உயிருள்ள உணர்வுள்ள எந்த பொருளையும் அடக்க முடியாது
இது எம் எஸ் கே முகையுதீன், அவர்களின் சமூக விழிப்புணர்வு பதிவு.
மகிழ்ச்சி என்பது எப்பொழுது உணரப்படும் என்றால் மனது இறுக்க நிலையில் இருக்கும் பொழுது, மனதில் ஏதோ ஒன்று அழுத்திக்கொண்டு இருக்கும்பொழுது, மற்றவர்களால் வார்த்தை அளவில் வேதனைப்படுத்தும் பொழுது, மனதில் இனம்தெரியாத சோகம் இருக்கும்பொழுது, சமூகத்தில் அங்கீகாரம் இல்லாதபொழுது, பணம் பற்றாக்குறையாக இருக்கும் பொழுது, குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு இல்லாதபோது, வேலை செய்யும் இடத்தில் மதிக்கபு விளக்கப்படும் பொழுது, ஏமாற்றம் அடையும் பொழுது, உடல்நிலை சரியில்லாத பொழுது, எதிர்பார்த்து நிராகரிக்கின்ற பொழுது, குடும்பத்தினருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகும் பொழுது, எதிர்பாராத இழப்பு இறப்பு ஏற்படும் பொழுது… இதுபோன்ற சுய சமூக பொருளாதார நெருக்கடியில் மட்டுமே மகிழ்ச்சி இல்லை என்பதை உணர முடியாது.
உடல்நிலை, பணம் நிலை, சமூக ஆதரவு போன்ற தண்ணீரில் நிற்கும்போதே… மகிழ்ச்சி என்ற ஒன்றை உளவியல்ரீதியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை… தெரிவதில்லை! ஆனால் இல்லாத ஒரு மட்டுமே மகிழ்ச்சி இல்லை என்பதற்கு பதிலாக குறிப்பிட்ட ஒன்றுமில்லை என்பதிலேயே கவனப்படுத்தி கவலைப் பட்டுக் கொள்கிறோம்.. எப்பொழுதெல்லாம் மகிழ்ச்சி உணர முடியவில்லையோ… அல்லது எப்பொழுதெல்லாம் கவலை, பயம், படபடப்பு, தூக்கம், இழப்பு… இவை உணரப்படுகிறதோ, அப்போது எம் எஸ் கே மகிழ்ச்சி மனோதத்துவ உளவியல் ஆய்வு மற்றும் சிகிச்சை எடுத்துக் கொள்வது உடல்நிலையையும் வாழ்வியலையும் முன்னேற்றும்.. சந்தோசம் இருக்க தேவை நான்கு hormones தான். இவற்றை உருவாக்க உளவியல் அணுகுமுறை தேவை நம் உடலை எப்போதும் fit ஆக வைத்திருக்கும் போது endorphin சுரக்கும். .. உடலை பிட்னஸ் ஆக மேலாண்மை செய்ய மன நிறைவாக ஒரு செயலை உடல் இயக்கம் தேவை.
நம் வாழ்கையில் லட்சியத்தை அடையும் போது dopamine சுரக்கும், லட்சியம் என்பது சுயமாக இல்லாமல் சமூக வளர்ச்சிக்காக இருக்க வேண்டும் மற்றவர்களுக்கு உதவும் போது serotonin சுரக்கும். எப்பொழுதெல்லாம் சமூக வளர்ச்சியை யோசித்து செயல்படுகிறோம் அப்போது மனதின் அடிப்படையிலேயே உடல் தனது வேலையை சிறப்பாக செய்யும். அன்பை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ளும் போது oxytocin சுரக்கும். அன்பு என்பது நிபந்தனையற்ற எதிர்பார்ப்பற்ற பிரபஞ்ச நோக்கோடு சுயநலம் இல்லாமல் இருக்க வேண்டும் இந்த நான்கும் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். இப்படி நமக்கு இட்ட பணி என்ற வேலையை முழுமையாக மன உடல் ஒருங்கிணைப்பு செய்யும் பொழுது, சமூக நலத்தை உருவாக்கும் பொழுது, அன்பை அனைவருக்கும் பங்களிக்கும் பொழுது பகிர்ந்து அளிக்கும் பொழுது, மன நெகிழ்ச்சி அடைந்து மன நெகிழ்ச்சி மகிழ்ச்சியாக வெளிப்படுகிறது!
