குரு என்பவர் …

இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! 



 குரு என்பவர் கொடுப்பார் என்பதும்… கடவுள் என்பவர் கொடுப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை சார்ந்த செயலற்ற விதிமுறையாகும். ஆனால் உண்மையில் குரு என்பவர் சொல்லிக் கொடுக்காமல் அறிவை தேட வைப்பவர்! தேடுதல் இல்லாமல் அறிவு ஒன்று கிடைக்குமாயின் அது அறிவு அல்ல.. அது அவர்கள் கொடுக்கும் செய்திதான்.. அறிவு என்பது தேடுதல் மூலமாக அதாவது தேர்வு செய்தல் மூலமாக – தேடுதல் மூலமாக பரிசோதனை வாயிலாக கண்டு உணர்ந்து தெளிவு அடைவதாகும்.. 



இவையெல்லாம் இல்லாமல் அறிவு என்பதை குரு கொடுக்கிறார் என்றால் எப்படி சாத்தியமாகும்? உணர்தல், புரிதல், அனுபவித்தல், ஆய்வு படுத்துதல், பரிசோதித்தல் இவையெல்லாமே குருவே செய்துவிட்டு, ரிசல்ட் என்று சொல்லக்கூடிய முடிவை மட்டும் கொடுத்தால் அது எப்படி அறிவாக மாறும்? அதுவே எம் எஸ் கே என்கின்ற மன பதிவு சார் அறிவு கோட்பாட்டின்படி அறிதல் என்பது தனி மனித செயல். குரு என்பவர் அறிதலுக்கு – தேடுதலுக்கு முடுக்கி விட்டு தூண்ட கூடியவராக மட்டுமே இருப்பார்… 



அறிவு என்பது மருந்துக் கடையில் விற்பனை செய்யும் மருந்து அல்ல.. மருந்து மட்டுமே மருந்து விற்பனையாளர் ஆய்வுசெய்து அதனுடைய பலனை பரிசோதித்து அடுத்தவருக்கு கொடுப்பார்… இந்த செயல் விதி, ஆன்மீகம் என்கின்ற அறிவியலுக்கு பொருந்தாது. உணர்வுகள் தான்… தேர்தல்தான்… தேடுதல் தான்… புரிதல்தான்… புரிந்ததே செயலாக மாற்றுவது தான்.. ஆன்மீக உளவியல்சார் அறிவியல்! இதை செயல்பட தூண்டக்கூடிய ஒருவர் தான் குரு! 



 MSK முகயுதீன், 
MSK லைப் கிளீனிக் பவுண்டேசன், 
தொலைபேசி: 9360053930

Comments

Popular posts from this blog

Conflict between Functional meaning and semantics meaning with unequal and unmatched people

அதிகம் படித்தவர்கள் இன்றளவும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இதற்கான உளவியல் காரணம்

குவாலிட்டி ஆப் லைப் (Quality of Life)