சித்தர்கள் கடவுள் வணங்கிகளா?
இது MSK முகயுதீன், Founder & CEO, MSK Life Clinic Foundation அவர்களின் சமூக விழிப்புணர்வு பதிவு!
சித்தர்கள் கடவுள் வணங்கிகளா?
இந்த சந்தேகம் பெரும்பாலான பகுத்தறிவுவாதிகள் என்று தோன்றுகிறது.
சித்தர்களின் வாழ்வியல் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்தால் உண்மையில் அவர்கள் கடவுள் வணங்கிகள் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும்.
சித்தம் என்றால் என்று பொருள்படும் சித்தத்தை அறிந்தவர்கள் சித்தர் என்று அழைக்கப்பட்டனர்.
சித்தர்களுடைய செயல் பணி என்னவாக இருந்தது என்றால்?
அவர்கள் மனிதர்களுடைய சித்த பிரச்சனைகளை நீக்கி வாழ்க்கை நலம் பெற வைத்தனர்…
இதனுடைய தொடர்ச்சியாக சித்த பித்த வாய்வு கோளாறுகளை கண்டறிந்து அதற்கு இயற்கை மூலிகை மூலம் சுக சிகிச்சை அளித்துள்ளனர்..
தங்களிடம் வரக் கூடியவர்களை கடவுள் என்ற வணக்கம் முறைக்கு நிர்பந்தப்படுத்தியதற்கும், அதற்கு வரைமுறை ஏற்படுத்தியதற்கும் இதுவரை எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதுதான் மெய்நிலை… பின்னாளில் அவர்களை வைத்து சிலர் மருத்துவத்தை மறைத்து கடவுள் என்ற கற்பிதம் கொள்கையை முன்னிறுத்தி இதனை சித்தர்கள் கூறியதாக மக்கள் மனதில் பதிய வைத்துள்ளனர்.
ஆனால் உண்மையில் சித்தர் வழிபாடு என்பதைவிட சித்தர்கள் மருத்துவத்தையும் வாழ்வியலையும் மக்கள் நலன் கருதி சமூகப் பணியாக செய்துள்ளனர் என்பது தான் அறிவுசார் உண்மை!
MSK முகயுதீன், Founder & CEO
Comments
Post a Comment