நல்லவன் – கெட்டவன் – சூழ்ச்சியாளன் : எவ்வாறு வாழ வேண்டும்?

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 


 
அறிவு என்பது மனப்பாடம் செய்வது – தேர்வில் வெற்றி பெறுவது என சொல்லிக் கொடுத்துததன் விளைவு வாழ்க்கையில் அறிவை எப்படி பயன்படுத்துவது என்ற செயலியல் தெரியாமல் போய்விட்டது என்பது கூட தெரியாமல் ஆகிவிட்டது. இதற்கு சுய காரணத்தை கண்டு பிடிக்காமல் கடவுளை காரணம் காட்டுகிறோம் அல்லது விதி என விலகிச் செல்கிறோம். பலர் ஜாதகம் என சாதக படுத்திக் கொள்கின்றனர். 



சிலரோ சிந்தனை மற்றும் செயல் மாற்றத்திற்கு பதிலாக வீட்டை சாஸ்திரதிற்காக மாற்றுகின்றனர். பெயரை எழுத்தை உச்சரிப்பை மாற்றி அமைக்கின்றனர். உண்மையில் மாற்ற வேண்டியது செயலையும், சிந்தனையையும், முயற்சியின் வழிமுறையும் தான்! பிடிக்கும் – பிடிக்காது என்று வகைப்படுத்துதை விட, நடிக்க தெரியும், நடிக்க தெரியாது என வகைப்படுத்துவதில் தான் வாழ்க்கையின் வெற்றி உள்ளது! ‘நடிப்பு’ என்பதை தவறாக நினைத்துக் கொள்வதை விட, நடிப்பு என்பது சமூக நல்லிணக்கத்திற்காக தகவமைத்துக் கொள்ளும் ஒரு உளவியல் பண்பியல் என்று வார்த்தையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். 



 படித்தவர்களை விட நடித்தவர்கள் நாட்டையும், பணத்தை ஆளுவதற்குக் காரணம் அவர்களின் நடிப்பு, அறிவு, நடிப்பாற்றல், நடிப்பை தகுந்த இடத்தில் ஒழுங்காக வெளிப்படுத்தும் தன்மை இவைதான் என்பதை புரிந்து கொண்டு, வாழ்வதற்கு உளவியல் ஆலோசனை மிக மிக மிக அவசியம். ‘நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தால், அமைதி என்றுமில்லை’ இந்த பாடல் வரிகளை அனுபவித்தால் மட்டுமே அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். இதைத்தான் உளவியல் ரீதியாக சொல் அர்த்தம் என்பது வேறு, செயல் அர்த்தம் என்பது வேறு என்று விளக்குகிறோம். 



 ஆரோக்கியம் என்பது ஆரோக்கியம் இல்லாத போது உணரப்படும். அமைதி என்பது அமைதி இல்லாத போது மட்டுமே உணரக் கூடும். ஆகவே உணரப்படும் பொழுது நிதியை பயன்படுத்தி அடுத்த நிகழ்வுக்கு செல்வதற்கான உளவியல் – உடலியல் – செயலியல் ஆலோசனை எடுத்துக் கொண்டு வாழ்வதுதான் அறிவுடைமை! பெரும்பாலும் நடந்த முடிந்த நிகழ்வுக்காக தான் அழுகின்றோம். ஆனால் நடந்த நிகழ்வுக்காக அதனால் எதுவும் நடக்காது என தெரிந்தும் தெரியாமலேயே இருக்கின்றோம். அவை நடப்பதற்கு எதிர்-வினை, வினை -வினை, செயல் -வினைஉருவாக்க திட்டமிடல், செயல்படுதல் இவையே வேண்டும். இவை நிகழ சரியான தூண்டல் ஆலோசனை தேவை. படிக்காதவன் திட்டமிடுகிறான். படித்தவன் நம்புகிறான். 



