ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகள்
ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளே ஒரு யுகத்தை ஆளும் சிந்தனைகளாக உள்ளன. ஆளும் வர்க்கம் என்றால் அது சமுதாயத்தின் பொருளியல் சக்தியாக மட்டுமல்லாது அறிவுச் சக்தியையும் ஆள்கிறது.
பொருள் உற்பத்திக்கான காரணங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிற வர்க்கமானது அதன் காரணமாகவே அறிவு உற்பத்திக்கான காரணங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
இந்தச் சாதனங்களைக் கொண்டிராதவர்களின் சிந்தனைகள் இதற்கு பொதுவாக அடங்கிப் போய்விடுகின்றன.
பணக்காரன் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணம் என்ன என்று ஏழைகள் கேட்கும்பொழுது அதற்கு அவன் சொல்கின்ற பதில் இதற்கெல்லாம் காரணம் இறைவன் அவன்தான் கொடுத்தான்..
எனக்கு எந்தத் திறமையும் இல்லை..
என்று தன்னுடைய திறமையை செயலாற்றலை கணக்கீடும் நுட்பத்தை மறைத்து இவ்வாறு மக்களுக்கு உரையாற்றி விடுகிறான்…
இதைப் பார்த்து இதிலிருந்து பிறவி எடுத்து..
ஏழையும் இவ்வாறு பேசுகிறான் ஏன் உன்னால் பொருளாதாரத்தில் முன்னேற முடியவில்லை எனக்கேட்டால் அதற்கு பணக்காரன் கூறிய பதிலை பதிலாக சொல்லிவிடுகிறான்..
எப்படி எனில் எனக்கு கடவுள் கொடுக்கவில்லை என்று..
கடவுளை கைகாட்டி தன் கையை கட்டிக் கொள்கிறான்..
உண்மையில் ஏழை தன்னுடைய திறமையை செயலாற்றலை திட்டமிடுதலை கணித்து பணியாற்றுவதை வளர்ச்சிக்கு தேவையான உளவியல் தொழில்நுட்ப ஆலோசனை பெறுவதை தவிர்த்து விடுகிறான்
அல்லது யாரேனும் சொன்னாலும் அதை செய்வதற்கு சோம்பேறித்தனப்பட்டு எல்லாம் கடவுள் தான் கொடுக்கிறார் என்று தானும் நம்பி தன் குடும்பத்தையும் நம்ப வைத்து ஏழ்மை நிலைக்கு தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கிறான்..
உண்மையில் பணம் பெறுவதற்கு சமூக அறிவு உளவியல் அறிவு தொழில் அறிவு தொழில்நுட்ப துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை கணக்கீடும் தன்மை தணிக்கும் தன்மை நிற்கும் தன்மை பொருள்களை தரமாக வாங்கும் தங்கள் அவர்களை மேம்படுத்தும் தன்மை இவற்றின் மூலமாக தான் பணக்காரன் பணத்தை ஆளும் பண அதிபராக தன்னை உருவாக்கிக் கொள்கிறான்..
பிறர் கேட்கும் பொழுது தொழில்நுட்பத்தை மறைத்து இது கடவுள் கொடுத்தது என பிறரை நம்ப வைத்து தனக்கு போட்டியாக இல்லாத சமூகத்தை உருவாக்குகிறான்..
பணக்காரன் இந்த உலகத்தில் வெற்றியடைய இந்த உலகத்தில் உள்ள துறை நிபுணர்களின் ஆலோசனையை கட்டணம் கொடுத்து பெற்றுக் கொள்கிறார்..
ஏழை இந்த உலகத்தில் உள்ள பொருள்களை அடைவதற்கும் வெற்றியடைவதற்கு வானத்திலுள்ள கடவுளை வேலைக்கு அழைக்கிறான்..
இறுதி வெற்றி பணக்காரனுக்கு…
இறுதிவரை வெற்றியை கிடைக்காதது ஏழைக்கு..
உழைத்தால் வெற்றி
விதைத்தால் வெற்றி
என்பதைப் புரிந்து கொண்டவன் பணக்காரன்…
வேண்டினால் வெற்றி
விரதம் இருந்தால் வெற்றி
என்று இயற்கைக்கு மாற்றமாக இருப்பதற்கு இறைவனை வேலைக்காரனாக மாற்றி தன்னை தோல்வியடைய வைத்துக் கொள்கிறான்..
இந்த பிரபஞ்சம் மனித உழைப்பு என்ற சங்கிலித்தொடர் பில்
உருவாகிக் கொண்டிருக்கிறது..
பிரபஞ்சம் யார் சமூக முன்னேற்றம் வளர்ச்சி இவற்றுக்காக உழைக்கிறார்கள் அவர்களுக்கு பிரபஞ்சம் அனைத்தையும் கொடுக்கும்..
