பணக்காரன்… ஏழைகள்…

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!

பணக்காரன் எல்லாம் வியாபாரி… ஏழைகள் எல்லாம் தொழிலாளி…. எங்களுடைய ஒரு ஆய்வு அடிப்படையான உளவியல் நடத்தைகளின் படி, உண்மை என்னவென்றால்… ஏழையை மாற்ற முடியாது ஆனால் ஏமாற்றலாம்… பணக்காரனை ஏமாற்ற முடியாது ஆனால் மாற்றலாம்… 

ஏழை பழமை வாதத்தில் பழக்கப்பட்டு பிறரை நம்ப வைப்பதில் ஆனந்தப் பட்டுக் கொண்டே இருப்பான்..



ஆனால் பணக்காரன் ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டிருக்கிறார் உலகத்தை கையாளும் திறனை பெற்றுக்கொள்ள அத்துறை சார்ந்த உங்களுடைய ஆலோசனையை பயன்படுத்தி  வெற்றி பெற்று சமூகத்தில் தன்னை வளர்ச்சிப் படுத்திக் கொண்டே இருப்பான்..

ஏழைக்கு தேவை ஆறுதல்... ஆறுதலில் இன்பம் அடைந்து கற்பனையில் காலம் பிடித்துக் கொண்டிருப்பது சுகமாகவே... அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்..

பணக்காரனுக்கு தேவை அறிவு செயல் திருத்த வழிகாட்டல் செயல்ஆலோசனை..

ஒவ்வொரு கூலி பெறும் நபர்களும் கூலி பெறும் நேரத்தில் கூட மனதை ஈடுபடுத்தாமல் கனவுகண்டு வாழ்வார்கள்..

ஆனால் கூலி கொடுக்கும் தொழிலதிபரோ வேலை செய்யும் நேரத்திலும் வேலையை முடித்த நேரத்தில் தன்னுடைய தொழில் சார்ந்த திறனை அதிகப்படுத்த செயல் நுட்ப நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக் கொண்டே இருப்பார்கள்...



ஆனால் ஏழையும் சரி கூலித்தொழிலாளியின் சரி நான் ஏன் பிறரிடத்தில் ஆலோசனை பெற வேண்டும் எனக்கு எல்லாம் தெரியும் என சொல்லிக்கொண்டு தனது உயிர் மூலமாகிய டிஎன் எவையும் தனது சந்ததியின் டிஎன் எவையும் அறிவற்ற முறையில் செயலற்ற முறையில் தூக்கி வைத்துக் கொண்டேன் பெருமையில் கனவில் யாரோ கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் காலத்தை கடத்திக் கொண்டே பிறரை நம்ப வைத்துக் கொண்டு வாழ்வான்...

தனக்கு கிடைக்கவில்லை என்றால் இதற்கு காரணம் கடவுள் கிரகம் பெயர் ராசி மனை ராசி மனைவி ராசி எண்கணித ராசி என அனைத்து ராசிகளையும் யோசித்துக்கொண்டு வெற்றிக்கு காரணம் நான் இல்லை இவர்கள்தான் அவர்கள்தான் என நம்பிக்கொண்டு மற்றவர்களையும் நம்ப வைத்துக் கொண்டு கற்பனையில் காலத்தை கம்பீரமாக கழித்துக்கொண்டு பயனற்ற சந்ததியை வளர்த்துக் கொண்டிருப்பான்.

உற்பத்திப் பொருளை ரசிப்பவன் ஏழை கூலி தொழிலாளி.. பொருளை உற்பத்தி செய்வது எப்படி என சிந்திப்பவன் செயல்படுபவன் அறிவு ஆலோசனை பெறுபவன் பணக்காரன் என்ற தொழிலதிபர்...



இதுதான் தொழிலாளி தொழிலதிபர் உளவியல் செயல் இயக்க வேறுபாடு..

திரைப்படத்தை பார்ப்பவன் தொழிலாளி.. நடிகரை ரசிப்பவன்.. நடிகையை பார்த்து கனவு காண்கிறவன் தொழிலாளி..

நடிகரையும் நடிகர்களை பார்க்கும் மனிதர்களையும் ஒருங்கிணைத்து தொழிலாக உருமாற்றம் செய்பவன் தான் திரைப்பட தயாரிப்பு தொழிலதிபர்..

ஒவ்வொருவரும் தன் வளர்ச்சி தன்னறிவு இவற்றைப் பற்றி சிந்திக்காமல் அரசியல்வாதிகளை பற்றியோ ஆன்மீகவாதிகளின் பற்றி அல்லது நடிகர்களை பற்றி அல்லது விளையாட்டு வீரர்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் உளவியல் இயக்கத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளனர்..  



என்பதை புரிந்தவர்கள் மட்டுமே பணக்காரனாக பெரு நிறுவன அதிபராக மாற முடியும் என்பதுதான் உளவியல் சமூகவியல் நிலைத்தன்மை MSK theory.

