பணம் கறக்கும் வித்தை!
இது MSK முகையுதீன், Founder & CEO, MSK Life Clinic Foundation அவர்களின் சமுதாய முன்னேற்றத்திற்கான ஒரு விழிப்புணர்வு பதிவு!
இந்த கொரானா காலம் மக்களின் கருத்துக்களை மாற்றி உள்ளது ..
அதாவது சிந்திக்கக்கூடிய மக்களின் கடவுள் பற்றிய கருத்துக்களை மாற்றி உள்ளது ….
கடவுள் நிறுவனங்கள் தங்களிடம் பணி செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்ற அறிவிப்பு வெளியிட்ட பொழுது பல சிந்தனையாளர்கள் ஒரு கேள்வியை கேட்டனர் ..
சம்பளம் கொடுப்பது கூட வழியில்லை என்று சொன்னால் கடவுள் என்பது நம்பிக்கைதானா ….
என்ற விழிப்புணர்வு பல பேருக்கு ஏற்பட்டுள்ளது…. ஆகவே கடவுள் நம்பிக்கை பற்றிய பல்வேறு கருத்துகளை கொரானா மாற்றி உள்ளது …
குறிப்பாக உழைப்பில் மூலம்தான் பணம் கிடைக்கும் …
உழைப்பில்லாமல் எதுவும் கிடைக்காது.
இது கடவுளுக்கு பொருந்தும் கடவுளை வழிபடும்..அனைவருக்கும் பொருந்தும்…
கடவுளாக இருந்தாலும் உழைத்தால் தான் முடியும்.
பலபேர் இதை செய்தால் அதாவது சடங்குகள் சிறப்பு வழிபாடுகள் செய்தால் கடவுள் கொடுப்பார் …
இதை செய்தால் உனக்கு கடவுள் கொடுப்பார் என்று பல்வேறு கருத்து மற்றும் சடங்குகளை விளம்பரப்படுத்துகின்றனர் ஆனால் அந்த கடவுள் நம்பிக்கை அல்லது சடங்குகளை விளம்பரப்படுத்தக்கூடியவர் கடுமையாக உழைக்கிறார் என்பது விளம்பரத்தை பார்க்க கூடியவர்களுக்கு புரிவதில்லை….
ஒட்டு மொத்தமாக… பார்த்தால்..
விளம்பரப்படுத்தும் நபர் உழைக்கிறார் ….விளம்பரத்தை பார்ப்பவர் உழைப்பில்லாமல் கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்…
அந்த எதிர்பார்ப்பை அவர்கள் புரிந்து கொள்கின்றனர் அதற்கு இணையாக இவர்களிடத்திலிருந்து பொருளாதார செலவுகளை…. பொருளாதார… வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்கின்றனர்…
ஏற்படுத்துகின்றனர் இந்த விழிப்புணர்வு வைரஸ் காலத்தில் ஏற்பட்ட மன முதிர்வை அறிவுசார்ந்த வெளிப்பாடு என அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிரினமும் வெளிப்படுத்தும் சப்தம் மறைந்து போவதில்லை அது எல்லையை நோக்கி செல்கிறது அதுதான் வான் எல்லை.. எந்த செயலும் மறக்கப்படுவதில்லை பிரபஞ்சத்தில் அவைகள் பதிய வைக்கப்படுகின்றன.. நல்ல செயல்கள் நமக்கும் பிறருக்கும் பயன் அளிக்கக் கூடிய செயல்களை செய்து விட்டு நாம் மறந்தாலும் நாம் செய்த செயல்கள் நம்மை மறப்பதில்லையே..
அவை வளர்ந்து பெரிய உருப்பெற்று திரும்பி நம்மிடமே வந்து சேரும்.. ஆகவே நாம் ஒலிக்கும் எந்த சப்தமும் யாருக்கு கேட்கிறதோ இல்லையோ பிரபஞ்சத்துக்கு கேட்டுக்கொண்டிருக்கிறது பதிவாகிக் கொண்டிருந்தது.. நன்மைகள் தரக்கூடிய செயல் ஒலிகள் சேமிக்கப்பட்டு அது பன்மடங்கு உருப்பெருக்கம் பெற்று நம்மை வந்து சேரும்… இதே போல தான் நன்மை அளிக்கும் சமூக உழைப்பை செய்து விட்டால் அவை பணமாகவும் பொருளாகவும் நம்மை வந்து சேரும்.. வீசிய கல் விழுந்த இடம். விதைத்த விதை செடியாக மரமாக மாறும்.. உழைப்பை முறையாக உளவியல் பாங்கோடு சமூக நிலையில் செய்தால் உழைப்பு பணம் பொருளாக பல மடங்கு பெருகும் பெற்று வந்தடையும் அவை நமக்கு மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்களுக்கும் வந்து சேரும்… ஆகவே சப்தங்கள் மறைவதில்லை செயல்கள் மறக்கப்படுவதில்லை உழைப்பு வீணாகி படுவதில்லை..
காதல் பிடிக்கும் என்பவர்கள் காதலிக்கின்றனர்.. இசை பிடிக்கும் என்பவர்கள் ஏன் இசையாரளர்களாக தன்னை மாற்றிக் கொள்வதில்லை. பாடல் பிடிக்கும் என்பவர்கள் ஏன் பாடலாளர்களாக தன்னை மாற்றிக் கொள்வதில்லை.. திரைப்படம் பிடிக்கும் என்பவர்கள் ஏன் நடிகர்களாக தன்னை மாற்றிக் கொள்வதில்லை.. நாடகம் பிடிக்கும் என்பவர்கள் டிவி சீரியல் பிடிக்கும் என்பவர்கள் ஏன் குறைந்த பட்சம் சீரியல் நடிகர்களாகவோ அல்லது சீரியல் எழுத்தாளராகவோ மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.. இங்குதான் உள்ளது உலவியல் இயக்கவியல்.. விருப்பம் என்பது வேறு… ஆசை என்பது வேறு… செயல்படும் திறன் என்பது வேறு… பொழுதுபோக்கு என்பது வேறு…. அதை சமாளிப்பது என்பது வேறு… தன்னுடைய நேரத்தை, எந்த வேலையும் செய்யாமல் இன்பமாக கழிப்பது என்பது வேறு…. பிடிக்கும் என்ற பெயரில் பிறரை ஏமாற்றி கொண்டு தன்னை மாற்றிக் கொள்வது என்பது வேறு.. செயல்படுதலில், பிடிக்கும் என்பது, விதி என்ற அளவில், காதலுக்கும் போதைக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.. இன்னும் தெளிவாக சொன்னால் பணம் பிடிக்கும் என்பவர்கள் ஏன் உழைப்பதில்லை?
பணம் பெற வேண்டும் என நினைப்பவர்கள் ஏன் உழைப்பு தான் மூலதனம் என்பதை உணர்வதில்லை? மிகப்பெரிய செல்வத்தை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கிணையான உழைப்பை ஏன் விதைப்பதில்லை? உங்கள் விருப்பத்தை முறைப்படுத்த, ஆசையை செயலாக மாற்ற எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.
MSK முகையுதீன், Founder & CEO
Comments
Post a Comment