திசை திரும்பும் சமூகம்!


மக்களை திசை திருப்புவதற்காக அவர்களுக்கென்றே பல்வேறு உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை வழிகெடுக்க திரைப்படம்! சற்று முதிர்ந்த இளைஞர்களை வழிகெடுக்க பேச்சாளர்களின் நிகழ்ச்சிகள்!! பெண்களின் கவனத்தை ஒருமுகப்படுத்த தொலைக்காட்சி தொடர்கள்… சுய மகிழ்ச்சியை கூடியவர்களுக்கு போதை பாதைகள்… மாணவர்களை ஒரே நிலையில் வைக்க ஒற்றைப் பாதை சிறப்பு வகுப்புகள்… படித்தவர்களை வரிசையில் நிற்க வைக்க ‘பிளேஸ்மெண்ட்’ என்று சொல்லக்கூடிய கூலி வேலைக்கு இடம் பிடித்துக் கொடுத்தல்… 




இதிலும் அகப்படாதவர்களுக்கு மின்னணு வகைகள் – வலைகள் இதற்கு மேலும் இவர்களுக்கு பெண் வளைகள்… ஆனால் இதுவரை இவர்களுக்கு அறிமுகப்படாத ஒரே ஒரு நிகழ்வு…. வாழ்க்கை வெற்றிக்கான ஆலோசனை வழங்கக்கூடிய உளவியல் நிபுணர்களை அறிமுகம்…. இதை தவிர்த்தல் தான் எழுச்சியின் வீழ்ச்சி… கலைத்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை இத்தகைய துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்… தான் பார்த்த உலகத்தை பற்றிய உண்மைகளை – எதார்த்தங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள தன்னோடு ஒத்த ஒரு ஆன்மா இருந்தால் அதை அவர்களிடத்தில் விளக்கிச் சொல்ல முடியும்… 




அவர்களும் அதற்கு ஏற்ப உரையாடல் செய்ய முடியும்… ஆனால் அப்படி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் வாழ்க்கையை வெறுமையுடன் நடத்தி வருகின்றனர்… சாதித்தவர்களையும் பாதிப்பது இந்த பாதிப்பு தான்…. தனது உலகத்தை தான் வாழ்கின்ற உலகத்தை தான் அனுபவிக்கும் உலகத்தை தான் பார்த்து ரசித்த உலகத்தை.. பற்றி பேச ஆத்மார்த்தமான ஆள் இல்லையே என்ற பாதிப்புதான்.




வாழ்க்கையை பொருளாதார தன்னிறைவு பெற்றதாக மாற்றுவதற்கான பழக்க பத்தியம்: பத்தியம் இருவகைப்படும் ஒன்று உணவு பத்தியம், மற்றொன்று பழக்க பத்தியம்! பத்தியம் என்றால் வளர்ச்சிக்கான வழிகளை தடுக்கும் உணர்வு, உணவு, நட்பு இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுதல் என்ற செயல்பாடாகும். உணவு பத்தியம் மருத்துவ முன்னேற்றத்தை கொடுக்கும். உணர்வு பத்தியம் மன மகிழ்ச்சியை பெருக்கும்! சேர்க்கை அல்லது நட்பு பத்தியம் வாழ்க்கையை வளம் உடையதாக மாற்றுவதற்கு பெரும் உதவி செய்யும். இதில் நாங்கள் விழிப்புணர்வு செய்வது நட்பு சார்ந்த பத்தியம் தான். 




வளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய வாழ்க்கையை வளர்ச்சிப்பாதையில் செலுத்துபவர்கள் மிக கவனமாக தடையை உருவாக்கும் நட்பு ரீதியான சேர்க்கையை தவிர்க்க வேண்டும்… இல்லை என்றால் இவை வளர்ச்சியை பாதி அளவில் தடுத்து நீதி அளவில் பழைய நிலைக்கு இழுத்துச் சென்றுவிடும் ஆகவே நட்பு சார்ந்த நடத்தை வைத்தியம் என்ற பத்தியம் வளமையான வாழ்க்கை நிகழ்வுக்கு அவசியம் என்பதே எங்களது எம் எஸ் கே வாழ்க்கை பத்திய வரைமுறை கோட்பாடு ஆகும்.

 MSK Muhaiyuddin, Founder & CEO, 
 MSK Life Clinic Foundation, Coimbatore India.

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்