கடவுள் நம்பிக்கை பற்றிய உளவியல்

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 

 கடவுளை நம்ப வேண்டும் கடவுள் தான் உங்களுக்கு எல்லாம் கொடுக்கிறார், கடவுள் உங்களை தண்டிப்பார்… இதுபோன்ற நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன! இதில் கேள்வி என்னவென்றால் இப்படி பிரச்சாரம் செய்பவர்கள் இடத்தில் கடவுள் இவ்வாறு கூறினாரா அல்லது கடவுளை இவர் பார்த்து அவருடன் கேள்வி பதில் பரிமாறி அதனடிப்படையில் அனைவருக்கும் அறிவுரை கூறுகிறாரா?



உளவியல் அடிப்படையில் உற்றுநோக்கினால், ஒருவர் இயற்கையினுடைய நடத்தையியல், இயற்கையின் நிகழ்வுகள், தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் இணைப்புக்கள், பிணைப்புக்கள், முரண்பாடுகள், சமன்பாடுகள் இவற்றின் பல்வேறு கோணங்களில் இந்த செயல்பாடுகள் வடிவமைக்கப்படவில்லை. ஆனால் இவை சுய இயக்கத்தினால் நடைபெறுகிறது. இந்த இயக்கம் சரியான முறையில் முறைப்படுத்தப்பட்ட முரண்பாடற்ற செயல்பாட்டை உருவாக்க முடியும் என்று ஒருவர் அதீத நுண் அறிவு கொண்டு யோசித்து இருக்கலாம், அல்லது இப்படித்தான் இருக்கும் என்று பரிசோதனை அடிப்படையில் தனக்குத்தானே பல சுய பரிசோதனை சமூக பரிசோதனை இவற்றை செய்திருக்கலாம். 



அதன் அடிப்படையில் அவர் இயற்கையினுடைய வழிமுறைகளை பின்பற்றுங்கள் அப்படி பின்பற்றினால் உங்களை நீங்கள் முரண்பாடுகளில் இருந்து காப்பாற்றி உடல் மன அளவில் பாதிப்பில்லாமல் வாழலாம் என கண்டறிந்து இருக்கலாம். அல்லது மனிதனுடைய இயல்பை யாரோ ஒருவர் கண்காணிக்கும் பொறுப்பில் உள்ளார் என்ற உத்தியை பயன்படுத்தி கடவுள் நடத்துகிறார் என்பதை அவர் கூறியிருக்கலாம். அதுவே பின்னாளில் கடவுள் கூறுகிறார் என்ற கருத்தாக்கமாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கலாம். 



இதில் உளவியல்- உறவின் தன்மை என்னவென்றால் செயல் அடிப்படையிலேயே விளைவுகள் வெளிப்படுகின்றன. செயலை மாற்ற வேண்டும் அல்லது முறைப்படுத்த வேண்டும் செயல்முறை படுத்தாமல் எவரோ ஒருவர் நமக்கு கொடுப்பார் என்பது கடவுள் நம்பிக்கை அல்ல! இது மூட நம்பிக்கை என்கின்ற முடக்கும் நம்பிக்கை!! உதாரணமாக கோவையிலிருந்து சென்னை செல்ல வேண்டியுள்ளது என்றால் சென்னை என்ன கொடுக்கும், சென்னையை நம்புகிறேன், சென்னை தான் என்னை வழிநடத்துகிறது, சென்னையிடத்தில் நான் கேட்டேன், சென்னைக்கான அனைத்து வழிபாட்டு சடங்குகளையும் செய்துள்ளேன், சென்னை என்னிடத்தில் வரும் என்று ஒருவர் நம்பிக்கை கொண்டு இருக்கிறார் என்றால் இது நம்பிக்கையா? அல்லது சென்னை இவருடைய தேவையை பூர்த்தி செய்யுமா? சென்னை நேரடியாக இவருக்கு மேலாளர் வேலை அல்லது சப்ளையர் வேலை அல்லது விநியோகிப்பாளர் வேலை செய்யுமா? இது எப்படி சாத்தியம் இல்லையோ அதே போல்தான் செயல்பாடு என்ற நம்பிக்கை…. 



 கடவுளிடத்தில் கேட்டேன், கடவுள் கொடுப்பார்.. அல்லது கடவுள் தண்டித்து விட்டார்… கடவுள் என்னை கண்டுகொள்ளவில்லை… கடவுளுக்கு லஞ்சமாக புகழ்தல், வழிபடுதல் போன்ற செயலில் ஈடுபட்டால் கடவுள் மனமிரங்கி கொடுத்துவிடுவார் என்று நம்புவது இதேப் போல் தான் உள்ளது. ஆகவே இந்த உலகத்தை நுண்ணறிவு கொண்டு உணர்ந்தவர்கள், உலக இயக்கத்தை ஆற்றலை மனித உரு கடவுள் கொள்கை என்ற கோட்பாடு அடிப்படையில் உன்னை ஒருவர் கண்காணிக்கிறார், அவர் உன் செயலுக்கு ஏற்ப கூலி என்கின்ற வெகுமதி தருவார்… ஆகவே உனது செயல்களை அவருக்கு அதாவது இயற்கை என்ற பெயர் ஆற்றலுக்கு முரண்பாடு இல்லாமல் சமன்பாடு செய்து கொள் அல்லது செயல்படு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கலாம். 



