வாழ்வியல் வைரஸ்

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 


 கோ விட் வைரஸ் கால வாழ்வியல் மாற்றங்கள் இதுவரை ‘உழைத்தோம்’ என்று இருந்தவர்களை உழைப்புக்கு விடாமல் ஓரிடத்தில் அமர வைத்த பொழுது தான் மக்களுக்குப் புரிந்தது உழைப்பு ஒன்று தான் பணம் பெருக்கும் ஆயுதம்.. இதைத்தான் முன்னோர்கள் ‘செய்யும் தொழிலே தெய்வம் எனக் கூறியுள்ளார்கள்..தொழில் தான் நமக்கு பணம் கொடுக்கும் தெய்வமே தவிர.. தொழில் செய்யாமல் தெய்வம் என்று நாம் வைத்துக்கொண்ட அமைப்புகளோ வழிபாடுகளோ பணம் தராது என்பதை இந்த வைரஸ் வாழ்வியல், தனிமை மூலமாக புரிய வைத்து விட்டது. 



தொழில் மூலமாகத்தான் பணம் வந்து அதன் மூலமாக வாழ்வு வளம் பெறும். இதை விடுத்து கடவுள் என்ற நம்பிக்கையில் தொழிலை விட்டு விட்டு கடவுளை வழிபட்டால் தொழில் நடக்கும் என்ற தப்பெண்ணம் தகர்ந்து விட்டது! தகர்க்கப்பட்டு விட்டது!! இந்த வைரஸ் தனிமை வாழ்க்கை முறையின் முக்கிய தடயம் ஆகும்.. செய்யும் தொழிலே தெய்வம் என்றால் தொழிலை முறையாக வழிபாடு செய்வது போல் எந்த குறையும் இல்லாமல் நேர்த்தியாக செய்ய வேண்டும்… அந்த தொழில் மனிதர்களுக்காக அல்ல என்பது போல் புரிந்துகொண்டு கடவுளுக்காக செய்கிறோம் என்ற எண்ணத்தில் தொழிலை செய்ய வேண்டும். 



தொழிலில், தொழில் மூலம் மக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்தால் தொழிலே நம்மை தூக்கி நிறுத்தி விடும்… ஆக செய்யும் தொழிலை பூஜிப்பது, பக்தியுடன் செய்வது, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு தொழிலையும், சேவையையும் செய்வது ஒன்றும் தான் பணம் கொடுக்கும் – பணம் பெறும் வழி என்பதை இந்த வைரஸ் வாழ்வியல் தனிமை தவம் புரிய வைத்து விட்டது.. மத நிறுவனங்கள், மத தொழிலதிபர்கள் மற்றும் மத முகவர்கள், மக்கள் மத்தியில் எல்லாம் கடவுள் கொடுப்பார் என்று நீண்ட காலமாக மனதில் பதிய வைத்தது இந்த கோரோனா வைரஸ் மாற்றிவிட்டது!



 மக்களை சிந்திக்க வைத்து விட்டது… இந்த காலம் இந்த தனிமை காலம் மக்களுக்கு உண்மையை உணர்த்தும் தவக்காலம் ஆக மாறிவிட்டது.. கடவுள் கொடுப்பார் என்ற குருட்டு நம்பிக்கையில் இருந்து, உழைத்தால்தான் எதுவும் கிடைக்கும் உழைப்பு இல்லை என்றால் பட்டினி தான் இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை இது நாள் வரை ஏமாற்றி பழக்கப்படுத்தப்பட்ட உள்ளோம்.. ஆகவே உழைப்பில் தான் உணவு உழைப்பில்லாமல் ஒன்றும் கிடையாது.. அனைத்தும் புரிந்து விட்டது! 



உழைக்கும் பொழுது விடுமுறை கிடைத்தால் நன்றாக இருக்கும் என ஏங்கியவர்களுக்கும்.. எத்தனை நாளுக்கு தொடர்ந்து உழைப்பது எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் குடுப்பான் என நம்பி இருந்தவர்களுக்கு இந்த வைரஸ் தனிமை காலம் புதிய பாடத்தை கற்று கொடுத்துள்ளது.. அந்த வகையில் இந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள் உண்மையான மெய் அறிவை பெற்றுக் கொண்டனர்.. சடங்குகளில் வழிபாடுகளில்பணத்தை செல்வத்தை பெற முடியாது உழைத்தால் தான் பெற முடியும் என்ற உண்மையை விழிப்புணர்வு செய்துவிட்டது.. 



இதை மத தொழிலதிபர்கள் மத முகவர்கள் இப்படி விழிப்புணர்வு பெற்றோர்களின் நம்பிக்கையை திரும்ப வாபஸ் பெற வைப்பது எப்படி.. என யோசித்து எப்படியாவது மக்களை வாடிக்கையாளராக மாற்றி அவளுடைய நிறுவனங்களை திரும்ப புத்துணர்வு செய்ய வேண்டும் என கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.. இந்த உண்மையும் மக்களுக்கு புரிந்து விட்டது…



மத தொழிலதிபர்கள் தங்களுடைய ஒவ்வொரு செயலையும் தாங்களே செய்கின்றனர். அவர்கள் கடவுள் கொடுப்பார் என நம்பி எந்த வழிபாட்டையும் சடங்கையும் செய்யாமல் உழைக்கின்றனர். ஆனால் வெகுஜன மக்களை கடவுள் கொடுப்பார், சடங்கு செய்யுங்கள்… வழிபாடு செய்யுங்கள்… என கூறிக்கூறியே மன மாற்றம் செய்கின்றனர் என்பதை வெகுஜன மக்கள் புரிந்து கொண்டனர். இந்த புரிதலுக்கு காரணமே தனிமைப்படுத்தல் என்கின்ற வைரஸ் வாழ்வில் தான்… 



 MSK முகயுதீன், 
MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், 
தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்