வார்த்தைகளை உணர்தல்… சரியான தேர்வு செய்யப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துதல் வார்த்தைகளுக்கு உயிரூட்டி உணர்ச்சியுடன் வெளிப்படுத்தும் இவைகள்தான் வாழ்க்கையை இயக்கும் வாய்ப்பு கருவிகளாகும்.. சரியான உணர்ச்சியற்ற வார்த்தைகள் நிகழ்காலத்தில் பயன்படுத்தினாலும் அவை இறந்தகாலத்தின் உணர்ச்சிகளை உருவாக்குகிறது பெரும்பாலானவர்கள்திறமை இருந்தும் வெற்றி பெறாததற்கு முதன்மை காரணம் உளவியல்ரீதியாக வார்த்தை தொடர்புகளை உருவாக்க தெரியாமல் அல்லது முறையற்ற தேவையற்ற உணர்ச்சிகளை வார்த்தையோடு இணைத்து பயன்படுத்தல்.. வெற்றிக்கான பேச்சு உளவியலை கற்றுக்கொள்ள எங்களோடு இணைந்து இருங்கள்.
எண்ணங்களுக்கு சக்தி உண்டு என்ற எண்ணத்தில் இருப்பதை விட நாம் உணர வேண்டியது… செயலுக்கு மாபெரும் ஆற்றல் உண்டு… செயல் ஆற்றலாக உருவெடுக்கும். சுழற்சி விதி என்பது செயல் அடிப்படையில் இயங்குவதாகும்.. இன்னொருவருடைய தொடர்ச்சியை உருவாக்குகிறது அந்தச் செயல் மீண்டும் இன்னொரு தொடர்ச்சியை உருவாக்குகிறது. ஆகவே எண்ணங்கள் என்கின்ற முதல் படியிலிருந்து இரண்டாம்படி என்கின்ற செயலுக்கு வந்து அந்த செயலை தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து முறையாக செய்யப்படும் பொழுது செயலாக உருவெடுத்து தனக்கும் பிறருக்கும் நன்மை வழங்கக் கூடியதாக இருக்கிறது.
உயிருள்ள உணர்வுள்ள எந்த பொருளையும் அடக்க முடியாது..
இது மனிதனுக்கும் பொருந்தும்… மரத்துக்கும் பொருந்தும்..
அதிகமாக நாம் கேள்வி படக்கூடிய பொதுமை செய்தி ஏனென்றால்..
என் முன்னேற்றத்தை பலர் தடுத்துவிட்டனர்.. இல்லை என்றால் நான் அப்படியாக இருந்திருப்பேன்..
என்றெல்லாம் புலம்பலும்.. சில சமயங்களில் புலன்களுக்கு அப்பால் இறை விதி, மறை விதி, தலைவிதி, காலம், சூழ்நிலை என்றெல்லாம் காரணங்களை கண்டுபிடித்து கதை ஆக்குகிறோம்! ஆனால் உண்மையில் உணர்வுள்ள… உயிருள்ள எந்த மனிதனையும்… எந்த மரத்தின் விதையையும் அடக்க முடியாது.. அடங்காது… தன்னை… சிறைப்படுத்திக் கொள்ளாது…
அது தன்னை சரிப்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டது!
