Posts

அறிவுரைகளும் ஆபத்தும்

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!   இன்று பெரும்பாலான அறிவுரைகள் யாருக்காக கொடுக்கப்படுகின்றன என்று உளவியல் ரீதியாக ஆய்வு செய்யும்பொழுது யோசிக்க முடியாத அளவுக்கு ஒரு மறைமுக செயல் நடந்துக் கொண்டிருக்கிறது. பொருளை இழந்தவன் இடத்தில், கவலைப்படாதே கிடைக்கும் என்று ஆலோசனை அறிவுரையாக வழங்கப்படுகிறது. யாருமே பொருளை எடுத்தவர்களுக்கு தண்டிக்கும் ஆலோசனை வழங்குவது இல்லை. காரணம் சற்று உற்று நோக்கினால் பொருளை எடுத்தவனிடத்தில் தண்டனை பற்றி பேசினால் வெறுத்து ஒதுங்கி விடுவான். அவனிடத்தில் இருக்கின்ற பொருளாதாரம் இவர்களுக்கு வராது என்பதை புரிந்து வைத்துள்ளனர்…   இந்த உலகத்தில் அட்வைஸ் எல்லாம் பாதிக்கப் பட்டவனுக்கு மட்டும் தான் … பாதிப்பை ஏற்படுத்தி அவனுக்கு தண்டனை இல்லை… இதை புரிந்து கொண்டவன் தான் எந்த செயலிலையும் தைரியமாக தவறை தவறில்லை என்று செய்கிறான். தவறு செய்தவனுக்கு யாரும் அறிவுரை கூறுவதில்லை. இழந்தவனுக்கு தான் அறிவுரை… ஒருவகையில் பார்த்தால் பல தர்மங்களைச் செய்யக்கூடிய ஒருவர் கூட சொந்த பணத்தில் செ...

நல்லவன் – கெட்டவன் – சூழ்ச்சியாளன் : எவ்வாறு வாழ வேண்டும்?

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!    அறிவு என்பது மனப்பாடம் செய்வது – தேர்வில் வெற்றி பெறுவது என சொல்லிக் கொடுத்துததன் விளைவு வாழ்க்கையில் அறிவை எப்படி பயன்படுத்துவது என்ற செயலியல் தெரியாமல் போய்விட்டது என்பது கூட தெரியாமல் ஆகிவிட்டது. இதற்கு சுய காரணத்தை கண்டு பிடிக்காமல் கடவுளை காரணம் காட்டுகிறோம் அல்லது விதி என விலகிச் செல்கிறோம். பலர் ஜாதகம் என சாதக படுத்திக் கொள்கின்றனர்.  சிலரோ சிந்தனை மற்றும் செயல் மாற்றத்திற்கு பதிலாக வீட்டை சாஸ்திரதிற்காக மாற்றுகின்றனர். பெயரை எழுத்தை உச்சரிப்பை மாற்றி அமைக்கின்றனர். உண்மையில் மாற்ற வேண்டியது செயலையும், சிந்தனையையும், முயற்சியின் வழிமுறையும் தான்! பிடிக்கும் – பிடிக்காது என்று வகைப்படுத்துதை விட, நடிக்க தெரியும், நடிக்க தெரியாது என வகைப்படுத்துவதில் தான் வாழ்க்கையின் வெற்றி உள்ளது! ‘நடிப்பு’ என்பதை தவறாக நினைத்துக் கொள்வதை விட, நடிப்பு என்பது சமூக நல்லிணக்கத்திற்காக தகவமைத்துக் கொள்ளும் ஒரு உளவியல் பண்பியல் என்று வார்த்தையை முறைப்படுத்திக் கொள்ள ...

பணக்காரன்… ஏழைகள்…

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு! பணக்காரன் எல்லாம் வியாபாரி… ஏழைகள் எல்லாம் தொழிலாளி…. எங்களுடைய ஒரு ஆய்வு அடிப்படையான உளவியல் நடத்தைகளின் படி, உண்மை என்னவென்றால்… ஏழையை மாற்ற முடியாது ஆனால் ஏமாற்றலாம்… பணக்காரனை ஏமாற்ற முடியாது ஆனால் மாற்றலாம்…  ஏழை பழமை வாதத்தில் பழக்கப்பட்டு பிறரை நம்ப வைப்பதில் ஆனந்தப் பட்டுக் கொண்டே இருப்பான்.. ஆனால் பணக்காரன் ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டிருக்கிறார் உலகத்தை கையாளும் திறனை பெற்றுக்கொள்ள அத்துறை சார்ந்த உங்களுடைய ஆலோசனையை பயன்படுத்தி  வெற்றி பெற்று சமூகத்தில் தன்னை வளர்ச்சிப் படுத்திக் கொண்டே இருப்பான்.. ஏழைக்கு தேவை ஆறுதல்... ஆறுதலில் இன்பம் அடைந்து கற்பனையில் காலம் பிடித்துக் கொண்டிருப்பது சுகமாகவே... அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.. பணக்காரனுக்கு தேவை அறிவு செயல் திருத்த வழிகாட்டல் செயல்ஆலோசனை.. ஒவ்வொரு கூலி பெறும் நபர்களும் கூலி பெறும் நேரத்தில் கூட மனதை ஈடுபடுத்தாமல் கனவுகண்டு வாழ்வார்கள்.. ஆனால் கூலி கொடுக்கும் தொழிலதிபரோ வேலை செய்யும் நேரத்திலும் ...

