அறிவுரைகளும் ஆபத்தும்

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 


 இன்று பெரும்பாலான அறிவுரைகள் யாருக்காக கொடுக்கப்படுகின்றன என்று உளவியல் ரீதியாக ஆய்வு செய்யும்பொழுது யோசிக்க முடியாத அளவுக்கு ஒரு மறைமுக செயல் நடந்துக் கொண்டிருக்கிறது. பொருளை இழந்தவன் இடத்தில், கவலைப்படாதே கிடைக்கும் என்று ஆலோசனை அறிவுரையாக வழங்கப்படுகிறது. யாருமே பொருளை எடுத்தவர்களுக்கு தண்டிக்கும் ஆலோசனை வழங்குவது இல்லை. காரணம் சற்று உற்று நோக்கினால் பொருளை எடுத்தவனிடத்தில் தண்டனை பற்றி பேசினால் வெறுத்து ஒதுங்கி விடுவான். அவனிடத்தில் இருக்கின்ற பொருளாதாரம் இவர்களுக்கு வராது என்பதை புரிந்து வைத்துள்ளனர்… 



 இந்த உலகத்தில் அட்வைஸ் எல்லாம் பாதிக்கப் பட்டவனுக்கு மட்டும் தான் … பாதிப்பை ஏற்படுத்தி அவனுக்கு தண்டனை இல்லை… இதை புரிந்து கொண்டவன் தான் எந்த செயலிலையும் தைரியமாக தவறை தவறில்லை என்று செய்கிறான். தவறு செய்தவனுக்கு யாரும் அறிவுரை கூறுவதில்லை. இழந்தவனுக்கு தான் அறிவுரை… ஒருவகையில் பார்த்தால் பல தர்மங்களைச் செய்யக்கூடிய ஒருவர் கூட சொந்த பணத்தில் செய்ததில்லை… இவர்கள் அடுத்தவர்களுடைய பணத்தை அபகரித்துச் செயல் செய்பவர்கள் தான் என்பதும் ஒரு மறைமுகமான உளவியல் உண்மை. 



 அபரிமிதமான அடுத்தவர்களுடைய பணத்தை, தன் பெயரில் செலவிட கூடியவர்கள் கஸ்டமராக உள்ளனர். எனவே கஸ்டமரை பகைப்பதை விட கஷ்டப்படுகிறவரை ஆறுதல் என்ற பெயரில் அறிவுரை கூறினால், அதற்கான கூலியும் கொடுத்து விடுகிறான். அடுத்தவர் பணத்தை எடுத்து தன் பெயரில் தானம் செய்கிற அவனும் கஸ்டமர் ஆகிவிடுகிறான். இதுதான் நடைமுறை நிதர்சன மறைமுக உளவியல் உண்மை! சொந்தப் பணத்தில் கடவுளுக்கு செலவு செய்பவர்கள் குறைந்த அளவு பணத்தை ஒரு வகையில் முதலீடு செய்கின்றனர். ஆனால் தவறான வகையில் பொருளை சம்பாதித்தவர் தாராளமாக செலவு செய்கிறார். இந்த முதலீடு… தவறை தண்டிக்காமல் இருப்பதற்கான முதலீடு! 



முதலில் செலவு செய்பவருக்கு என்பதற்கான முதலீடு… மொத்தத்தில் இருவரும் முதலீடு செய்கின்றனர். ஒன்று பணம் பெற… இன்னொன்று தவறை மறைக்க… இதன்மூலம் இவர்கள் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறார்களா, கடவுளை ஏமாற்றுகிறார்களா… இல்லை மனிதர்களிடத்தில் தான் பக்தி காரன் என்பதை வெளிப்படுத்துகிறார்களா… உண்மையை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். நல்லவனை பகைத்துக்கொள்ள மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் கெட்டவனை பகைத்துக் கொள்ளாமல் நட்பு பாராட்டவே விரும்புகின்றனர். இப்படிப்பட்ட நல்லவன் போர்வையில் கெட்டவனுக்கு வழிபடுபவர்கள் தான் மறைமுகமாக கெட்டவனை உருவாக்குகின்றனர். . நல்லவனே சமாளிப்பது மிகவும் சுலபம் என்பதால் அவனுக்கு ஒற்றை அறிவு மட்டுமே செயல்படும். கெட்டவனை சமாளிப்பது சிரமம் காரணம் அவனுக்கு பன்முக அறிவு உள்ளது. அவனிடத்தில் சிக்கிக் கொண்டால் தோற்றுவிடுவோம் என்பதை புரிந்து வைத்துள்ளனர். 



இப்படி நல்லவனை புரிய விரும்பாதவர்கள் கெட்டவனை புரிந்து அவனுக்கு ஏற்ப செயல்படுவதுதான் உலகத்தின் பெரும்பாலான அழிவுக்கு காரணம் என்பதை தான் பாதிக்கும் வரை புரிந்து கொள்ளும் அறிவு இல்லாதவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் தான் அடுத்தவர்களுக்கு எல்லாம் கடவுள் செயல் என்று அறிவுரை கூறுவார்கள். தனக்கு வந்து விட்டால் மட்டுமே இவன் இப்படி செய்துவிட்டான் என தூற்றுவார்கள். ஆகவே நல்லது நல்லது என்றும் கெட்டது கெட்டது என்று சொல்லக்கூடிய மனிதர்கள் தான் இன்றைய உலகின் அறிவு மன்னர்கள்… இவர்களால்தான் உலகம் வெற்றிபெறும்… அப்படிப்பட்ட மனிதர்களாக வாழ உங்களை உறவுகள் பாதைக்கு அழைக்கிறோம்!

 

 MSK Life Clinic Foundation 
Cell: 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்