப்பாக உழைப்பில் மூலம்தான் பணம் கிடைக்கும் …
உழைப்பில்லாமல் எதுவும் கிடைக்காது.
இது கடவுளுக்கு பொருந்தும் கடவுளை வழிபடும்..அனைவருக்கும் பொருந்தும்…
கடவுளாக இருந்தாலும் உழைத்தால் தான் முடியும்.
பலபேர் இதை செய்தால் அதாவது சடங்குகள் சிறப்பு வழிபாடுகள் செய்தால் கடவுள் கொடுப்பார் …
இதை செய்தால் உனக்கு கடவுள் கொடுப்பார் என்று பல்வேறு கருத்து மற்றும் சடங்குகளை விளம்பரப்படுத்துகின்றனர் ஆனால் அந்த கடவுள் நம்பிக்கை அல்லது சடங்குகளை விளம்பரப்படுத்தக்கூடியவர் கடுமையாக உழைக்கிறார் என்பது விளம்பரத்தை பார்க்க கூடியவர்களுக்கு புரிவதில்லை….
ஒட்டு மொத்தமாக… பார்த்தால்..
விளம்பரப்படுத்தும் நபர் உழைக்கிறார் ….விளம்பரத்தை பார்ப்பவர் உழைப்பில்லாமல் கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்…
அந்த எதிர்பார்ப்பை அவர்கள் புரிந்து கொள்கின்றனர் அதற்கு இணையாக இவர்களிடத்திலிருந்து பொருளாதார செலவுகளை…. பொருளாதார… வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்கின்றனர்…
ஏற்படுத்துகின்றனர்
இந்த விழிப்புணர்வு வைரஸ் காலத்தில் ஏற்பட்ட மன முதிர்வை அறிவுசார்ந்த வெளிப்பாடு என அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
கடவுள்களுக்கு மனிதனின் போல் இல்லங்கள் உண்டு… கடவுள்கள் இல்லங்களில் மட்டும்தான் கூடியிருப்பார்கள் தங்குவார்கள் வாழ்வார்கள் என்று கற்றுக் கொடுக்கப்பட்டதனுடைய விளைவு… ஒவ்வொரு மனிதனும் குழந்தை பருவத்திலிருந்து கடவுள்கள் இல்லத்தில்தான் குடியிருப்பார்கள்… கடவுளை சந்திப்பதற்கு கடவுளுடைய உதவியாளர்கள், பணியாளர்கள், மேலாளர்கள் மற்றும் கடவுளுடைய கொள்கை பரப்பு செயலாளரின் ஒப்புதல் பெற்று இவர்கள் மூலமாக மட்டும் தான் ஒவ்வொரு தனி மனிதனும் கடவுளை சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டுள்ளது! இன்றளவும் உருவாகிக் கொண்டுள்ளது… இது மேலும் உருவாக்கப்படும்.. இவை மட்டுமல்லாமல் கடவுளுக்கு என்று தனி மொழி உள்ளது…
தனியான கடவுச்சொல் உள்ளது… அந்த கடவுச்சொல்லை கடவுளை நெருங்கியவர்கள்… கடவுளைப் பற்றி சொல்லக்கூடியவர்கள்… கடவுளுக்காக கடவுள் போல் வாழ்பவர்கள்… இவர்களுக்கு மட்டுமே தெரியும்! இவர்களால் மட்டுமே நம்முடைய தேவைகளை கடவுளுக்கு பரிந்துரை மொழி பெயர்ப்பு செய்ய முடியும்… ஆகவே தனிமனிதனுக்கு இந்த கடவுள் ஸ்பெஷலிஸ்ட் மூலமே எந்த தகவலையும் பரிமாற முடியும் என்ற நம்பிக்கை உளவியல் அடிப்படையில் உளவியலில் பொருத்தப்பட்டுள்ளது.. இது மேலும் தொடரும்… கடவுள் இல்லங்களில் வாழ்வார்… இல்லங்களை