மத நிறுவனங்களின் வாடிக்கையாளரா நீங்கள்?

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 



 மத நிறுவனங்கள் மக்களை தங்களுடைய வாடிக்கையாளராக மாற்றுவதில் எடுத்துக் கொள்ளும் கவனத்தை மாற்றி தங்களுடைய வாடிக்கையாளர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற செயல்பாட்டை வடிவமைத்து வாழ்வாதாரத்தை உயர்த்தினால் மதங்கள் என்ற பெயரில் இயங்கும் மதங்கள் என்ற நிறுவனங்களில் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். இதை விடுத்து மதங்களில் வளர்ச்சியை கஸ்டமரை வைத்து அதாவது வாடிக்கையாளர்களின் கூட்டத்தை வைத்து மதிப்பு கூட்டப்பட்ட வேண்டும் என்று நினைப்பதில் தான் உருவாகிறது வேற்று மத துவேஷம்… வன்முறை வார்த்தைகள்… மதங்கள் மக்களை வழிப்படுத்தவா அல்லது மக்களை கூட்டம் கூட்டமாக நம்ப வைப்பதா… 



இதைப்பற்றிய தெளிவு இன்று வரை மத நிறுவனங்களுக்கு வரவில்லை…. மதங்கள் கூட்டம் சேர்த்தவா அல்லது மக்களை நெறிப்படுத்தவா.. என்பதில் இன்றளவும் கொள்கை இயற்றப்படவில்லை… கடவுள் நம்பிக்கை அடிப்படையில் உள்ளதா… மத உறுப்பினர்கள் அடிப்படையில் உள்ளதா… மதங்களுக்குள் சண்டையிட்டு முரண்பாடுகள் ஏற்படுத்துவதில் உள்ளதா… இப்படி பல கேள்விகள் இன்றைய தினம் மக்களுக்கு உருவாகி வருகிறது கடவுளை ஏன் நம்ப வேண்டும்? அதனால் நமக்கு என்ன நன்மை? கடவுளுக்கு என்ன நன்மை? மதங்களை ஏன் பின்பற்ற வேண்டும்? அதை பின்பற்றுவதால் என்ன நன்மை? மதத்துக்கு என்ன நன்மை? 



மதங்களைப் பின்பற்றினால் தான் கடவுளை அடைய முடியுமா? அல்லது கடவுளுக்கு பிடிக்குமா? மதம் என்ன சொன்னாலும் அதை நம்பி செயல்பட வேண்டுமா? மதம் மனிதனுக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறதா? மதங்களின் வேலை என்ன? மனிதர்களை வாடிக்கையாளராக்க அழுவதா? அல்லது மாற்று மதத்தினரை வார்த்தைகளாலும் எண்ணங்களாலும் துன்புறுத்துவதா…? மதங்கள் வளர்க்கப்படுகிறதா? அல்லது மதங்களினால் மனிதம் வளர்க்கப்படுகிறதா…? 



 மதங்கள் அறிவை உருவாகின்றனவா … சடங்குகளை உருவாக்குகிறதா… சடங்கில் அறிவு வளருமா… சடங்குகளுடைய உள்நோக்கம் என்ன.. சடங்கை அறிமுகப்படுத்துவதனுடைய உள்நோக்கம் என்ன… சடங்கை அறிமுகப்படுத்தியவர்கள் சடங்கை செய்கின்றார்களா… அல்லது சடங்கை அறிமுகப்படுத்தி அடுத்தவர்களை செய்ய வைக்கின்றார்களா.. அந்த சடங்கு என்னென்ன பலன்களை தரும் என்பதை எப்படி விளம்பரப்படுத்துகிறார்கள்.. யாரேனும் அப்படி விளம்பரப்படுத்தப்பட்ட சடங்கை பரிசோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியவர் செய்ததனால் அவருக்கு என்னென்ன பலாபலன்கள் கிடைத்துள்ளது என யாராலும் கேட்கப்பட்டு இருக்கிறதா… அந்த சடங்குக்கான பட்ஜெட் என்கின்ற முதலீடு என்ன.. அந்த பட்ஜெட்டில் என்னென்ன பொருள்கள் இடம்பெறும்… 



