ஆடுகளுக்கு அடிமை வேஷம்.. அடித்துத் தின்னும் சிங்கத்துக்கு ராஜா வேஷம்..

இது MSK முகையுதீன், Founder & CEO, MSK Life Clinic Foundation அவர்களின் சமுதாய முன்னேற்றத்திற்கான ஒரு விழிப்புணர்வு பதிவு! 

உண்மையைச் சொல்.. என்ற தத்துவம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்றால்.. ‘பொய் சொல்லி என்னை சிரமப்படுத்த வேண்டாம்.. என்பதற்காகவும், எனது வேலையை சுலபமாக்கு.. இல்லையென்றால் உன்னுடைய உண்மையான தன்மையை கண்டுபிடிக்க நான் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.. என் வேலையை சுலபமாக்க நீ உண்மையைப் பேசு..’ என்பது தான்… உண்மையை சொல்லக்கூடியவர்கள் சாதாரண மக்கள்.. இது உண்மையா என்று கண்டுபிடிக்க கூடியவர்கள் அதிகார மக்கள்! 


அதிகார மக்கள் உண்மையை கண்டுபிடிக்க அதிக முயற்சி செய்யக்கூடாது… உழைக்கக் கூடாது… என்பதற்காக பொய் சொல்லாதே என்ற தத்துவம் குழந்தை பருவத்திலிருந்து உருவாக்கப்பட்டிருக்கலாம்… பொய் என்ற வார்த்தைக்கும், உண்மை இல்லை என்ற வார்த்தைக்கும், சரி இல்லை என்ற வார்த்தைக்கும், தவறு இல்லை என்ற வார்த்தைக்கும், மாற்றி பேசுதல் என்ற வார்த்தைக்கும், திரித்துப் பேசுதல் என்ற வார்த்தைக்கும், குறைத்து பேசுதல் அல்லது மிகை படுத்தி பேசுதல் என்ற வார்த்தைக்கும்.. உளவியல் அர்த்தங்கள் பல்வேறு உள்ளன என்பதை புரிந்து கொள்வதுதான் MSK கோகினிசன் உளவியல் என்று பெயர்.


பெரும்பாலான மக்கள் சிந்தனையை மிகவும் கஞ்சத்தனமாக… வரைமுறையற்ற… தொடர் நினைவுச் சிந்தனையாக வைத்துள்ளனர்! ஆனால் செலவுகளைப் பொறுத்தவரை, பெருமைக்காக… மற்றவர்களின் பாராட்டைப் பெற… தன்னை உயர்ந்தவராக காட்டிக்கொள்ள… அளவு கடந்து… அளவில்லாமல் செலவு செய்து …வாழ்க்கையை சிக்கனமாக மாற்றிக் கொள்கின்றனர்! இப்படிப்பட்டவர்களுக்கு, உயர்ந்த சிந்தனை… உருப்படியான சிந்தனை… செயல்வடிவம் பெற சிந்தனை… சிறப்பு பெற சிந்தனை போன்றவைகள் உளவியல் ரீதியில் நடைபெற்றுள்ளன. அல்லது சிந்தனை என்றால் என்ன என்பதற்கு சொந்த கருத்தை சுகமாக வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.. சிந்தனை வேறு.. செயல் வேறு.. செயலை முறைப்படுத்த வேண்டும்! சிந்தனையின் வரையறைக்குள் முறைப்படுத்தி சாதிக்க முயற்சிக்க வேண்டும்!! 



சிங்கம் நடத்தும் பயிற்சி பட்டறைக்கு ஆடுகள் வரவேற்கப்படுகின்றன. நுழைவு கட்டணம் தன்னுடைய ஆட்டு குழுவிலிருந்து சில ஆடுகளில் கொடுத்தால் போதும்… வரிசையாக ஆடுகள் செல்கின்றன… அமைதியை கடை பிடிப்பது எப்படி என்று சிங்கம் நடத்தும் பயிற்சி பட்டறைக்கு… நுழைவுக் கட்டணமாக தன்னுடைய சக ஆட்டுக்குட்டியை கொடுத்துவிட்டு… குழுவிலிருந்து சில ஆடுகளில் கொடுத்தால் போதும்… எந்த சூழ்நிலையிலும் அமைதியை மேற்கொள்ளுவது எப்படி என்று நடைமுறை பயிற்சி கொடுக்கப்படும்.. இப்பயிற்சியின் சிறப்பு நிபுணர்.. மிஸ்டர் சிங்கம்.. ஆடுகளோட இணைந்து பல பயிற்சிகளை நடத்தியவர்.. இவருடைய பயிற்சிகளைப் பார்த்து ஆடுகள் தங்களுடைய மந்தையிலிருந்து பல ஆட்டுக்குட்டிகளை பரிசளித்து உள்ளன.. இதைவிட சிறந்த பயிற்சியாளர் உலகங்களும் காணமுடியாது.. 