யார் அழகு படுத்துகிறார்கள் அல்லது இல்லங்களுக்கு யார் அதிகமாக ஸ்பான்சர் செய்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் கடவுள் ஸ்பெஷல் விஜயம் தருவார்.. அல்லது இவர்களுக்கு மட்டுமே அனைத்து வளங்களையும் ஆடிட்டிங் பண்ணாமல் கொடுப்பார் என்ற நம்பிக்கையும் தொடர்ந்து நம்பிக்கையால் கொடுக்கப்பட்டு வருகிறது…
இதை நம்பாதவர்கள் கடவுளுக்கு எதிராகச் செயல்படுவார்கள்.. இந்த கடவுளுக்கு எதிராக கேள்வி கேட்பவர்கள்… சிந்திப்பவர்கள்.. மிகவும் எதிரியாக கண்டறியப்பட்டு அழிக்கப்படுவார்கள்.. ஆகவே பெருமக்களே கடவுள் இல்லங்களை நீங்கள் அடிக்கடி வந்து ஆஜர் ஆகி விடுங்கள். கடவுளைப்பற்றி சொல்லக்கூடிய கொள்கை விளக்கங்களை சிந்திக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். சிந்தித்தால் அதனுடைய பலன் கிடைக்காமல் போய்விடும்… என்றெல்லாம் எனக்கும் மற்றவருக்கும் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது… இன்னும் ஒரு சிலர் கடவுளுக்கு என்று ஸ்பெஷல் மொழி உள்ளது! அந்த மொழியை உச்சரித்து, அதோடு அதற்கேற்ற படி லாங்குவேஜ் என்று சொல்லக்கூடிய உடல்மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக் கொடுத்தனர்..
இன்னும் ஒரு சிலரால் ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்காக கடவுளை பற்றி சொல்ல கூடியவர்களுக்கு கடவுள் இல்லங்களில் வாழ கூடியவர்களுக்கு தங்களால் முடிந்த அளவு பணம், செல்வம், பொருள் கொடுக்க வேண்டும்… அப்படி கொடுத்தால் நீங்கள் கடவுளுக்கு கொடுப்பதாக உங்களுடைய அக்கவுண்டில் பற்று வைக்கப்படும்.. என்று சொல்லிக் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது… இந்த வைரஸ் தாக்குதலுக்கு பின் பல பேருடைய கேள்விகள் இவ்வாறெல்லாம் கேட்கப்படுகிறது… சிந்தனை தூண்டப்படுகிறது.. இன்னும் ஒரு சிலர் கடவுள் என்பது விஞ்ஞானம் தான்.. அஞ்ஞானம் அல்ல.. கடவுள் என்பது முற்றிலும் விஞ்ஞான அறிவியல் – உளவியல் நுட்பம் சார்ந்தது.. வழிபாட்டு முறையல்ல… வழிபடுதல் முறையல்ல… செயல்படுத்தும் முறை… என்றெல்லாம் வெளிப்படையான விளக்கங்களுக்கான விழிப்புணர்வு சிந்தனைகளும் செயல்களும் உருவாகும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடவுள் என்ற நம்பிக்கை….. விஞ்ஞானம் என்ற செயல்பாடாக மாறும் காலம் உருவாகிக் கொண்டுள்ளது.. விஞ்ஞான முறைப்படி செய்வது செயல்முறை… நம்பிக்கை முறைப்படி செய்வது செயல்முறை அல்ல! சடங்குமுறை என்ற விழிப்புணர்வு உளவியல் ரீதியாக பல மக்களுக்கு ஏற்பட்டுள்ளது….