அந்த பொருள்கள் யாருக்கு போய் சேரும் அல்லது சேர்க்கப்படுகின்றன… இந்த சடங்கை கடவுள் செய்யச் சொன்னாரா… சடங்கு செய்தால் மட்டுமே கடவுள் பிரதிபலனை கொடுப்பாரா… இப்படி பல கேள்விகள் இன்றைய தினம் மக்களால் பேசப்படும் அளவுக்குமட்டுமே உள்ளது… இன்னும் இவை கேள்விகளாக பதிலை நோக்கி கேட்கப்படவில்லை… அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.. சடங்கு வழியில் அல்லது சடங்கு பொருள்களினால் மட்டுமே வழிபாடு நடத்தப்பட வேண்டுமா.. என்று மக்கள் உண்மைகளை தேட ஆரம்பித்துவிட்டனர்… மத பிரச்சாரங்கள் தேவைதானா? கடவுளைப் பற்றிய விளம்பரங்கள் தேவை தானா? இது போன்ற கேள்விகளை இன்றைய மத நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. இவற்றுக்கான பதில் மக்கள் மிக விரைவில் கண்டு கொள்வார்கள்! 



 மத நிறுவனங்களை நடத்துபவர்கள் தங்களுடைய சந்ததிகளுக்கு செய்யப்படும் வாழ்வியல் மேம்பாட்டு முறைகள் வேறு… அவர்களின் வாடிக்கை யாளர்களை நம்ப வைப்பதற்கு தக்க வைப்பதற்கும் பயன்படுத்தப்படும் யுத்திகள் வேறு. மத நிறுவனங்களை நடத்துபவர்கள் இரு வகைப்படுவார்கள்.. அவர்களுடைய ஆளுமைத் தன்மை வாடிக்கையாளருடைய ஆளுமைத் தன்மையை விட உளவியல் ரீதியாக மாறுபட்டிருக்கும். இவர்களில் அதாவது மத நிறுவனங்களை நடத்தக் கூடியவர்கள் தங்களுடைய சொந்த வாரிசுகள் தங்களை சார்ந்தவர்களுக்கு சொல்வதெல்லாம்…. கடவுளை நம்புவதாக இருந்து கொள்… ஆனால் செயலில் முழுமையாக ஈடுபடு… செயல் தான் உன்னை உயர்த்தும் வளர்த்தும் உனக்கு பலவிதபணம் செல்வாக்கு களை உருவாக்கி கொடுக்கும்… 



அதாவது உன்னுடைய வேலையை தொடர்ந்து செய்.. ஆனால் வேறு யாரேனும் குறுக்கிட்டு உன் வளர்ச்சிக்கு யார் காரணம் என்றால் அதற்கு கடவுள் காரணம்.. எனக்கு ஒன்றும் தெரியாது.. எல்லாம் அவன் செயல் என மேலே கையை காட்டிவிட்டு, உனது செயலை முழுமையாக செய்.. என கற்றுக் கொடுக்கப்பட்டு அவர்களே செயலை மேற்பார்வை செய்து, தேவையான திருத்தங்களை ஏற்படுத்தி, அவர்களுடைய சந்ததிகளை மட்டும் முன்னேற வைக்கின்றனர். இதில் கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் செயல் என்பது மற்றவர்களை வாடிக்கையாகும் ஒரு செயல்முறை தானே தவிர வேறொன்றுமில்லை… என்பது மத நிறுவன இயக்குனர்கள் மற்றும் மத அதிபர்களுக்கு மட்டுமே புரிந்த விஷயம்.. இன்னொரு பிரிவினர் எதுவும் செய்யாமல் எதிர்பார்ப்பில் எல்லா செயலும் மேலே உள்ளவன் வடிவமைத்து உள்ளான்… 