உழைக்காமல் வேண்டுபவர்களுக்கு உலகத்திலுள்ள பொருட்கள் கிடைக்கிறது என்றால்…
உழைப்பவர்களின்
உழைப்புக்கு என்ன பிரபஞ்சம் கொடுக்கப் போகிறது..
உழைப்பில் தான் வெற்றி உள்ளது.
தொழில் திறன் இல்லாமல் கற்பனை அளவில் வியாபாரத்தை கணக்கிட்டு பணத்தை பிறரிடம் வாங்கி அதை முதலீடு செய்தால் பணம் அதிகம் கிடைக்கும் என்ற கற்பனை கணக்கீட்டில் செயல்படுபவர்கள் தான் கடன்காரனாக கடனாளியாக உருவெடுக்கின்றனர்.
அந்தக் கடனை அடைப்பதற்கு இன்னொரு இடத்தில் கடன் வாங்கி கடன் வாங்கி கடைசியில் உலகம் மோசம் கடவுள் மோசம் மனிதர் மோசம் ராசி இல்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டு புகார்களை வைத்துக்கொண்டு தன்னை நல்லவனாக திறமை உள்ளவனாக வெளிப்படுத்துகின்ற உளவியல் நோய் நீண்டகாலமாக பரவி இப்பொழுது அது புற்று நோய் போல மக்களிடத்தில் குடி புகுந்து வந்துள்ளது..
கடன் இல்லா வியாபாரம்..
கடைகளில்தான் வியாபாரம்..
வியாபாரம் உளவியலை பெற்றுக் கொள்ளவும்.
ஏழைகளுடைடைய செயல்பாடு.. தொழிலாளிகளுசெயல்பாடு… இவை இரண்டும் பணத்தை நோக்கியதாக மட்டுமே உள்ளது.. முன்னேற்றத்திற்கான தொழில்நுட்ப – வியாபார நுட்ப- ஆலோசனை எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை…. இவர்கள் தனக்கு தெரிந்த அறிவின் அளவை மட்டுமே உறுதியாக இருக்கும் என நம்புகின்றனர்.. கடன் வாங்க விரும்புகின்றனர்.. ஆனால் அறிவை கடன் வாங்க விரும்புவதில்லை.. இதனுடைய விளைவு இவர்கள் தொழிலாளி என்ற கட்டுக்குள் மட்டுமே வாழ்கின்றனர். இவர்களுடைய வாழ்க்கை ஏழை என்ற முத்திரையில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது… வேலை ஏழை… ஏழை வேலை… தொழில் அறிவை நிகழ்காலத்துக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ளாமல் தன்னுடைய சிறுவயது அறிவை பயன்படுத்தி தோல்வி அடைந்தவர்கள் தான் ஏழை மனநிலையை பார்க்கின்றனர்.. ஏழை தொழிலாளி இவர்களுக்கு தொழில்நுட்ப உளவியல் திறன் மேம்பாட்டு ஆலோசனையை எடுத்துக் கொள்வதை மிகவும் சிரமமாக கருதிக் கொள்கின்றனர்.
இதனுடைய விளைவு வாழ்க்கைத் தரத்தில், தொழில் தரத்தில் வியாபாரத்தில், தொடர் தோல்வியை தொடர்ந்து அடைகின்றனர்.. பணக்காரன் தன்னுடைய அறிவை முதன்மைப்படுத்தி தன் துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதில் முதன்மை தன்மையோடு செயல்படுகின்றனர்… ஆகவே அறிவை ஈடுசெய்ய அறிவிப்பு புதுப்பித்துக்கொள்ள உளவியல் திறன் மேம்பாட்டு அறிவு ஆலோசனை செயல் ஆலோசனை மிக மிக அவசியம். இதை புரிந்தவர்கள் பெருநிறுவன உளவியல் என்று சொல்லக்கூடிய கார்ப்பரேட் சைக்கலாஜிக்கல் நடைமுறையை நிபுணர்கள் மூலமாக பெற்றுக் கொள்கின்றனர். ஏழைகளின் எதிர்பார்ப்பு.. தன்னுடைய பிரச்சனையை தீர்க்க எங்கிருந்தோ ஒருவர் வரவேண்டும்.. அந்த பிரச்சினை தீர்ந்து விட்டால் அவர் ஓடி மறைந்து விட வேண்டும்.. பின்பு அவர் இவருடைய கண்களில் பட்டாலும் அதற்குண்டான மரியாதையை செலுத்த விரும்புவதில்லை.. ஆனால் பிரச்சனை என்று வந்துவிட்டால் உடனடியாக அந்தப் பிரச்சனையை தீர்க்க கூடிய வரை சந்தித்து பிரச்சினையை தீர்த்துக் கொள்கின்றனர்.
