வெறுக்கும் நபர்களை விரும்புவது என்பது…

இது எம் எஸ் கே முகையுதீன், அவர்களின் சமூக விழிப்புணர்வு பதிவு.
உறவினர்களிடத்தில் தவறு நடக்கும் பொழுது அல்லது அவர்கள் நம்மை தரம் தாழ்த்தி நடத்தும் பொழுது அவற்றை நாம் பெருந்தன்மையாக மன்னித்து விட்டு அவரிடத்தில் இயல்பாக நாம் நடக்கும் பொழுது அவர்களை பொறுத்த அளவு நாம் குற்றவாளியாகவும் அவர்கள் சரியான நியாய வாதிகளாகவும் உளவியல் ரீதியாக பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.. இதற்கு உளவியல் தீர்வு உ,ளவியல் முறைப்படுத்தல் வழிமுறை என்னவென்றால்.. அவர்களுடைய தவறை உணர்த்தாமல் நீங்கள் அவர்களை மன்னிக்கக் கூடாது.




 அப்பொழுதுதான் உங்களுடைய நேர்மை தன்மை மதிப்பிடப்பட்டு உங்களைப் பற்றிய உளவியல் பிம்பம் மனதில் சரியாக பதியும்… உறவு சார்ந்த தவறுகள் உத்தியோகம் சார்ந்தவர்கள் இவற்றை உணர்த்தாமல் பெருந்தன்மை என்ற பெயரில் மன்னிக்காமல் இருப்பதே சரியான உளவியல் நிரந்தர பிம்பத்துக்கு வழியாகும். உங்கள் இடத்தில் உள்ள அளவுகோலை வைத்து உங்களை அளந்து கொள்ளாதீர்கள்.. உங்களுக்கான அளவுகோல் எங்கள் இடத்தில் உள்ளது.. இன்னும் ஒரு சிலர் பிறருடைய அளவுகோலை வைத்து தன்னுடைய அளவை முடிவு செய்து கொள்கின்றனர்… உண்மையில் உளவியல் அளவுகோல் என்பது மன ஆய்வகத்தில் உங்களை கண்டறிவது தான்.




எப்பொழுதெல்லாம் பிறரிடத்தில் தர்க்கம் எதிர்வாதம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் நாம் தோற்று கொண்டிருக்கிறோம்.. உண்மையில் வாதிப்பது என்பதே பிறரிடத்தில் எனக்கு திறமை உள்ளது என்ற அங்கீகாரத்தை பெறுவதற்குத்தான். இந்த உளவியல் உண்மை தெரியாமல் பல்வேறு வாதங்களில்வெற்றி பெறுவதாக நினைத்து தோல்வியை பெற்றுக் கொள்கின்றனர். ஒரு மனிதனுடைய அறிவுத்திறம் அறிவுத் தரம் என்பது… அந்த மனிதர் யாரிடத்தில் தன்னை தன்னுடைய அறிவை நிரூபிக்க தர்க்கம் செய்கிறார் என்பதை பொறுத்ததே! ஆகவே நீங்கள் யாரோடு உங்களை ஒப்பீடு செய்கிறீர்கள்… யாரோடு தர்க்கம் செய்கிறீர்கள்… 




யாரிடத்தில் அங்கீகாரம் தேடும் முயற்சிகள் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்களுடைய அறிவின் தரம் இருக்கும். யார் எல்லாம் தனக்கு தெரியும் என்பதை தகுதியற்ற நபர்கள் இடத்தில் அல்லது கண்டவர்கள் இடத்திலெல்லாம் காட்டிக்கொள்கிறார்களோ அல்லது தர்க்கம் செய்து நிரூபிக்க முயற்சி செய்கிறார்களோ அல்லது உறவினர்களிடம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்களோ… இதுவும் ஒரு மன பாதிப்பு தான்! உண்மையில் யாரிடத்தில் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றால்.. தான் யாருக்கு சேவை பணியை தொழில் ரீதியாக செய்கிறார்களோ அவர்கள் இடத்தில் மட்டும் தான் திறமையை நிரூபிக்கவேண்டும்… திறமையை நிலை நிறுத்த தர்க்கம் புரிய வேண்டும்!