முட்டாள், முட்டாள் தனமாக முயற்சிப்பதில் விடா முயற்சியாக இருக்கிறான். அறிவாளி என்னிடத்தில் உண்மை உள்ளது, நான் ஜெயிப்பேன் என கற்பனையில் காலத்தை வீணாக்கி கிறான். நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி இன்னொன்று பெண் தெய்வத்தின் சாட்சி. அப்படியானால் கெட்டவர்களுக்கு மனசாட்சி என்பதும் இல்லை, தெய்வத்தை சாட்சியாக பார்க்கும் தன்மையும் இல்லை. இதை புரிந்து கொள்வதற்கு எத்தனை அடிகள் தேவைப்படும் என்பதை அடிபட்டவர்கள் புரிந்து கொள்ள முடியும். இந்த கேள்வியைத்தான் அனைவரும் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். நல்லவன் பாதி க்கிறான், கெட்டவன் சாதிக்கிறான்!? நல்லவன் மனசாட்சியை கடவுள் சாட்சியை நம்புகிறான். கெட்டவன் இவற்றை நிராகரித்து அடுத்தவர்களை வேதனை படுத்துவதற்கான முழுநேர திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறான். 



ஆகவே நல்லவனாக இருப்பதற்கும், நான் நல்லவன் என்று சொல்வதற்கும், விளம்பரமும் விளக்கமும் வியாக்கியானமும் மனசாட்சிப்படி இறைச்சி இப்படி வெளிப் படுத்தாமல் இருப்பதே கெட்டவர்களுக்கு வாய்ப்பாக போய்விடுகிறது. ஆகவே நல்லது நல்லது என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் கெட்டதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். நல்லவன் யாருக்கும் தீங்கு இல்லாமல் தன் வழியே செல்லும் பொழுது அவன் பைத்தியக்காரனாக பார்க்கப்படுகிறான். கெட்டவன் தன் மனதுக்கு தோன்றிய விதத்தில் பைத்தியக்காரன் போல் எல்லா செயலினை செய்துவிட்டு நல்லவன் போல் விளம்பரப் படுத்தி வெற்றி பெறு கிறான். இதற்காக யாரை அணுகி, யாரிடத்தில் தொடர்பு வைத்தால் தனது பைத்தியக்கார அறிவற்ற தன்மையை மறைத்து நல்லவன் போல் காட்டிக்கொள்ள முடியும் என பார்த்து கடின முயற்சி எடுக்கிறான். 



 ஆனால் கெட்டவனும் தான் நல்லவன் போல் காட்டி கொள்ள தேவையில்லை. காரணம் நான் நல்லவன் என்னை இயற்கை பார்த்துக்கொண்டிருக்கிறது, கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார், எனக்கு மனசாட்சி இருக்கிறது என்ற தன்மையில் வாழும் பொழுது இவன் கெட்டவனால் அவபெயர் ஏற்படுத்தப்பட்டும், நல்லவனால் நல்லவன் என நிரூபிக்க முடியாமல் போய் விடுகிறது சூழ்ச்சியாளர்கள், அதர்ம வாதிகள் அவர்களைப் போன்றவர்கள் இடத்தில் ஆலோசனை செய்து, தாங்கள் வெற்றிபெற, தங்களுடைய செயலை வெற்றி செயலாக மாற்ற தொடர்ந்து தங்களைச் சார்ந்தவர்களுக்கும் சூழ்ச்சி ஆலோசனை பெற்றுக் கொள்கின்றனர். 



 ஆனால் நல்லவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒற்றை சிந்தனையை தங்களுக்கு உடன்பட்ட செய்தியை வைத்து எந்தவிதமான ஆலோசனையும் அது சார்ந்த நிபுணர்கள் இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவு இல்லாத காரணத்தால் அல்லது இப்படி ஆலோசனை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியாத காரணத்தினால், தங்களின் செயலிலே தங்களை வருத்திக் கொள்கின்றனர். முடிவில் இது விதி என வருந்தி கொள்வதோடு, கடவுள் செயல் என தன்னைத்தானே நொந்து கொள்கின்றனர். ஆனால் முட்டாளும் ‘அவன் செயல்’ என்பதைவிட ‘அவனவன் செயல்’ என்பதிலேயே முடிவாக இருக்கிறார். 