ஆனால் கடவுள் செயல்பாடு அடிப்படையில் கொடுப்பார் என்ற சொற்றொடரில் உள்ள செயல்பாட்டு அடிப்படையில் என்பதை நீக்கிவிட்டு கடவுள் கொடுப்பார் என்ற சிந்தனை புகுத்தப்பட்ட விளைவு சுய செயலை விடுத்து கடவுளை செயலாளராக செய்து கொடுக்கும் மேலாளராக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்! இந்த பார்வையினை மாற்றி பார்ப்பவர்களை வேற்று நம்பிக்கையாளர்கள் மாற்று நம்பிக்கையாளர்கள் அவர்கள் எல்லாம் ஓரினம் நாங்களெல்லாம் வேற்றினம் .. என கட்சிகளைப் போல காட்சிகளை வடிவமைத்து வாழ்க்கையை நடத்த ஆரம்பித்துவிட்டனர்… 



 ஆகவே கடவுளை தன்னுடைய பார்வையில், தனக்கு இணக்கமான வகையில் கடவுள் இப்படித்தான் இருப்பார்… கடவுளை இப்படித்தான் வணங்கவேண்டும், கடவுள் இங்கேதான் உள்ளார்… என ஒவ்வொருவரும் ஒரு பாடத்திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்த பாடத்திட்டத்தை போதித்து அதற்கேற்ப மாணவர்களையும் தலைமை மாணவர்களையும் அதற்கு ஏற்ப அந்தந்த கொள்கைகளை நம்ப கூடியவர்களை வாடிக்கையாளராக மாற்றிக்கொண்டு வந்த வாடிக்கையாளர்கள் வேறு நம்பிக்கைக்கு அல்லது வேறு வகையில் விழிப்புணர்வு பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக வேற்று வழியில் செல்ல கிளைகளை வைத்து, அவர்கள் மீது குறைகளையும், வன்மத்தையும் வார்த்தை அளவிலும், செயல் அளவிலும் செய்துவிட்டு தன்னுடைய கஸ்டமர்களை காப்பாற்றுவதில் குறியாக உள்ளனர். கஸ்டமர்களை காப்பாற்றுதல் என்பது அவர்களை தன்னுடைய நம்பிக்கை என்ற கட்டுக்குள் வைத்துக் கொள்வதாகும்.



 இப்படி பார்க்கும் பொழுது, இந்த செயல் தொடர்ந்து நடைபெறும்போது, நம்பிக்கை போய் கட்சி போல உறுப்பினரை சேர்க்கும் செயல் நடைபெற ஆரம்பித்துவிடுகிறது! கடவுள் என்கின்ற பேராற்றலை விடுத்து, கடவுள் என்ற கட்சிக்குள் ஆள் சேர்ப்பது, பராமரிப்பது, கஸ்டமரை கவனம் வேறெங்கும் செல்லாதவாரு மேலாண்மை செய்வது போன்ற நிர்வாக செயலில் ஈடுபடுகின்றனர். உண்மையில் உலகத்தை உணர்ந்தவர், இயற்கை ஆற்றலை புரிந்தவர், அவரின் வழிமுறையை விடுத்து வழிபாட்டை பிடித்துக்கொண்டு கட்சி அளவில் கடவுளை இயற்கை ஆற்றலை இவர்களுக்கு ஏற்ப விளக்கம் கொடுத்து மக்களுக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி அதில் வாழும் மனநிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள், அல்லது உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 





 ஆகவே உளவியல் முறையில் இயற்கை கடவுள் என்ற ஆற்றலை முறையாக உணர்ந்து, ஒவ்வொரு உயிரினம் தாவர இனம் மனித இனம் விலங்கினம் இவற்றிற்கு இடையூறு இல்லாமல் இந்த உலகம் அனைத்துக்கும் சொந்தமானது… நமக்கு மட்டுமல்ல என்பதை புரிந்து உணர்ந்து வாழ்வதே உளவியல் முறையில் கடவுள் என்கின்ற இயக்கவியல்ஆற்றலை புரிந்து கொள்ள எளிய வழியாகும்! 

 MSK முகயுதீன், 
Founder & CEO MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், 
தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்