உயிருள்ள… உணர்வுள்ள எந்த மனித வித்தும்… மர வித்தும்… தாவர வித்தும்… இயற்கையாகவே தன்னை எதிர்கால சந்ததிக்கு கடத்திச் செல்லும் ஆற்றலுள்ளது…
அடிப்படையாக இதற்கு தேவை… தாங்கும் திறனும், தன்னை சிறைப்படுத்த உட்படுத்தும்போது அதை ஏற்றுக்கொள்ளும் திறனும்… எங்கே இருந்தாலும் இருப்பதை வைத்து தன்னை இயக்கிக் கொள்ளும் தன்மையும் தேவை..
எங்களுடைய எம் எஸ் கே கோட்பாட்டின்படி இயற்கையின் படைப்பினை யாராலும் அழிக்க முடியாது.. அழிக்க நினைத்தால் அழிந்து விடுவார்கள்..
இயற்கையை அழிக்கும் ஆற்றல் இயற்கைக்கு மட்டுமே உண்டு.. செயற்கையாக யாரையும் எந்த உயிரினத்தையும் அழிக்க முடியாது.
அது தன்னைத்தானே சரிப்படுத்திக் கொள்ளும் என்பதற்கு செயல் உதாரணம்… இந்த படங்களில் நீங்கள் காணுகின்ற காட்சிகள் தான்…
வீட்டின் மேல் தளத்தில் சிமிட்டி நாள் ஆன தளம் போடப்பட்டு ஒரு வாரம் ஆகின்றது..
அந்த தளத்தில் வெடிப்புக்கள் உப்பிய நிலையில் தென்படுகிறது. ஏன் இந்த சிமெண்ட் போடப்பட்ட தளம் உப்பிய நிலையில் வெடித்துள்ளது என அப்பகுதியை சிறிதளவு தோண்டிய போது தான் தெரிந்தது… அந்த வெடிப்புக்கும் உப்பிய பகுதிக்கும் காரணம் இரண்டு புளிய மரத்தின் விதைகள் இருந்தது தான் என்பது…
இதிலிருந்து ஒரு இயற்கை உண்மையை கண்டு உணர்கிறோம். உயிருள்ள… உணர்வுள்ள எந்த உயிரினத்தையும் யாராலும் அளிக்க முடியாது! இயற்கை கூட உதவுகிறது…
தன்னை வெளிப்படுத்த விரும்பக்கூடிய அவர்களுக்கு…
விதியின் சக்தி கான்கிரீட்டின் சக்தியை விட மிகப் பெரியது..
உயிருள்ள உணர்வுள்ள விதையும், மனிதனும் தன்னை ஏதாவது ஒரு விதத்தில் வெளிக்கொணரரும் ஆற்றலை இயற்கை கொடுத்துள்ளது …
இது இயற்கையின் மாபெரும் அழிக்க முடியாத சக்தி…
நீர் இல்லாமல் விதை முளைக்காது என்ற நீதியை தாண்டி இருக்கின்ற கிடைக்கின்ற சிமெண்டின் ஈரத்தை உணவாக்கிக் கொள்ளும் திறமை உள்ளது தான் உயிருள்ள விதை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்…
ஒவ்வொரு இயற்கை படைப்புக்குள்ளும், அழிக்க முடியாத மாபெரும் உயிர் ஆற்றல் உள்ளது. இந்த ஆற்றலை யாராலும் அழிக்க முடியாது..
அதே சமயத்தில் அந்த ஆற்றல் தன்னைத்தானே இருக்கின்ற சூழ்நிலையை தனதாக்கி உருவாக்கிக் கொள்ளும் உயிர்ப்பித்துக் கொள்ளும் அடுத்த கால சந்ததிக்கு தன்னை எடுத்துச் செல்லும் என்பதை உணர்ந்து தான் இந்த உளவியல் உயிரியல் பதிவை மனப்பதிவு சார் அறிவாக வெளிப்படுத்துகிறோம்…
MSK முகயுதீன், MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், தொலைபேசி: 9360053930




Comments
Post a Comment