ஆகவே நண்பர்களே அவனவன் செயல் தான் வெற்றி தோல்விக்கு காரணம். வெற்றியாளர்கள் வெற்றி பெற ஆலோசனை எடுப்பதில்லை. வன்மம் உள்ளவர்கள் வன்முறையாளர்கள் அதர்மவாதிகள் அவர்களுக்கு ஏற்ற நபர்களில் ஆலோசனையைப் பெற்றுக் கொள்கின்றனர் (காலதாமதம் இல்லாமல்) என்பதுதான் எங்களுடைய உளவியல் ஆய்வு! கெட்டவன் தன்னுடைய பொய்யை உண்மை படுத்த முயற்சிக்கிறான். நல்லவன் உண்மையை வெளியே சொல்லாமல் மறைத்துக் கொள்கிறார். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதிலேயே தன்னுடைய வாழ்க்கையை முடக்கி முடித்துக் கொள்கிறான். 



ஆகவே நல்லவனாக இருக்க வேண்டுமென்றால் கடின முயற்சியும் உண்மையை உரக்கச் சொல்லும் ஆற்றலும் தீயவனை கண்டு பயந்து ஓடாமல் எதிர்த்து நிற்க வேண்டும். துணிந்தால் தான் துக்கம் போகும். துணிந்தவனுக்கே உலகம்! உண்மையை பேச ஒரே வழி – பொய் பேச ஆயிரம் வழி என புரிந்து வந்தவன் கெட்டவன். அதனால்தான் கெட்டவன் வாழ்கிறான் நல்லவன் வீழ்கிறான். இது அவன் செயலா இல்லை அவனவன் செய்யலா? நான் நல்லவன் என நிரூபிப்பதற்கு முயற்சி செய்பவன் தேர்ந்தெடுத்த முட்டாள். காரணம் கெட்டவன் யாரிடத்திலும் தன்னை கெட்டவனாக காண்பிப்பதில்லை. நினைப்பதும் இல்லை. கெட்டவன் கையில் ஆயிரம் பொய் ஆதாரங்கள்… நல்லவன் கையில் ஒரே ஒரு ஆதாரம்… 



அதை மாற்றிச் சொன்னால் அந்த உண்மையான ஆதாரம் பொய்யான ஆதாரமாக மாறிவிடும் என புரிந்தவன் தான் கெட்டவன். பெரும்பாலானவர்களுக்கு உண்மை என்றால் என்ன, பொய் என்றால் என்ன என்ற வித்தியாசம் தெரிவதில்லை! ஒரு மனிதனைப் பார்த்து அழகாக இருக்கிறாய் என்று என்று சொல்வதை உண்மையாளர்கள் பொய் என பார்க்கிறார்கள். இதே போல தான் ஒவ்வொரு செயலையும் அது அப்படி இல்லை அதனால் அது பொய் என இவர்களாகவே அர்த்தம் வைத்துக்கொண்டு ஒவ்வொரு செயலையும் சுய முத்திரை இட்டுக் கொள்கின்றனர். 