ஆடுகளே கலந்துகொள்ளுங்கள்.. அமைதியாக இருப்பது எப்படி என்ற சிறப்பு பயிற்சிக்கு… நீதி நியாயம் வேண்டி ஆடுகள் பசியுடன் இருக்கும் சிங்கத்திடம் செல்வதுதான் அறிவு என காலங்காலமாக சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது… யாரெல்லாம் நியாயம் வேண்டி சிங்கத்திடம் செல்கிறார்களோ…. நியாயம் வேண்டுபவர்கள்… நியாயம் வேண்டும் அந்த நபர்கள்… அடிமை தன்மை…… அறிவு பலகீனம் உள்ளவர்கள் என்பதை உணராமல் உள்ளனர்…. அடிமைகளுக்கு நியாயம் நீதி வேண்டும் என்ற உணர்வுகள் மட்டுமே ஊட்டி வளர்க்கப் படுகின்றன.. அடிமை தன்மைக்கு ஆடு உதாரணம்.. அரசு தன்மைக்கு சிங்கம் உதாரணம்.. ஆடு சிங்கத்தை அரசனாக ஏற்றுக்கொள்ள விளக்கப் படுத்தப் பட்டுள்ளது… பழக்கப் படுத்தப் பட்டுள்ளது.. ஆனால் சிங்கம்…….. ஆனால் சிங்கத்துக்கு முடிவெடுக்கும் தன்மை …..முறையாக பழக்கப்படுத்துவது பற்றி உளவியல் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.. 



பெரும்பாலும் ஆடுகளுக்கு அடைக்கலம் பாதுகாப்பான இடம் இவற்றில் வாழ மட்டுமே அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் சிங்கத்திற்கு கரடுமுரடான பாதை விபத்துக்களை சந்திக்கும் சமாளிக்கும் திறன் உணவுக்காக போராடும் பசி உணர்வு. அடுத்தவர்களை அடிமைகளாக துரத்தும் அறிவு.. நியாயத்தை வேண்டுவதை விட முடிவெடுப்பதை துரிதப்படுத்தும் செயல் தன்மை டிஎன்ஏ வில் முறைப் படுத்தப் பட்டுள்ளது.. நீங்கள் சிங்கப் பரம்பரையா.. அல்லது ஆட்டு மந்தை அடிமை பரம்பரையா என்பதை உணர எங்களோடு இணையுங்கள்



 ஆடுகளுக்கு ஆன்மிகம் அமைதி ….பற்றியும் தன்னடக்கத்தை பற்றியும் வகுப்பு பயிற்சி.. எடுக்கப்படுகிறது… ஆட்டை அடித்து சாப்பிடும் சிங்கங்களுக்கு வகுப்பு எடுப்பதில்லை.. காரணம் இவர்களை சிங்கம் உணவாக உட்கொண்டு விடும் என்பதால்.. ஆனால் சிங்கத்தை பயத்துடன் மரியாதை செய்து அதை ராஜாவாக ஏற்றுக்கொள்கின்றன.. யாரேனும் ஏன் சிங்கத்துக்கு பயிற்சி அளிப்பதில்லை என கேட்டால் உடனடி பதிலாக அது சிங்கத்தின் இயல்பு அதை மாற்ற முடியாது.. ஆனால் உன்னை மாற்ற முடியும்.. சிங்கத்தை மாற்றுவதிலும் வேலை.. சிங்கம் சிங்கத்தின் வேலை செய்கிறது.. நீங்கள் அமைதியாக அடிமையாக வாழ்வது கற்றுக்கொள்ளுங்கள்.. போராடி சாவதைவிட.. புரிந்துகொண்டு விலகுங்கள். என்று சிறப்பு பேச்சாளர்கள் மூலம் சொற்பொழிவாளர்கள் மூலம் மனித சிந்தனைகள் ஆட்டு மந்தை மனநிலைக்கு உற்பத்தி செய்யப்படுகிறது அறிவியல் ஆன்மீகம் அறிவுரையும் அப்பாவியான ஆடுகளுக்கு தான்… அடித்து சாப்பிடும் சிங்க ராஜாவுக்கு அல்ல என்பதைப் புரிந்து கொள்ள உளவியல் நுண்ணறிவு தேவை.. ஆடுகளுக்கு அடிமை வேஷம்.. அடித்துத் தின்னும் சிங்கத்துக்கு ராஜா வேஷம்.. வலியது வெல்லும். வலிமை இல்லாதது கொல்லப்படும் .. 

 MSK முகயுதீன், MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

மூளையா? மனமா? மனபாதிப்பினை சரிபடுத்துவது எவ்வாறு? அறியுங்கள்!