 வெறுக்கும் நபர்களை விரும்புவது என்பது எரியும் நெருப்பை சட்டைப்பைக்குள் வைத்திருப்பதற்கு சமமாகும். வெறுக்கும் நபர்கள் நெருப்பு போன்றவர்கள். அவர்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உளவியல் விழிப்புணர்வு சமூக விழிப்புணர்வு மிக மிக அவசியம். ஆனால் சமூகமும் வெறுப்பவர்களை விரும்ப சொல்லி கொடுக்கிறது…. நீ பெரிய மனிதனாக ஆகிவிடு அவர்கள் அப்படித்தான் …..நீ உன்னை மாற்றிக்கொள் என்று அறிவுரையும் ஆலோசனையும் கொடுப்பார்கள். .. ஆனால் இந்த அறிவுரை கொடுக்கும் நபர்கள் வெறுக்கும் நபரை சந்திக்கும் பொழுது அல்லது அந்த நபரை பார்த்தவுடன் இவர்கள் அதாவது அட்வைஸ் பண்ண கூடிய நபர்கள் அவர்களுக்கு அடிமையாகி விடுவார்கள்… நம்மைப் பற்றி தரக்குறைவான மதிப்பீடு கொடுப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. 




இதற்கு காரணம் கேட்டால் அடிபட்ட உனக்குத்தான் மருந்து .. அடி கொடுத்த அந்த நபருக்கு மருந்து தேவையில்லை ….. என மீண்டும் நமக்கே அடிமைத்தனத்தை சொல்லிக் கொடுப்பார்கள். இதற்காக இலவச டுட்டோரியல் வகுப்பறை நேரடியாக அல்லது ஆன்லைன் மூலமாக நடத்துவார்கள் ஆகவே உங்களை மாற்றிக்கொள்ள உளவியல் ஆலோசனை அவசியம்.

சிலரை பிடிக்கும் அல்லது விரும்புதல் என்பதை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.. அவரை பிடிக்கும் என்பதற்காக அவரிடத்தில் ஆலோசனை கேட்பது என்பது அறிவுக் குறைபாடு.. சிலரை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்… ஆலோசனை கேட்கக் கூடாது.. சிலரை மதிப்பதொடு நிறுத்திக்கொள்ள வேண்டும்… ஆலோசனை கேட்கக் கூடாது சிலரை நட்போடு நிறுத்திக்கொள்ளவேண்டும்… 




ஆலோசனை கேட்கக் கூடாது சிலரை உறவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்… அப்படியானால் யாரிடத்தில் ஆலோசனை கேட்க வேண்டும்? இதற்கு எளிய உதாரணம்…. உடல்நிலை சரியில்லையென்றால் யாரிடத்தில் ஆலோசனையும் மருந்து உட்கொள்ளும் பரிந்துரையும் எடுத்துக்கொள்கிறீர்கள்? அதே போல தான் ஆலோசனை என்பது அந்த துறை சார்ந்த நிபுணர்களிடத்தில் பெற்றுக் கொள்வதுதான் சரியான அணுகுமுறை. ஒருவர் இலவசமாக ஆலோசனை கொடுக்கிறார் என்றால் அவர் தகுதியற்றவர்… அவர் அந்த துறை சார்ந்த நிபுணர் அல்ல என்பதை புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது தனி மனிதனுடைய உளவியல் வளர்ச்சி, அறிவுத்திறன், அறிவுத்தரம்….. மனவளர்ச்சி.. வயது பக்குவம்.. அனைத்துமே… இன்னும் எளிய உதாரணம்… யார் அந்த துறையில் நிபுணராக இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்… துறை சார்ந்த நிபுணரின் திறமை… 




ஆகவே தன் துறையில் சிறந்து செயல்படும் நிபுணர், சாதாரண மனிதர்களிடத்தில் ஆலோசனை கேட்க மாட்டார். அவருக்கு ஆலோசனை தேவைப்படும் பொழுது தனக்கு தேவைப்படும் துறைசார்ந்த நிபுணரிடத்தில் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வார்.. பிடித்தவர், தெரிந்தவர், நண்பர், உறவினர், வயது முதிர்ந்த நபர்கள்… இவர்களிடத்தில் ஆலோசனை பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள்… இவர்களிடத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள்… ஓரளவு மன பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருப்பார்கள்.. அதே சமயம் இவர்கள் சரியான நிபுணரை வாழ்நாளில் ஒருமுறை கூட சந்தித்திருக்க மாட்டார்கள் என்பதே சமூக உண்மையும், உளவியல் உண்மையும், நடத்தை உண்மையும் ஆகும். மீண்டும் ஒரு சந்தேகம் உங்களுக்கு எழலாம்… நான் யார் இடத்திலும் ஆலோசனை பெற விரும்புவதில்லை. ஆனால் அவர்கள் என்னிடத்தில் வலுக்கட்டாயமாக ஆலோசனையை திணிக்கிறார்கள்… இதற்கு என்ன செய்வது என்ற கேள்வி உங்களுக்குள் வருகிறதா.. 