உற்பத்திப் பொருளிலிருந்து உழைப்பாளன் அந்நியப்படுவதை ‘ஃபெட்டிஷிசம்’ (சரக்கு வழிபாடு) என்பார்

இந்த கருத்துக்களை பார்க்கும் பொழுது பல பேருக்கு பல சிந்தனைகள் ஏற்படலாம். ஆனால் குழப்பமான சிந்தனைகள் மட்டுமே ஏற்படும்.. உண்மையை உற்று நோக்கினால், ஒவ்வொரு பணக்காரரும் அவர் வியாபாரியாக இருக்கலாம், தொழிலதிபராக இருக்கலாம். 



இவர்களுடைய பார்வை அறிவு, ஒற்றை பார்வை அல்லது ஒற்றை அறிவு அல்ல.. அவர்களுக்கு அறிவுசார்ந்த தெளிவின்மை ஏற்பட்டால், உடனடியாக அதற்கான தெளிவை – நுணுக்கத்தை பெற்றுக் கொள்ள, பணம் செலவழித்து அந்தந்த துறை சார்ந்த நிபுணர்களை ஆலோசகராக வைத்துக்கொண்டு, வெற்றியை விலை கொடுத்து வாங்குகின்றனர்… ஆனால் ஏழைகளாக இருக்கக்கூடியவர்கள், சொந்த அறிவு பெரியது என்ற எண்ணத்திலும், அதற்கடுத்தது எல்லாம் அவன் செயல் என்ற நம்பிக்கையிலும் அதையும் மீறி குழப்பம் ஏற்பட்டாலும் பயம் ஏற்பட்டாலும் அவர்களைப் போல உள்ளத்தில் அறிவுரையை பெற்றுக்கொண்டு அவர்களும் தனது இலவசமான அறிவுரையை ஏராளமாக வழங்கிவிட்டு அறிவுரை பெறுபவர்களை அப்படியே செய்யச் சொல்லி விடுகின்றனர்.. 



விளைவு தோல்வியை காணும்பொழுது முற்றிலுமாக அனைத்தும் இழந்த நிலையில் இருக்கின்றனர்.. இவர்கள் மூன்றாம் சக்தி அதாவது இவர்களை கடவுள் என்கின்ற ஒருவர் இவர்களின் தேவைகளை கணக்கெடுத்து இன்ஸ்டால்மென்ட் அல்லது மொத்தமாக வழங்கி விடுவார் என்ற இருட்டு – குருட்டு நம்பிக்கையில் வாழ்க்கையை நடத்துகின்றனர்.. ஆனால் பணக்காரன் சிரமம் ஏற்பட்டால், புத்தியை நிபுணர்களிடம் பெற்றுக்கொண்டு, செயல்பாட்டில் ஈடுபடுகிறான். மற்றவர்கள் கேட்டால் இது கடவுள் செயல் என சொல்லிவிட்டு இவன் தன் வேலையை தானே பார்க்கிறான். ஒவ்வொரு வாழ்க்கை சூழல் மாறும் பொழுது, அதற்கான அறிவை நிபுணர்களிடத்தில் பெற்றுக் கொள்கிறார்.



 உதாரணமாக தங்க விற்பனையை அதிகப்படுத்த, சுப முகூர்த்த நாள்… தங்கம் வாங்க சிறந்த நாள் போன்ற நாட்களை உருவாக்கி வெற்றி பெறுகிறான். அதேபோல மக்களுக்குத் தேவை என்ன என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப உற்பத்தியை துவக்குகிறார். மேலும் ஒவ்வொரு நாளையும் சிறப்பு நாளாக மாற்றி, அதை மக்களுக்கு சொல்லி, தன் வியாபாரத்தை பெறுகிறான். தன் வியாபாரத்திற்கு கடவுளை நம்புவதில்லை… ஆனால் தன்னுடைய வியாபார வாடிக்கையாளர்களை கடவுள்தான் கொடுக்கிறார் என்ற நம்பிக்கையை உருவாக்கிவிட்டு தன்னுடைய வியாபார உத்தியை கவனமாக வைத்துக் கொள்கிறார். 



 இதே போல தான் தன்னுடைய குழந்தைகளுக்கு டியூஷன் கல்வியை விட சிறந்த சர்வதேச கல்வியை தனிப்பட்ட முறையில் கொடுக்கிறார்கள்.. ஆனால் ஏழைகள் அனைவரும் பின் தொடரக் கூடிய டுட்டோரியல், டுயூஷன், ஸ்பெஷல் கிளாஸ் போன்றவற்றை தன்னுடைய குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதுபோன்ற பல செய்திகளையும் நிகழ்வுகளையும் நடத்தைகளின் பார்த்துவிட்டு தான் இவர்களுடைய… அதாவது ஏழை, பணக்காரர் இவர்களுடைய உளவியல் நம்பிக்கை செயல்பாடுகளை நாங்கள் உணர்ந்து கொண்டு, ஏழை எப்படி பணக்காரனாக மாறலாம் என்ற விழிப்புணர்வை எங்களுடைய எம்எஸ்கே பவுண்டேஷன் மூலமாக வெளிப்படுத்தி வருகிறோம். 


 MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், 
தொலைபேசி: 9360052930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்