பின்பு அதாவது பிரச்சனை தீர்ந்த பின் அந்த பிரச்சினையை தீர்த்து வைப்பவர் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப இருந்து விடுகின்றனர்.. பிரச்சனைக்காக மட்டுமே அணுகக் கூடிய உளவியல் கோளாறு உள்ள இவர்களின் மனநிலை இவர்களுக்கே புரியாது. ஏழை மனநிலையில் பணத்தை நோக்கிய ஓட்டம்… பணக்கார மனநிலையில்.. பணம் பணக்காரரை நோக்கி ஓடி வந்தடைகிறது.. பணக்கார மனநிலை ஏழை மனநிலை.. இவற்றுக்கான அடிப்படை….. உளவியல் கூறு நடத்தை மற்றும் செயல்பாடு.. பணம் என்பது ஆற்றல் இந்த ஆற்றலை வாடகைக்கு விட முடியாது. ஆனால் வடிவ மாற்றம் செய்ய முடியும். ஒரு ஆற்றலை மாற்று ஆற்றலாக உருவாக்கும் உளவியல் உடலியல் சமூகவியல் செயல்பாடுதான். பணம் வந்து அடைவதற்கான வழிமுறை.
வேலை என்பது சமூகத்திற்கான தனி மனிதனுடைய பங்கீடு.. வேலையை சிரமமாக பார்க்கக்கூடிய அவர்கள் தனது சமூக பங்கீட்டில் இருந்து ஒதுக்குகின்றனர்.. இதன் விளைவு இவர்களுக்காக மற்றவர்கள் பங்கீடு செய்வது இயற்கையாவே துண்டிக்கப்படும்.. ஆகவே வேலை என்பது பணத்துக்கான செயல் என்பதை விட சமூகத்துக்கான பங்கீடு என்ற எண்ணத்தில் செயல்படும்போது பணம் தானாக சேர்ந்துவிடும். கூலிக்காரர்கள் வேலைக்காரர்கள் இவர்கள் சிந்திப்பதை தவிர்க்கின்றனர்.. சிந்திக்கத் தெரிவதில்லை.. ஆனால் சிந்திப்பதை …. விட சொன்ன வேலையை .. வேலையாக மட்டுமே பார்க்கின்றனர்.. வேலையை முடித்து விட வேண்டும்… என்பதில் மட்டும் குறியாக உள்ளனர்.. இவர்களுக்கு உடல் வேலை செய்யும் அளவு மனம் அதை பற்றி சிந்தித்து சிறப்பாக செயல்படும் ஆற்றல் குறை உடையவர்களாகவே உள்ளனர்..
இவளுடைய குறையை யாரேனும் எடுத்துக் கூறினால் அதை ஏற்றுக் கொள்வதை விட அதற்கான புதிய காரணங்களை சொல்லி தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிப்பது சிறப்பாக செயல்படுகின்றனர். இந்தக் கூலி சார்ந்த வேலை மனப்பான்மை பாரம்பரியங்களை வேலைக்கார அடிமையாகவே மாற்றிவிடும்.. கொடுக்கப்பட்ட வேலையை சிந்தித்து வேலை கொடுக்கப்பட்ட அவருக்கு சாதகமாக செயல்படும் நுண்ணறி உள்ளவர்களே பிற்காலத்தில் தொழில் நிறுவனங்களையும் வியாபார நிறுவனங்களையும் உருவாக்கும் நுண்ணறிவு பெற்றவர்களாக உருமாற்றம் அடைகின்றனர். மக்களுக்கு எனது பங்கீடு என்ன என்பதை உணர்ந்து செயல்பட கூடியவர்கள் அவர்களுடைய டிஎன்ஏ அளவிலேயே தொழிலதிபர்களாக ஒரு மாற்றம் செய்யப் படுகின்றனர்… இந்த மக்களிடமிருந்து நான் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து தனது நலத்தை உட்படுத்தி முற்படுத்தி செயல்படு கிறவர்கள் அவருடைய டி என் ஏ அளவிலேயே தொழிலாளியாக உருமாற்றம் செய்யப்படுகின்றனர்.. தொழிலாளி தனக்கு வேண்டியதை சிந்திக்கிறான்… முதலாளி மக்களுக்கு வேண்டியதை சிந்தித்து அவர்களை தேவையை நிவர்த்தி செய்வதற்காக தொழிலை உருவாக்கி அதை விரிவாக்கி தான் ஒரு தொழிலதிபராக உருவாக்கிக் கொள்கிறான்.
Comments
Post a Comment