மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 



 ‘மனஅழுத்தம்’ என்பது இப்பொழுது வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுகிறது! இதற்கு காரணம் கண்டறிவதை விட அதை குணப்படுத்துவது தான் சிறந்த வழி என்று சொல்கிறது மனோதத்துவம்!! பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்திற்கு ஒரே ஒரு நாளில் தீர்வு வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்… 



ஆனால் இந்த மன அழுத்தம் ஏற்படுவதற்கு எத்தனை ஆண்டுகாலம் ஆகி இருக்கும்? அல்லது எத்தனை ஆண்டு கால வாழ்வியல் பிரச்சினைகள், தொழில் சார்ந்த பிரச்சினைகள், குடும்பம் சார்ந்த பிரச்சினைகள், நட்பு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பணம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முயல்வதில்லை! ஆகவே ‘மன அழுத்தம்’ என்பது பல ஆண்டுகால பிரச்சினைகளின் வெளிப்பாடு என்பதால் இதனை உடனடியாக தெரிந்து கொள்ள முடிவதில்லை. 



ஆனால் இதை மருந்தில்லா மருத்துவம் மூலம் குணப்படுத்த முடியும். இது குணமாகும் கால அளவு என்பது மன அழுத்தம் உருவான கால அளவு, அது எத்தனை மாதங்களாக அல்லது ஆண்டுகளாக நீடித்து உள்ளது என்பவற்றைப் பொறுத்து மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை தேவைப்படலாம். இந்த மருந்தில்லா மருத்துவ முறையானது முற்றிலும் மருந்துப் பொருட்கள் இல்லாத மருத்துவமுறை உளவியல் சிகிச்சையாகும்! உங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த பதிவு! 

 மேலும் விவரங்களுக்கு: 

 எம் எஸ் கே லைஃப் பவுண்டேசன் 
தொலைபேசி: 93600 53930

Comments

Popular posts from this blog

Interview with MSK

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people