கெட்டவனுக்கும் நல்லவனுக்கும் உளவியல் வேறுபாடு

படிக்கவே பிடிக்காது.. படிப்பதற்கு விருப்பமில்லை… நீ விரும்பினாலும் படிக்க முடியாது.. நீ படிக்க விரும்பக் கூடாது… வேலைக்குப் போவது சிரமமாக உள்ளது… லீவ் இல்லாமல் எத்தனை நாளைக்கு வேலை பார்ப்பது கஷ்டமாக உள்ளது… இனி நீ படிக்க வேண்டாம்.. நீ விரும்பினாலும் படிக்க வேண்டாம்.. நீ வேலைக்கு போக வேண்டாம் நீ விரும்பினால் வேலை கிடைக்காது… இதுதான் இயற்கையின் பிரதிபலிப்பு விதி



கெட்டவன் என்று அறியப்படுபவன், செயல் செய்துகொண்டு கெட்டதை முறையாக யாரையும் எதிர்பார்க்காமல் செய்கின்றான்… ஆனால் தங்களை நல்லவர்கள் என்று சொல்கிறவர்கள் செயலை செய்யாமல் சிந்தித்துக்கொண்டு பிரார்த்தனை செய்துகொண்டு எதிர்பார்த்துக்கொண்டு நான் இவ்வளவு நல்லெண்ணம் வைத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு நடக்கும் என்ற சிந்தனையில் செயலை மறந்து கற்பனை சார்ந்த எதிர்பார்ப்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.. கெட்டவனுக்கும் நல்லவனுக்கும் மிகச்சிறிய உளவியல் வேறுபாடு என்னவென்றால்… நல்லவன் செயலை செய்யாமல் பிரார்த்தனை நம்பிக்கை எதிர்பார்ப்பு நல்லெண்ணம் வைத்திருக்கிறேன், அது நல்லதாக நடக்கும் என்ற சிந்தனைப் போக்கில் தானும் வாழ்ந்து பிறர் எப்படி வாழ் என அறிவுரை கூறுகிறான்.. ஆனால் கெட்டவன் செயலை செய்ய திட்டமிடுகிறான். அதற்கேற்ப பேசுகிறான். 



அது தொடர்பான மனிதர்களே ஆலோசனை பெற வைத்துக் கொள்கிறான். அதனால் தான் வெற்றி அடைகிறான்… நல்லவன் என்பதற்காக சிங்கம் இவனை சாப்பிடாமல் இருக்காது.. அதேபோல கெட்டவனை தேடிக்கொண்டு சிங்கம் உண்ணாவிரதம் இருக்காது.

ஒரு பெண் இன்னொரு பெண்ணைக் காணும் பொழுது.. முதலில் பலத்தை விட்டு விட்டு ….. பலவீனத்தை கண்டறிந்து அந்த பலவீனத்தின் மூலமாக பலத்தையும் நிராகரித்தது மதிப்பீட்டை குறைத்து செயல்படுகிறார்கள் ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அந்தப் பெண்ணின் பலத்தை கணக்கிட்டு பலவீனத்தை நிராகரித்துவிட்டு பலமாக உள்ளதை மதிப்பீடு செய்கிறார்கள். மன வாழ்க்கை … ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை உடல் வாழ்க்கை என்று உருவகப் படுத்திக் கொண்டு செயல்படுவதால் மன வாழ்க்கை… மன அழுத்த வாழ்க்கையாக மாறிவிடுகிறது.. மணவாழ்க்கை மகிழ்ச்சியாக மாற்ற திருமண உளவியல் ஆலோசனை மற்றும் சிகிச்சை அவசியம்!



தெரியும் என்ற சொல்லில் ஒற்றை அர்த்தத்தை புரிந்து கொண்டே எல்லாம் புரிந்து கொண்டது என்ற மன போர்வையில் பலர் வாழ்கின்றனர்.. தெரிதல் என்ற சொல்லில்.. சொல் தெரிதல் பெயர்கள் அர்த்தம் தெரிதல் செயல் அர்த்தம் தெரிதல் சொல்லின் இயக்கம் அறிதல்.. இயக்கத்தைக் குறிக்கும் சொல் செயல் … குறிப்பிடப்பட்ட அந்த சொல் எதனை செயல் அர்த்தமாக கொண்டுள்ளது … சொல்லின் ஆரம்ப செயல் தன்மை என்ன இவ்வாறு ஒற்றைச் சொல்லின் உள்ளார்ந்த செயல் தன்னிலையை தன்மையை விளக்கி தெரிதல்.. போன்ற அதனுடைய செயல் தன்மையை புரிதலும் தான் அந்த குறிப்பிட்ட சொல்லின் புரிதல் என்ற வார்த்தைக்கு கட்டுப்படும் அல்லது உட்படும் ‌. ஆகவே எதையும் சொல்ல அளவில் தெரியும் என்பதை விட செயலளவில் என்ன தெரியும் எப்படித் தெரியும்.. எங்கிருந்து தெரியும் போன்ற பல தெரியும்களை தெரிந்து கொண்ட பின் தான் தெரியும் என்பதை பயன்படுத்த வேண்டும் … 