 ஆனால் மற்றவர்களோ ஒரு செயலை ஒருவரை அழகாக அலங்கார படுத்தி வார்த்தைகளாலும் செயல்களாலும் வெற்றி பெறுகின்றனர். ஆனால் உண்மை அவர்களுக்கு இருப்பதை இருப்பது போல் சொல்ல தெரியாமலும், இருப்பதை இருப்பது போல் பார்க்க தெரியாமலும் இவர்களாக கற்பனை செய்து கொண்டு நேரடியாக இவர்களுக்கு தோன்றியதை சொல்லி மற்றவர்களிடத்தில் துவண்டு போய் விடுகின்றனர். ஏன் இப்படி என்றால் அவர்கள் பொய் உண்மைக்கு மாற்றமாக சொல்கின்றனர். நான் இருப்பதைத்தானே சொன்னேன் இதில் என்ன தவறு உள்ளது நான் எப்பொழுதும் எதையும் மறைக்க மாட்டேன், நடிக்க மாட்டேன் உள்ளதை உள்ளபடி தான் சொல்வேன் இது என்னுடைய செயல் என்னுடைய தன்மை யாருக்காகவும் நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என சொல்லி மாட்டிக் கொள்கின்றனர் (சிக்கலில்).. 



 உண்மை சரியானது, நேர்மையானது. அதை பிறரிடத்தில் சொல்லும்பொழுது யாருக்காக யாரிடத்தில் எதற்காக எப்படி சொல்ல வேண்டும் என்ற உளவியல் விதிமுறைகள் தெரியாமல் தங்களை தாங்களே சிக்கலில் சிக்க வைத்துக் கொள்கின்றனர். சூழ்ச்சியாளர்கள் என்றாலே சூழ்ந்து அவர்கள் குறைகளை பூதக்கண்ணாடி வைத்து கண்டுபிடித்து அதை பிறரிடத்தில் நயமாக நம்பும்படி வார்த்தைகளை பயன்படுத்தி உணர்ச்சிகளை பயன்படுத்தி சொல்லக்கூடிய திறன் பயிற்சி பெற்றவர்கள்தான். ஆனால் உண்மையாளர்கள் ஒற்றைப் பார்வையில் மட்டும் வாழ்ந்து சுற்று பார்வையில் தோல்வி அடைந்து விடுகின்றனர். இதனாலேயே சமூக சிக்கலையும் மனச்சிக்கலையும் செக்ஸ்வீடியோ ஏற்படுத்தி விடுகிறது. 



 சமீபகாலமாக பல்வேறு விதமான பிரச்சினைகள் காவல்துறை அளவிலும் நீதிமன்றங்கள் அளவிலும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் பகையுணர்வு, போட்டி.. இந்த கண்ணோட்டத்தில் மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் உற்று நோக்கினால் அவர்களுக்கு ஒருவிதமான மன பாதிப்பு இளம் வயதில் இருந்து ஏற்பட்டு இருக்கலாம், அல்லது ஏதோ வாழ்வியல் அதிர்ச்சியினால் தோல்வியடைந்த மனநிலையில் அவர்களுக்கு தன் மேலுள்ள வெறுப்புணர்வு அடுத்தவர்கள் மீது இவ்வாறான பிரச்சினைகளை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கலாம். இவர்களை போட்டியாளர்கள் பொறாமைக்காரர்கள் என்று முத்திரை குத்திவிட அவர்களுக்கு உளவியல் பாதிப்பு உள்ளது என்பதை புரிய வைத்து நான் புரிந்து கொண்டு அதற்கான முறையில் உளவியல் சிகிச்சை எடுப்பதற்கு வழி முறைகள் செய்ய வேண்டும்.



 இவ்வாறு செய்யாமல் அவர்களை கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவு, அவர்கள் கொலை செய்யும் குற்றம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் குற்றம் போன்றவற்றை தங்களை அறியாமலேயே செய்து விடுகின்றனர். ஆனால் ஒரு பொழுதும் தான் ஒரு மன பாதிப்புக்கு உள்ளாகி உள்ளேன் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பது சமூக குற்றத்தை தடுக்கும் ஒரு புனித சேவையாகும். போது நலன் கருதியே இந்த பதிப்பினை வெளியிடுகிறோம்! 

 எம் எஸ் கே லைப் கிளீனிக் பவுண்டேசன் 
தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்