ரசனைகளில் வளரும் குழந்தைகள் !
இது MSK முகையுதீன், Founder & CEO, MSK Life Clinic Foundation அவர்களின் சமுதாய முன்னேற்றத்திற்கான ஒரு விழிப்புணர்வு பதிவு!
இன்றைய பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை.. படிப்பு தொழிலாளிகள் போல் நடத்துகின்றனர் அல்லது அவ்வாறுதான் நடத்தப்பட வேண்டும் என்பதாக சுய கருத்தை ஏற்படுத்திக்கொண்டு சிலர் குழந்தைகளை படிப்பு தொழிலாளிகள் போல நடத்துகின்றனர்.. இன்னும் ஒரு சிலர் தங்களுடைய குழந்தைகள் முன்னேற வேண்டுமென்றால் படிப்பு தொழிலாளி போலத்தான் நடத்த வேண்டும். இப்படித்தான் மற்றவர்களும் நடத்துகின்றனர் என்று நடத்தை பிரதி எடுத்தல் முறையில் குழந்தைகளை வளர்க்கின்றனர்.
இன்றைய தினம் பெரும்பாலான சேனல்களில் பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பதை ஒருவர் கூறுகிறார் அதை பெற்றோர்கள் ரசித்துக் கொள்கின்றனர். அந்த பேச்சில் அந்த குழந்தைகளுடைய பிரச்சனைகளுக்கு இவர், பழைய கற்பனை கதைகளை சொல்லி அவர்களை அதாவது பெற்றோர்களை திருப்திபடுத்தி விடுகின்றனர்! இது எப்படி குழந்தையை மாற்றக் கூடியதாகும்?
குழந்தைகளின் நடத்தையை மாற்றும்..
இது போன்ற பெற்றோர்களின் நடத்தைக்கு உளவியல் காரணம் என்னவென்றால் திரைப்படத்தை பார்த்து அந்த திரைப்பட நடிகர்கள் நடிப்பதையோ அல்லது சொல்லுவதையோ உண்மையாக நம்புவது போலவே …..
இந்த உளவியல் மாற்றம் ஏற்பட்டு உள்ளது… இது இன்னமும் தொடர்ந்து வருகிறது…
அதாவது பெற்றோர்களை பெற்றோர்களுக்கான நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடத்தப்படும் – சொல்லப்படும் கருத்துக்களை பெற்றோர்கள் ரசித்துக் கொள்கின்றனரே தவிர, அது அந்த குழந்தைகளுக்கு எப்படி சிகிச்சையாக மாறும்…? இந்த விளக்கம் பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை…
மேலும் விளக்கங்களுக்கு எங்களின் மெய்நிலை பெற்றோர் அமைப்பினை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: +919360053930
Comments
Post a Comment