வழிபடுவதா? விஞ்ஞானத்தை நம்புவதா? உளவியல் விளக்கம்!

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!


எம் எஸ் கே உளவியல்.. இது எங்களுடைய நவீன உளவியல் கோட்பாடு! 
இந்த எம் எஸ் கே நவீன உளவியல் – உலகியல் கோட்பாடானது, மனிதனுடைய செயல்பாடு ‘மனம்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் முடித்துக் கொள்வதை தாண்டி, அந்த மனம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் செயல்பாடான இணை மையம் என்ன என்பதை விளக்குகிறது. ஒரு மனிதனுடைய மூளை என்பதில் என்னென்ன செயல்பாட்டுகள் உள்ளன என்பது போலவே மனம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எது செயல்பாடாக – செயல் ஊக்கியாக – செயல் நினைவாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது இந்த எம் எஸ் கே நவீன உளவியல்! 



எம் எஸ் கே என்பது மைண்ட் செட் நாலேஜ் என்பதன் சுருக்கம்தான். தமிழில் மன பதிவு சார் அறிவு என்று குறிப்பிடுகிறோம். இந்த எம் எஸ் கே நவீன உளவியல் கோட்பாட்டின்படி மனம் என்பது அறிவு என்பதனுடைய தொகுப்பாகும். இந்த அறிவு, உயிரினம் கருவுற்றிருக்கும் சமயத்தில் தன்னுடைய பதிவு நிலையை துவக்கி, தொடர்ந்து அந்த உயிரினத்தின் வாழ்நாள் எல்லை வரை தொடர்கிறது… இந்த பதிவை மையமாக வைத்து வாழ்க்கையில் அனைத்து முடிவுகளும் தன்னையறியாமல் எடுக்கப்படுகிறது அல்லது முடிவெடுக்க தூண்டப்படுகிறது. இந்த முடிவுகளே வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, துன்பம் இவற்றிற்கு காரணமாக அமைகிறது. தனிமனித வெற்றியை உருவாக்க மனதிலுள்ள பதிவை முறைப்படுத்த வேண்டும். 



கூட்டமாக இருந்தால் வாழலாம். ஆனால் வளர முடியாது… இன்றைய கூட்டமைப்புகள் அனைத்தும் அவர்கள் வாழ்வதற்கு உண்டான அமைப்புகளே அன்றி கூட்டத்தினர் வளர்வதற்கான அமைப்புகள் அல்ல என்பதை மக்கள் புரிவதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் குறைந்தது 45 ஆண்டு காலம் செலவிட வேண்டியுள்ளது. நமது டிஎன்ஏ வும் கூட்டமாக இருப்பதற்கு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் கூட்டமாக கூடி இருப்பது இவர்களுக்கு பலமாக இருப்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர். இதன் விளைவு கூட்டம் வளரும்… கூட்டத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே மட்டத்தில் கூட்டத்தில் அடங்கி ஒடுங்கி அவர்களுக்குள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி என்றென்றும் வாழ்வார்கள். 



வழிபடுதல் வேறு, விஞ்ஞானம் வேறு என்பதை பிரிக்காமல் இருப்பதற்காக, வழிபாடுதான் விஞ்ஞானம் என டிஎன்ஏ அளவில் பழக்கப் படுத்தப் பட்டுள்ளனர். ஆனால் அதை சொல்பவர்கள் சிறு விஷயமாக இருந்தாலும் கூட விஞ்ஞான மருத்துவ தீர்வுகளை தங்களுக்குள் மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். மற்றவர்களை வழிபாடு விஞ்ஞானம் என்பது தான் உண்மை – என்கின்ற கொள்கை ரீதியாக திரும்பத்திரும்ப பலப்படுத்தப் படுகின்றனர். 



கடவுள் என்பது நம்பிக்கை சார்ந்தது. ஆனால் விஞ்ஞானம் என்பது செயல்பாடு சார்ந்தது. அதனால்தான் செயல்படுவதை விட நம்புவது எளிதாக உள்ளதால் அதிகப்படியான மக்கள் நம்புவதை முழு நேரம் தொழிலாக ஏற்படுத்தி கொள்கின்றனர். . எம் எஸ் கே நவீன உளவியல் கோட்பாடு பற்றிய மேலும் விவரங்களுக்கு எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். 

 எம் எஸ் கே லைப் கிளீனிக் பவுண்டேசன் 
தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்