இதுவே உளவியலில் மொழியை அறிதல் செயல் அறிதல் சிறப்பு அறிதல் நடத்துதை போன்ற வற்றின் நோக்கமாக உள்ளது தெரியும் என்ற சொல்லில் ஒற்றை அர்த்தத்தை புரிந்து கொண்டே எல்லாம் புரிந்து கொண்டது என்ற மன போர்வையில் பலர் வாழ்கின்றனர்.. தெரிதல் என்ற சொல்லில்.. சொல் தெரிதல் பெயர்கள் அர்த்தம் தெரிதல் செயல் அர்த்தம் தெரிதல் சொல்லின் இயக்கம் அறிதல்.. இயக்கத்தைக் குறிக்கும் சொல் செயல் … குறிப்பிடப்பட்ட அந்த சொல் எதனை செயல் அர்த்தமாக கொண்டுள்ளது … சொல்லின் ஆரம்ப செயல் தன்மை என்ன இவ்வாறு ஒற்றைச் சொல்லின் உள்ளார்ந்த செயல் தன்னிலையை தன்மையை விளக்கி தெரிதல்.. போன்ற அதனுடைய செயல் தன்மையை புரிதலும் தான் …. அந்த குறிப்பிட்ட சொல்லின் புரிதல் என்ற வார்த்தைக்கு கட்டுப்படும் அல்லது உட்படும் ‌. ஆகவே எதையும் சொல்ல அளவில் தெரியும் என்பதை விட செயலளவில் என்ன தெரியும் எப்படித் தெரியும்.. எங்கிருந்து தெரியும் போன்ற பல தெரியும்களை தெரிந்து கொண்ட பின் தான் தெரியும் என்பதை பயன்படுத்த வேண்டும் … இதுவே உளவியலில் மொழியை அறிதல் செயல் அறிதல் சிறப்பு அறிதல் நடத்துதை போன்ற வற்றின் நோக்கமாக உள்ளது. 



மண்ணுக்குள் இருப்பது என்னவென்று தோண்டிப் பார்க்க வேண்டிய தேவையில்லை.. நீர் ஊற்றிப் வளர்த்தாலே உள்ளே இருந்து வெளியே வருவது நெல்லின் விதை அல்லது முள்ளின் விதையா என்பது தெரிந்துவிடும் பிரபஞ்சம் விதையின் உயிரணுவை வெளிப்படுத்தி விடும்.. அதே போல தான்.. மனிதர்கள் யாரையும் நல்லவரா கெட்டவரா என தோண்டி துருவி ஆராய வேண்டிய அவசியமில்லை.. நல்லதை மட்டும் செய்து கொண்டு பார்த்தால் போதும்…. சில நாட்களிலேயே அவர்கள் தங்களை வெளிப்படுத்துகிறார்கள் அவர்கள் விஷ ஜந்தா அல்லது நேசத்தை ஜந்தா.. ஆகவே உண்மையை நன்மையை கீரையைப் போல பிறரை வளர்க்க ஊற்றி வந்தால் போதும் நல்லவர்கள் ஓட்டி விடுவார்கள்.. நல்லவர் அல்லாதவர்களை ஓடிவிடுவார்கள்.. நாம் பிரபஞ்சத்தில் நன்மையை மட்டுமே செய்து வந்தால் நம்முடைய நன்மை அவர்களுடைய நிஜ விசிட்டிங் கார்டு என்கின்ற அவர்கள் வந்த நோக்கத்தை… அவர்களுக்குள் மறைத்து வைத்திருந்த அந்த நோக்கத்தை…தெரிவித்துவிடும்..



சிந்தனை சோம்பேறிகள் செயல் சோம்பேறிகள் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பாத சோம்பேறிகள்… இவர்கள் எல்லாம் கற்பனையில் மிகப் பெரிய கடலாக இருக்கின்றன.. தங்களை செயலுக்கு உட்படுத்துவது விட கனவு கண்டு இன்பத்தை அடைந்து கொண்டு.. அது நிலத்தில் நிஜத்தில் கிடைக்காத பொழுது அல்லது அதைப் பெற முடியாத போது தன் மீது கோபமும் பிறர் மீது கோபம் கொண்டு எல்லாம் பொய் எல்லாம் ஏமாற்றி விட்டனர் என்று அடுக்கு மொழியில் ஆயிரம் புகார்களை கூறிவிட்டு தங்களை மிகச்சிறந்த முயற்சியாளர் ஆனால் உலகம் ஏமாற்றிவிட்டது என தங்களை நல்லவராக காண்பிக்கும் மனநோய் எப்பொழுது அதிகமாக உருவாகி வருகிறது.. இந்த நோயை பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் ஏற்படுத்துகின்றனர்.. ஆகவே குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை கற்பனை வீரர்கள் ஆனால் செயல் சோம்பேறிகள் என்பதை மறந்து விடுகின்றனர். 



