நீங்கள் நல்லவரா?

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 



நாம் நல்லவர்கள் என கற்பனையாக எண்ணத்தை வளர்த்து உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது குறுக்கீடுகள் ஏற்பட்டால். அந்த குறுக்கீடுகள் ஏன் ஏற்படுகின்றன நான் நல்லது தான் செய்கிறேன் அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்… என்ற கேள்வியை இடைவிடாது நமக்குள் கேட்டு, அந்த கெட்ட நிகழ்வை கெட்ட சம்பவத்தை துன்பம் தரக்கூடிய வார்த்தைகளை நாம் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறோம்… நல்ல பாத்திரத்தில் அசிங்கமான ஒன்றை வைத்திருந்தால் பாத்திரமும் அசிங்கமான தாகவே கருதப்படும்.. 



ஆகவே கெட்டது என புரிந்து கொண்டால் அதை சிந்தனை அளவிலும், செயல் அளவிலும் நீக்கிவிட வேண்டும். அவ்வாறு நீக்க முடியவில்லை… அது மனதோடு ஒட்டிக் கொண்டுள்ளது என்று தெரிந்தால் உடனடியாக உளவியல் மருந்தில்லா மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்! இதில் காலம் தாழ்த்தினால் அல்லது காலத்தை தள்ளிப் போடுதல் போன்ற செயல்கள் இருந்தால் இந்த எண்ணம்…. வலுப்பெற்று எண்ணம் சார்ந்த நோய்களையும், எண்ணத்தின் அதிர்வால் உடலில் பல நோய்சார்ந்த குறியீடுகளையும், அதன்பின் உண்மையான நோய் தன்மையை உருவாக்கிவிடும்…



 இப்படிப்பட்டவரின் எண்ணத்தை முறைப்படுத்த வேண்டும் சிக்கலை சீர்செய்ய வேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே எண்ணம் வேதனை அளிக்கக்கூடிய அந்த வினாடிகளை உடனடி உளவியல் ஆலோசனைக்கு ஏற்படுத்திவிட்டால் எண்ணத்தை ஆரம்பத்திலேயே அழித்துவிட முடியும்… பெரும்பாலானவர்கள் நான் அவர்களுக்கு நல்லது தான் செய்தேன் ஆனால் அவர்கள் ஏன் எனக்கு கெட்ட செய்தார்கள் நல்லது செய்ததற்கு கூலி இதுதானா.. கடவுள் அவர்களுக்கு நல்லது செய்கிறார் ஆனால் எனக்கு கெட்டது செய்கிறார் நல்லவன் வாழ்கிறான் கெட்டவன் கெடுகிறான்…. 



இதுதான் கடவுள் செய்யலா என பல கேள்விகளை கேட்டு பாதிப்பை ஏற்படுத்திய அந்த நபரை மனதில் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி, வேதனைக்கு உட்படுத்தி கொள்கிறோம். ஆனால் கெட்டவனோ அதைப் பற்றி சிந்திக்காமல் தன் வேலையை தொடர்கிறான்… ஆகவே நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தால் உங்களுடைய எண்ணத்தில் குறுக்கீடுகள் வந்தால் உடனடி உளவியல் ஆலோசனை எடுத்துக் கொள்வது உங்களுடைய உயிருக்கு அவசியம். 



 MSK முகயுதீன், 
MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், 
தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

மூளையா? மனமா? மனபாதிப்பினை சரிபடுத்துவது எவ்வாறு? அறியுங்கள்!