தன்னம்பிக்கை வழிமுறையும் ஆன்மீக அறிவியலும்

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 



Belief system, Spiritual science interpretation by psychologist MSK. Belief system என்பது தன்னம்பிக்கை வழிமுறை. Spiritual science என்பது ஆன்மீக அறிவியல்… இவை இரண்டுக்குமான வேறுபாட்டை உணராமல் நம்பிக்கையை அறிவு என்கிறோம். ஆனால் அறிவு வேறு, நம்பிக்கை வேறு என்பதை புரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பல அறிவு இயல்புக்கு புறம்பான விளக்கங்கள் – உதாரணங்கள் பதிய வைக்கப்படுகின்றன. 



எங்களுடைய எம் எஸ் கே என்கின்ற மனப்பதிவு சார் அறிவு உளவியல் கோட்பாட்டின்படி, நம்பிக்கைகள் என்பது அறிவு சார்ந்தது அல்ல! நம்பிக்கை என்பது ஒன்று இருப்பதாக நம்புவது அல்லது கொடுக்கும் என நம்புவது. இவை தனிமனித நம்பிக்கைதானே தவிர உண்மையல்ல …. ஆனால் ஆன்மீக அறிவியல் என்பது அறிந்து தெளிந்து செயல்படுவது… இங்கு நம்பிக்கையில் செயல்படுவது என்பது கூட சடங்கு சார்ந்த விஷயமாக இருக்கும் .. ஆனால் ஆன்மீக அறிவியலில் பல மடங்கு பல கோணங்களில் சார்ந்த செயல்பாடாக இருக்கும் 



அதாவது கடவுளை நம்புதல் என்பது நம்பிக்கை சார்ந்தது ….. ஆன்மீகம் என்பது அறிவியல் சார்ந்தது.. அறிவு என்பது ஒன்றைப்பற்றி கசடற கற்று அறிதல், உணர்தல், பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தல், செயல்பாட்டின் அடிப்படையில் அதனுடைய முடிவு அடிப்படையில் நம்முடைய செயல்பாட்டை நடத்தி, திருத்தி மென்மேலும் அறிவை விரிவடைய செய்தல்… இந்த ஆன்மிக அறிவியல் என்பது முற்றிலுமான ஒரு உளவியல் பிரிவு தான். அறிதல் என்பது சுய நடத்தையை அறிதல் மற்றும் சுயத்திற்கு அப்பால் பிற மனித நடத்தை, பிற உயிரின தாவர விலங்கின நடத்தை, இந்த பூமி – புவியியல் சார்ந்த நடத்தை, வான இயல்பு சார்ந்த நடத்தை, பஞ்சபூத இயற்கை விதி மற்றும் அதன் நடத்தை இவற்றை அறிதலில் மூலமாக அறிவு விரிவடைந்து இந்த உலகத்தில் ஆற்றலாக பரவியுள்ள பல்வேறு வடிவங்களுக்கும் மறைந்திருக்கும் அறிவு என்ற ஆற்றல் தன்மையை புரிந்து ஆனந்தப்படும்.



 அதோடு மட்டுமல்லாமல் அதனோடு சமன்பாட்டு இயங்கும் தன்மையைத்தான் எம் எஸ் கே மனப்பதிவு சார் அறிவின் படி ஆன்மீக அறிவியல் என்கிறோம். சுருக்கமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இவ்வாறு நினைவு வைத்துக் கொள்ளலாம்… ‘ஆன்மீகம் என்பது நம்பிக்கைக்கு அப்பால் அறிவு இயல்பை அறிந்து கொள்ளும் நிலை’ என நினைவில் வைத்துக் கொள்ளலாம். இது முற்றிலும் புலன் உறுப்புகள் சார்ந்த அறிவு உணர்தலை கொண்டதாகும்.. இது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இல்லாமல் இயல்பு தன்மையை – இயக்கும் தன்மையை அறிந்து அந்த இயக்கத்தோடு தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் செயல்முறை ஆகும்!! 



 MSK முகயுதீன், 
MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், 
தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்