பணம் பெருக்கும் யுக்திகள்
இது எம் எஸ் கே முகையுதீன், அவர்களின் சமூக விழிப்புணர்வு பதிவு.
பணம் இல்லாத பொழுது அதைப் பெற எவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது…. இதை பணம் இல்லாத போது மட்டுமே உணர்ந்து புரிந்து கொள்ள முடியும்… அதேபோல தூக்கம் வராத போது தூக்கம் பற்றாக்குறையாக இருக்கும் பொழுது மட்டுமே தூக்கத்தின் வலிமையை அவசியத்தை ஆற்றலை புரிந்து கொள்ள முடியும்… தூக்கம் என்பது சாதாரண செயலாக தெரியும்… தூக்கம் இல்லாத போது தூங்க முடியாத போது மட்டுமே உணர முடியும் தூங்குகின்ற மனிதன் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன் என்று… தூக்கத்தை உளவியல் ரீதியாக மருந்தில்லா மருத்துவமாக பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ளவும். உறக்க உளவியல் சிகிச்சை மருந்தில்லா மருத்துவம்
பணம் பெருக்கும் விதிகள் (யுக்திகள்) இரு வகைப்படும்.
முட்டாளை முட்டாளாக மேலாண்மை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்… அதேபோல அறிவாளியை அறிவாளியாக மேலாண்மை செய்தால் பணம் சம்பாதிக்க முடியும்….
விதிக்கு மாறாக முட்டாளை அறிவாளியாக மாற்ற நினைக்கும் பொழுது அல்லது முயற்சிக்கும் பொழுது அவர்கள் நம்மீது கோபப்பட்டு நிராகரித்து விடுவார்கள். இதனால் பண இழப்பு ஏற்படும்..
முட்டாள், முட்டாள் தனமாக சொல்லும் கருத்து, செயல் இவற்றை நாம் மாற்ற முயற்சிக்கும் பொழுது … அதாவது அவருடைய முட்டாள்தனத்தை அறிவாளி தனமாக மாற்ற முயற்சிக்கும் பொழுது, அவர் கோபப்பட்டு நிராகரித்துவிடுவார்! இதனால் பண பரிமாற்றம் தடைபெறும்….
அறிவாளியை முட்டாளாக மாற்ற முயற்சிக்கும் பொழுது அவர்களும் கடுமையாக கோபப்பட்டு நிராகரித்து விடுவார்கள்… இதனால் பணப்பரிமாற்றம் தடைபடும்..
ஆனால் அறிவாளியை அறிவாளியாக மாற்ற நினைத்தால் அவர் மகிழ்ச்சி பெற்று பணத்தை வெகுமதியாக அன்பளிப்பாக கொடுப்பார்..
எனவே முட்டாளை முட்டாள் தனத்தை கொண்டு கையாளவேண்டும்.
அறிவாளியை அறிவாளி தனத்துடன் மேலாண்மை செய்ய வேண்டும்! அப்போதுதான் பணம் பெருகும்… பணம் கிடைக்கும்… பணத்தின் மூலம் ஆற்றல் பரிமாற்றம் ஆகும்..
ஆனால் சிலர் மேற்கூறிய உலக உளவியல் நடைமுறையை மாற்றும் பொழுது அவைகள் தொடர்ந்து பணத் தோல்வியை உருவாக்கிக் கொடுத்து விடுகின்றன!
சுருக்கமாகச் சொன்னால் அப்படி இருப்பதை அப்படியே வை..
மாற்ற முயற்சித்தால் மோசமான விளைவுகளைத்தான் பெற முடியும்..
எம் எஸ் கே உலகில் உளவியல் கோட்பாட்டின் படி, இயற்கையை மாற்றக்கூடாது… மாற்ற முடியாது.. அதேபோல சில மன சமூக அமைப்புகளை மாற்ற முடியாது.. மாற்றினால் அல்லது மாற்ற முயற்சித்தால், முயற்சித்தவர் பாதிக்கப்படுவார்..
அவரவர்களின் எண்ணத்தை, நம்பிக்கையை ஊக்குவிப்பதன் மூலமாக நாம் மகிழ்ச்சியாக நம் செயலை மற்றவர்களுக்குச் செய்ய முடியும்..