இசையை வெளிப்படுத்துவதற்கும் உருவாக்குவதற்கும் இசை குறியீடு என்ற மொழி உள்ளது.. இசை கேட்பவர்களுக்கு அது சப்தம்.. அந்த சப்தத்தை உருவாக்குவதற்கும் உருவாக்கிய சப்தத்தை திரும்ப மீண்டும் உருவாக்குவதற்கு குறியீடுகள் மூலம் குறிப்பு எடுக்கப்பட்டு எழுதப்பட்டு உருவாக்கப்படுகிறது.. இதே போலதான் ஒவ்வொரு நிகழ்வுகளும் மனதளவில் அறிவாக அன் கான்சியஸ் என்கின்ற மறைமுக நினைவு பகுதியின் மூலமாக குறியீடாக பாதைஇடப்பட்டு அந்த பாதையிலே அதுபோன்ற ஒத்த நிகழ்வில் இருக்கும்பொழுது எண்ணங்களும் செயல்களும் செலுத்தப்படுகிறது.. இதனால் தான் மொத்த நடத்தைகளுக்கு ஒரே மாதிரியான எதிர் செயல் நடத்தைகள் வெளிப்படுத்தப்படுகிறது.. ஒவ்வொரு மனிதனுடைய நடத்தைக்கும் பல்வேறு ஒத்த நிகழ்வுகள் நடந்ததனுடைய வெளிப்பாடு தான் காரணமாக இருக்கும்.. இதை கண்டறிவதற்கும் மாற்றியமைப்பதற்கு உளவியல் பகுப்பாய்வு உளவியல் ஆய்வு உளவியல் மாற்று சிகிச்சை அவசியம்.. 



இதுபோன்ற மறைமுக நடத்தை பதிவுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் என்பதை உளவியல் நிபுணர்களும் உளவுத்துறை அதிகாரிகளும் நன்கு அறிவர் ஆகவே இசைக் கருவிகளோடு போல் வாழ்ந்தவன் இசையை இசைக்க கற்றுக்கொள்கிறான். அதேபோல மனதோடு வாழ்க்கை வாழ்ந்து வருகிறவர்கள் மனதை கற்றுக் கொள்வதில்லை அதாவது மன இயக்கத்தை தெரிந்து இயக்கத்தை தெரிந்துக் இயக்க கற்று கொள்வதில்லை.. மனதை மாற்றி அமைத்து வெற்றியடைய உளவியல் பகுப்பாய்வு திறனாய்வு ஆலோசனை-சிகிச்சை பெற எங்களோடு இணைந்து கொள்ளுங்கள்.



நோயாளிகளுக்கு நோயின் தன்மை அதன் தீவிரத் தாக்குதல் அதனுடைய பிந்தைய விளைவு இவற்றை முறைப்படுத்தி சொல்வதையே இந்த உலகம் நெகட்டிவ் எதிர்மறை என்று பட்டியலிடுகிறது.. அப்படியானால் அந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் இவர்களுக்கு ஏற்ப பாசிட்டிவ் என்கின்ற நேர்மறையாக எப்படி பேசுவது என்ற கேள்வியும் எழுகிறது.. நோயாளி… தன்னுடைய நோயைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் அந்த நோயை மறைத்து அவருக்கு நோய் இல்லை என்று சொல்வது பாசிட்டிவா? அல்லது நோய் ஒன்றும் செய்யாது உங்களுக்கு விருப்பமான முறையில் உணவு கட்டுப்பாடு உணர்வு கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் உங்களுடைய விருப்பத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள் என்று சொல்வது பாசிட்டிவா? அல்லது நோயாளியிடம் ஜாலியாக பேசிக்கொண்டே மற்றவர்களை அதாவது… அடுத்து உள்ள நோயாளிகளை கவனிக்காமல் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்காமல்.. இந்த குறிப்பிட்ட நோயாளியை ஜாலியாகவே பேசி பொழுதை களித்தாள் எப்படி அவருக்கு குணமாகும்.. 



ஆகவே மருத்துவ மனோதத்துவ நிபுணர்கள் இடத்தில் உண்மை நிலையை அறிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ள முயலும் பொழுது நோயில் இருந்து விடுபடமுடியும்.. ஆகவே உண்மை நிலையை அறிவது தான் பாசிட்டிவ்.. என்கின்ற நேர்மறை.. உண்மையை மறைத்து எனக்காக பொய் சொல் என்பது எதிர்மறை.. இந்த எதிர்மறை செயலால்.. வரும் பின் விளைவுகள் எதிர்மறை செயலை செய்யச் சொல்லி வற்புறுத்திய அந்த நபரையே சாரும்.. ஆகவே நோயியல் வாழ்வியல் வியாபாரயியல் தொழிலியல் இவற்றில் உண்மைக்கு மட்டுமே உண்மையான வளர்ச்சி உண்டு என்பதை புரிந்து கொள்வதில் தான் உள்ளது உளவியல் புத்தி நுட்ப வளர்ச்சி.

MSK Muhaiyuddin, Founder & CEO, MSK Life Clinic Foundation


Comments

Popular posts from this blog

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

மூளையா? மனமா? மனபாதிப்பினை சரிபடுத்துவது எவ்வாறு? அறியுங்கள்!