அனைவரும் உங்களை புறக்கணிக்கிறார்களா? உங்களுக்கானஅரவணைப்பை அறியுங்கள்.

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 



யாரோ உங்களைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறீர்கள் ? யார் உங்களைப் புறக்கணித்தால் என்ன? இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உங்களைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது சூரியனோ, சந்திரனோ… என்றாவது உங்களைப் புறக்கணித்துத் தன் ஒளியை தர மறுத்ததுண்டா? இயற்கை உங்களை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. உங்கள் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீங்கள் மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறீர்கள்.. 



உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாருங்கள் அது மனதின் வேலை. உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உங்களைப் புறக்கணிப்பதுண்டு. நீங்களும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு. எல்லாப் புறக்கணிப்புகளும் உங்களுக்கு வலியைத் தருவதில்லை. இயற்கையில் உயர்வு-தாழ்வு ஏதுமில்லை. சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.ஆக இப்போது உங்களுக்குத் தேவை சமநோக்குப் பார்வை. 



Mind Set Knowledge (MSK) பயிற்சியினை செய்யுங்கள். இயற்கையை நேசியுங்கள். வலிகள் மறையும் பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீங்கள் எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறீர்கள் என்று எண்ணி பாருங்கள். வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்யுங்கள்…. எல்லாம் மாறும் நம் மனம் மாறினால்… உங்கள் மனம் மாறுவது தடை இருந்தால் அழைக்கவும்… 

 Just call… +9193602 53930 
 உளவியல் முதலுதவி ஆலோசனை நிறுவனம் 
MSK Life Clinic Foundation

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

சக்தியுள்ள மனிதர்களாக மாற வேண்டுமா?

உலகத்தில் பொய் பேசுபவர்கள் வெற்றி அடைகின்றனர். இதற்கான உளவியல் காரணம்