பண நம்பிக்கை, உழைப்பு நம்பிக்கை, செயல் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, நம்பிக்கையை நம்பும் அவர்களின் தன்னம்பிக்கை அத்துடன் வாழ்க்கையை பற்றிய கருத்து உலகத்தைப் பற்றிய பார்வை இவற்றை மாற்ற ஆசைப்படுவது முயற்சிப்பது சரியான முறை அல்ல…
அப்படியானால் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம்.
அறிவாளியாக உள்ள ஒருவரை முட்டாளாக மாற்ற…
மாற்றினால் அல்லது மாற்ற முயற்சி செய்தால் என்ன செய்வது..
இதற்கான பதிலை.. யுக்திகளை
மேலும் மனித மேலாண்மை திறன் கற்று கொள்ள எம் எஸ் கே கோட்பாட்டை பயன்படுத்தவும்!!
பணம் இருப்பு விதிகள்!
1. பணத்தை விரும்ப வேண்டும்
2. உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைத்தது என்று சொல்லி சந்தோஷமாக இருக்க வேண்டும்
3. இவ்வளவு தானா கிடைத்தது என்று சொல்லி பணத்தை ஏளனமாக பேசக்கூடாது.
4. பணம் வேண்டும் என்று பேராசை பட கூடாது.
5. வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்கும் போது சந்தோஷமாக கொடுக்க வேண்டும்
6. பெருமைக்காக பணத்தை செலவு செய்தல் கூடாது
7. பிராத்தனையின் மூலம் பணம் கிடைக்காது. உழைத்தால் மட்டுமே பணம் கிடைக்கும்
8. பணத்தை சேமிக்க வேண்டும்
9. சிறு சிறு சேமிப்புகள் தான் பின்னாளில் அசையா சொத்தாக மாறும்.
10. பணம் இருக்கும் போது தாராளமாக செலவு செய்தல் கூடாது.
11. பணத்தை சேமிக்கிறேன் என்ற பெயரில் கஞ்சத்தனமாக இருக்கக் கூடாது.
12. தன்னை தானே வருத்திக் கொண்டு பணத்தை சேமிக்க கூடாது.
13. பணத்தை நினைத்த இடத்தில் வைக்கக் கூடாது. அதற்கான இடத்தில் வைக்க வேண்டும்.
14. பணம் வருவதற்கு முன்பே பல கணக்குகளை போட கூடாது.
15. பொழுதுபோக்காக செலவு செய்யும் பணத்தை தேவை அறிந்து செலவு செய்ய வேண்டும்.
16. பணத்தை கொடுத்தால் பணம் வரும் என்று சொல்லி விரயம் செய்ய கூடாது.
17. நிறைய பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து கொண்டு தன்னை தானே வருத்திக் கொள்ளுதல் கூடாது.
18. பணம் உங்களை கோபுரத்திற்கும் அழைத்து செல்லும்….. அதே நேரம் அதே கோபுரத்திற்கு வெளியேயும் நிற்க வைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
19. முறையாக வந்த பணம் செலவுகள் போக மீதம் ஆகும்.
20. கிடைக்க வேண்டிய பணத்தை கட்டாயப் படுத்தி, கஷ்டப்படுத்தி வாங்க வேண்டாம்.
பணம் சேகரிப்பு விதி!
உங்களிடத்தில் பணம் சேமிப்பாக… மீதமாக சேர வேண்டுமா? அப்படியானால் நீங்கள் எம் எஸ் கே பணம் சேகரிப்பு விதியை கடைபிடியுங்கள்.
விதி எண்-1: உங்களுடைய சேமிப்பில், உங்கள் உழைப்பின் உதவியால் செலவுகள் போக சேமித்த தொகை பத்தாயிரம் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். அப்படி இல்லையெனில் இன்றிலிருந்து சேமிப்பை துவக்குங்கள்!
விதி எண் –2: சேமிப்பு 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர முயற்சி செய்யுங்கள்.
விதி எண் –3: ஐம்பதாயிரத்தை ஒரு லட்சமாக மாற்ற உழைக்க தூங்குங்கள்… உங்களுடைய உழைப்பு யாருடைய மனதையும் பாதிக்கக்கூடாது. யாருடைய பணத்தையும் பாதிக்கக்கூடாது. குடும்ப உறுப்பினர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை தாராளமாக, மகிழ்ச்சியாக விரயம் இல்லாமல் செய்த பின் உள்ள மீதத் தொகையை மட்டுமே சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்.