அந்த வடிவமைப்புக்கு நாம் மாற்றம் செய்யக்கூடாது… அப்படி செய்தால் தண்டிக்கப்படுவோம்… அல்லது அந்த கடவுளிடமிருந்து துண்டிக்கப்படுவோம்… என பயம் மற்றும் அச்சத்தை உளவியல் ரீதியாக சிறுவயதிலிருந்து ஊட்டப்பட்டிருக்கிரார்கள். இவர்கள் எந்த வயதிலும் மறக்காமல் தன்னுடைய உழைப்பை முழுமையாக செய்யாமல், பெயரளவில் செய்துவிட்டு, செயலளவில் மேலே உள்ளவன் செயல் என்றெல்லாம் நம்பிக்கொண்டு தனது நம்பிக்கையையும் அடுத்த சந்ததிகளுக்கு வாரிசுகளுக்கு சொத்தாக கொடுத்து விடுகின்றனர்… இதனுடைய விளைவு வாழ்வாதாரம் – பொருளாதாரம் என்று எதிர்பார்த்த நிலையில் அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு அல்லது இவர்களுக்கு இவர்களே செயல்பட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர். 



இதற்கும் அவன் தான் காரணம் என தன்னுடைய கையை கட்டி விடுகின்றனர்.. ஒரு தொழில் நிறுவனத்தை ஒருவர் உருவாக்குகிறார் என்றால் அவருக்கு மட்டுமே தொழில்நுட்பம், சமூக நுட்பம், செயல் நுட்பம், வியாபார நுட்பம், சந்தைப்படுத்தல் நுட்பம் போன்றவை முழுமையாக தெரிந்திருக்கும். ஆனால் அந்த நிறுவனத்தில் கூலி வேலை செய்பவர்களுக்கு அல்லது அந்த நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது… தெரிந்தாலும் பயனில்லை… தெரிந்துகொள்ளவும் விரும்பமாட்டார்கள். 



இதே போல தான் மத வாடிக்கையாளர்களை அந்த நிறுவன இயக்குனர்கள் நம்பிக்கையூட்டி வாடிக்கையாளர்களை எதிர்பார்ப்புடன் தக்க வைத்துக் கொள்கின்றனர்.. அவனுடைய சடங்குகளும், சம்பிரதாயங்களும், வழிபாடுகளும் அவர்களுடைய சந்ததிகளுக்கும், வாரிசுகளுக்கும் தொழில் அடிப்படையில் கற்றுக்கொடுக்கப்படுகிறதே தவிர செயலளவில் அவை உலக நடைமுறைக்கு ஏற்ப செய்ய கற்றுக் கொடுக்கப் படுவதில்லை என்பதுதான் உளவியல் உண்மை. இதுதான் அவர்களுடைய வளர்ச்சி நுட்பம்…சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நிறுவனத்தை உருவாக்கியவர்களுக்கு மட்டுமே வியாபார யுக்தியும், வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் யுக்தியும் தெரியும்.. மற்றவர்கள் நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் எல்லாம் எனக்கு கிடைக்கும்… இதுதான் சிறந்த வழி நான் இருக்கும்… 



என் நிறுவனம் உலகத்தில் மிகச் சிறந்த நிறுவனம்… நான் இவர்களுக்காக பணம் முதலீடு செய்வது, என்னுடைய இந்த ஜென்மத்துக்கும், ஏழு ஏழு ஜென்மத்துக்கும் பலனளிக்கும்… எனக்கு மேலே சொர்க்கம் உள்ளது… இவர்களை நான் கவனித்துக் கொண்டால் அதாவது இந்த நிறுவனங்களை அல்லது நிறுவனர்களைமுறையாக கவனித்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் வாரிசுகளையும் அவர்களுக்கு வாரிசாக கொடுத்து விடுகின்றனர்… 



 MSK முகயுதீன்,
 MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், 
தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்