ஆம் என்றால் உங்களிடத்தில் ஆலோசனை கொடுக்க கூடிய நபர் இடத்தில் நீங்கள் இதுவரை அப்படித்தான் உங்களை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.. அவரை ஆலோசகராக இதுவரை மறைமுகமாக ஏற்றுக் கொண்டு வந்துள்ளீர்கள். அவர்களும் உங்களை வாடிக்கையாளராக இதுவரை வைத்துக் கொண்டுள்ளார். இது அவரின் தவறு கிடையாது! நீங்கள் ஏற்படுத்திய செயல்பாட்டின் விளைவு.. எந்த மருத்துவரும், எந்த உளவியல் நிபுணரும் இலவசமாக ஆலோசனை கொடுக்க மாட்டார்கள். ஆலோசனை கொடுப்பதற்கு முன் பல்வேறு விவரங்களை ஆய்வு செய்து அதற்கேற்ப ஆலோசனை கொடுப்பார்கள். அதுவும் இலவசமாக அல்ல.. என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.. இலவச ஆலோசனை கொடுப்பவர்கள் அனைவரும் நிபுணர்கள் அல்ல! 




இவர்கள் அடுத்தவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்தி தன்னை அங்கீகாரம் படுத்திக்கொள்ள செய்யும் ஒரு யுக்தி தான் இவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் நிபுணர்களிடத்தில் ஆலோசனை பெற முன்பதிவு செய்ய வேண்டும். முறையான கட்டணம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு அந்தத் துறையில் அதிக அறிவுப்பூர்வமான திறன் பரிசோதனைகள் போன்றவற்றை தன்னகத்தே வைத்து இருப்பார்கள். அவர்கள் தனக்கென்று அலுவலகம் வைத்திருப்பார்கள் என்பதை புரிந்து கொள்வதுதான் உளவியல் வளர்ச்சியின் வெளிப்பாடு… மிகச் சிறந்த அறிவாளிகள் யார் என்றால் அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் திரைப்பட துறையினர் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள். இவர்கள் யாரிடத்திலும் ஆலோசனை கேட்க மாட்டார்கள். துறை சார்ந்த நிபுணர்கள் இடத்தில் மட்டும்தான் ஆலோசனை கேட்பார்கள்.. 




உதாரணம் அரசியல்வாதிகள்…. சக அரசியல்வாதிகள் இடத்தில் முன்னேற்றத்துக்கான ஆலோசனை கேட்க மாட்டார்கள் அவர்களை… ஆலோசகராக ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். தன்னுடைய உறவினரிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். நண்பர்களிடத்தில் ஆலோசனை கேட்க மாட்டார்கள். ஏன் தன்னுடைய பெற்றோரிடத்தில் கூட ஆலோசனை எடுத்துக்கொள்ள முன்வர மாட்டார்கள்.. காரணம் பெற்றோருடைய வயது என்பது வேறு அவருடைய அன்பு அனுபவம் அவர்களின் வாழ்ந்த சூழல் அன்றைய அறிவியல் தன்மை மக்களின் தன்மை வேறு என்பதை புரிந்து வைத்திருப்பார்கள். அதனால்தான் பெற்றோர்களிடத்தில் கூட ஆலோசனை பெற அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், துறைசார் நிபுணர்கள் பெற விரும்பமாட்டார்கள்.. ஆனால் பொதுமக்களிடத்தில் கருத்து கேட்டல் என்ற சடங்கு நடத்துவார்கள். ஆனால் இது பொதுமக்களுக்கு ஆலோசனை கேட்பது போல விபத்தை ஏற்படுத்தி விடும்.. ஆகவே துறை சார்ந்த நிபுணர்கள் புரிந்து கொண்டவர்களும் இவர்கள்தான்.. 




அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் துறைசார் நிபுணர்கள் இவர்கள் என்றென்றும் அந்தத் துறை சார்ந்த நிபுணர்களை மட்டும் ஆலோசகராக வைத்துக் கொள்வார்கள் அவர்களிடத்தில் மட்டுமே ஆலோசனை பெறுவார்கள் அதற்கான கட்டணத்தை முறையாக செலுத்தி விடுவார்கள்.. கட்டணமில்லாத இலவச ஆலோசனை கிடைக்கிறது என்பதற்காக நண்பரையோ உறவினரையோ தன்னோடு உள்ள சக துறையில் உள்ளவர்களிடத்திலோ ஆலோசனை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். 


MSK முகயுதீன், MSK லைப் கிளீனிக் பவுண்டேசன்

Comments

Popular posts from this blog

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

மூளையா? மனமா? மனபாதிப்பினை சரிபடுத்துவது எவ்வாறு? அறியுங்கள்!