விதி எண் –4: ஒரு லட்சம்… ஒன்றரை லட்சம்… 2 லட்சம்… இப்படி 10 லட்சம் வரை சேமியுங்கள்… இவற்றை விடுத்து விட்டு… கடன் வாங்கும் யுத்திகளை பெருக்கினாலும் இவற்றை நினைவில் கொள்ளுங்கள். கடன் ஆலோசகர்களை அணுகி அவர்களிடத்தில் பணம் பெறும்… கடன் பெறும் யுத்திகளை திறமையாக நினைத்தாலோ அல்லது ‘இந்த உலகத்தில் கடன் வாங்காமல் வாழ முடியாது’ என உங்களுடைய குடும்பத்தினர் உங்களுக்கு ஆலோசனை கொடுத்து அதன்படி செயல்பட்டாலோ பணம் உங்களிடத்தில் சேமிப்பாக மாறுவதற்கு பதிலாக கடனாக… கடன் கொடுக்க வேண்டிய தொகையாக மாறிவிடும்! அதாவது அற்ப சந்தோசம் அதிக பண இழப்பை உருவாக்கும்.
விதி எண் –5: உங்களுடைய பணம் சேமிப்பு கணக்கில் உள்ளதா அல்லது கடன் கட்டவேண்டிய கணக்கில் உள்ளதா என்பதை உணருங்கள்…
விதி எண் –6: பணப்பற்றாக்குறை 10% மட்டும் இருந்தால் நீங்கள் கடன் இல்லா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உண்மை நிலை. 90% கடன் இருந்தால் நீங்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டு உடல் நலத்தை விற்றுக்கொண்டு மனநலத்தை இழந்து, சமூகப் பார்வையை தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்..
இவற்றைச் சொல்லும் பொழுது உங்களுடைய மனதில் மிகப் பெரிய தொழிலதிபர்கள் கடன்பட்டு, கடன் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்… நாம் ஏன் அவ்வாறு இருக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றினால் உங்களுடைய டி என் ஏ கடன் பற்றிய எண்ணத்திலேயே செட்டாகிவிட்டது என்பதே உண்மை… கடன் உங்களை நெருங்கி விட்டது… கடன் உங்களுடைய சொத்தாக மாறிவிட்டது… இதை உணர்ந்து கொள்ளவே பத்தாண்டுகள் தேவைப்படும்.. ஆகவே கடனில்லா வியாபாரம் கடுமையான வாழ்க்கை மகிழ்ச்சியான தொழில் இவற்றை பெற உளவியல் ஆலோசனை வழங்குகிறோம்.
ஏழை ஆவதற்கு ஒரே காரணம் பணம் எப்படி வந்தது என்று தெரிந்து கொள்ளாமல் அதீத செலவு செய்வது தான். ஏழை ஏழையாகவே இருப்பதற்கு காரணம் தான் ஏழையாக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை தகுந்த நிபுணர்களிடம் ஆலோசனை எடுக்காமல் தனக்கு தோன்றிய வழியில் நடப்பதுதான். நெருப்பை நேரடியாக தேடக்கூடாது நெருப்பை பெற தீப்பெட்டி அவசியம்.. தீப்பெட்டி இல்லாமல் நேரடியாக நெருப்பை சட்டைப்பைக்குள் அல்லது பேக்கில் வைக்க முடியாது அப்படி வைத்தால் அது தான் இருக்கும் இடத்தை அளித்து விடும்… இதே போல தான் பணத்தை நேரடியாக தேடக் கூடாது முயற்சிக்கும் கூடாது பணம் என்பது உழைப்பு என்ற கருவி வழியாகத்தான் பெறவேண்டும்.. பலர் பணத்தை நேரடியாக பெற முடிவு செய்து அந்தப் பணமே அவர்களை அழித்து விடுகிறது.. பணத்தின் மூலப்பொருள் உழைப்பு உற்பத்தி தரம் சேவை தொடர் புதுமை மக்கள் தேவைக்காக புதிய படைப்பு சேவை போன்றவற்றை ஆர்வத்துடன் தோழியை பற்றி கணக்கிடாமல் வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் தடைகளை மயில் கல்லாக மாற்றி பார்க்க உலகியல் வழிகாட்டல் அவசியம்!
MSK முகயுதீன், MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், தொலைபேசி: 9360053930
Comments
Post a Comment