கடவுள் நம்பிக்கையை… தனி மனிதனுடைய கடவுள் பயத்தை.. தனி மனிதனுடைய கடவுள் என்கின்ற கோட்பாட்டை.. தனி மனிதனுடைய கடவுள் சித்தாந்த நம்பிக்கைகளை பயன்படுத்தி அதை வைத்து தொழிலாக செய்யக்கூடியவர்கள் பணத்தை கணக்கு பார்க்காமல் கடவுளுக்காக செலவு செய்… பணம் வரும்… கடவுள் பணம் தருவார் என்ற நம்பிக்கையை பயமாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விதைக்கின்றனர்.. எல்லாம் தெரிந்த அனைத்து ஆற்றலையும் தன்னகத்தே வைத்துள்ள கடவுளுக்கு பணம் கொடுத்தால் தான் அவர் அதாவது கடவுள் பணம் கொடுப்பாரா? அருள் புரிவாரா? காப்பாற்றுவாரா? அப்படியானால் கடவுள் என்பவர் பரிமாற்றத்தின் அடிப்படையில் பணத்தை கொடுப்பாரா? அல்லது பணம் கொடுக்கக்கூடிய நபரா? அல்லது பரிமாற்றத்தின் அடிப்படையில் பண்டமாற்று முறையில் வியாபார அடிப்படையில் செயல்படக்கூடியவரா அந்த கடவுள்?
இந்த சிந்தனைகள் இப்பொழுது இந்த வைரஸ் காலத்தில் அதிகமாக தூண்டப்பட்டு வருகிறது.. அதாவது கடவுள் என்ற சொல்லை வைத்து அதை தொழிலாக செய்யக்கூடியவர்கள்… பணத்தை கடவுளுக்கு கொடு… நீ கொடுத்ததை விட நூறு மடங்கு பணம் கொடுப்பார் என்ற வியாபார உளவியல் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்! ஆனால் வியாபாரம், மேம்பாட்டு ஆலோசகர்கள்… உழைத்தால் மட்டுமே பணம்… உழைப்பை மட்டுமே பணமாக மாற்ற முடியும்… உழைப்பில்லாமல் பணமாக மாறக்கூடிய ஒன்று உலகத்தில் இல்லை என்கின்றனர்! ஆசையை தூண்டினால் பணம் தானாக வரும் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் கூட இந்த கடவுள் வியாபாரிகள்தான் என்பதை இப்பொழுது மக்கள் புரிந்து வருகின்றனர்..
இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களும் மனிதனுடைய உழைப்பால் உருவாக்கப்பட்டவையே என்ற கருத்தை உருவாக்கியவர்கள் மட்டுமே… அதாவது தொழில் மூலமாக உருவாக்கம் திறன் உள்ளவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்கின்றனர்.. ஆனால் கடவுள் நம்பிக்கையை தொழிலாக செய்பவர்கள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களும் மனிதன் படைக்கவில்லை… கடவுள்தான் படைத்தான் என்று எதிர்கால சந்ததிகளை நம்ப வைப்பதோடு மட்டுமல்லாமல், குழப்பத்தில்…. வறுமையில்… சிக்கலில்… கடனில் உள்ளவர்களையும் நம்பவைத்து, இவர்கள் அவர்களின் நம்பிக்கை மூலமாக பணவரவை பெருக்கிக் கொள்கின்றனர்.
உண்மையில் இவர்கள் உழைக்கின்றனர் என்பது இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு புரியாது! அதாவது கடவுள் நம்பிக்கையை தொழிலாக செய்யக் கூடியவர்கள் மட்டுமே இந்த உலகியல் படைப்பியல்… பணவியல்… தொழிலியல்… உழைப்பு இயல் இவற்றில் உள்ள உண்மைகளை புரிந்து வைத்து செயல்படுவதோடு, இந்த புரிதலை தங்களுடைய சந்ததிகளுக்கு மட்டுமே கற்றுக் கொடுக்கின்றனர். மற்றவர்களுக்கு ‘நம்பிக்கை வை’ என்பதை மட்டும் கற்றுக் கொடுத்து, கடைசியில் இவர்களுடைய வாடிக்கையாளராக மாற்றிக் கொள்கின்றனர்!!!
MSK முகையுதீன், Founder & CEO
Comments
Post a Comment