கடவுள் நம்பிக்கை பற்றிய உளவியல்

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!   கடவுளை நம்ப வேண்டும் கடவுள் தான் உங்களுக்கு எல்லாம் கொடுக்கிறார், கடவுள் உங்களை தண்டிப்பார்… இதுபோன்ற நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன! இதில் கேள்வி என்னவென்றால் இப்படி பிரச்சாரம் செய்பவர்கள் இடத்தில் கடவுள் இவ்வாறு கூறினாரா அல்லது கடவுளை இவர் பார்த்து அவருடன் கேள்வி பதில் பரிமாறி அதனடிப்படையில் அனைவருக்கும் அறிவுரை கூறுகிறாரா? உளவியல் அடிப்படையில் உற்றுநோக்கினால், ஒருவர் இயற்கையினுடைய நடத்தையியல், இயற்கையின் நிகழ்வுகள், தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் இணைப்புக்கள், பிணைப்புக்கள், முரண்பாடுகள், சமன்பாடுகள் இவற்றின் பல்வேறு கோணங்களில் இந்த செயல்பாடுகள் வடிவமைக்கப்படவில்லை. ஆனால் இவை சுய இயக்கத்தினால் நடைபெறுகிறது. இந்த இயக்கம் சரியான முறையில் முறைப்படுத்தப்பட்ட முரண்பாடற்ற செயல்பாட்டை உருவாக்க முடியும் என்று ஒருவர் அதீத நுண் அறிவு கொண்டு யோசித்து இருக்கலாம், அல்லது இப்படித்தான் இருக்கும் என்று பரிசோதனை அடிப்படையில் தனக்குத்தானே பல சுய பரிசோதனை சமூக பரிசோதன...

குரு என்பவர் …

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!   குரு என்பவர் கொடுப்பார் என்பதும்… கடவுள் என்பவர் கொடுப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை சார்ந்த செயலற்ற விதிமுறையாகும். ஆனால் உண்மையில் குரு என்பவர் சொல்லிக் கொடுக்காமல் அறிவை தேட வைப்பவர்! தேடுதல் இல்லாமல் அறிவு ஒன்று கிடைக்குமாயின் அது அறிவு அல்ல.. அது அவர்கள் கொடுக்கும் செய்திதான்.. அறிவு என்பது தேடுதல் மூலமாக அதாவது தேர்வு செய்தல் மூலமாக – தேடுதல் மூலமாக பரிசோதனை வாயிலாக கண்டு உணர்ந்து தெளிவு அடைவதாகும்..  இவையெல்லாம் இல்லாமல் அறிவு என்பதை குரு கொடுக்கிறார் என்றால் எப்படி சாத்தியமாகும்? உணர்தல், புரிதல், அனுபவித்தல், ஆய்வு படுத்துதல், பரிசோதித்தல் இவையெல்லாமே குருவே செய்துவிட்டு, ரிசல்ட் என்று சொல்லக்கூடிய முடிவை மட்டும் கொடுத்தால் அது எப்படி அறிவாக மாறும்? அதுவே எம் எஸ் கே என்கின்ற மன பதிவு சார் அறிவு கோட்பாட்டின்படி அறிதல் என்பது தனி மனித செயல். குரு என்பவர் அறிதலுக்கு – தேடுதலுக்கு முடுக்கி விட்டு தூண்ட கூடியவராக மட்டுமே இருப்பார்…  அறிவு என்பது ...

தன்னம்பிக்கை வழிமுறையும் ஆன்மீக அறிவியலும்

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!  Belief system, Spiritual science interpretation by psychologist MSK. Belief system என்பது தன்னம்பிக்கை வழிமுறை. Spiritual science என்பது ஆன்மீக அறிவியல்… இவை இரண்டுக்குமான வேறுபாட்டை உணராமல் நம்பிக்கையை அறிவு என்கிறோம். ஆனால் அறிவு வேறு, நம்பிக்கை வேறு என்பதை புரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பல அறிவு இயல்புக்கு புறம்பான விளக்கங்கள் – உதாரணங்கள் பதிய வைக்கப்படுகின்றன.  எங்களுடைய எம் எஸ் கே என்கின்ற மனப்பதிவு சார் அறிவு உளவியல் கோட்பாட்டின்படி, நம்பிக்கைகள் என்பது அறிவு சார்ந்தது அல்ல! நம்பிக்கை என்பது ஒன்று இருப்பதாக நம்புவது அல்லது கொடுக்கும் என நம்புவது. இவை தனிமனித நம்பிக்கைதானே தவிர உண்மையல்ல …. ஆனால் ஆன்மீக அறிவியல் என்பது அறிந்து தெளிந்து செயல்படுவது… இங்கு நம்பிக்கையில் செயல்படுவது என்பது கூட சடங்கு சார்ந்த விஷயமாக இருக்கும் .. ஆனால் ஆன்மீக அறிவியலில் பல மடங்கு பல கோணங்களில் சார்ந்த செயல்பாடாக இருக்கும்  அதாவது கடவுளை நம்புதல் என்பது நம்பிக...

மத நிறுவனங்களின் வாடிக்கையாளரா நீங்கள்?

Image
இது MSK முகயுதீன் (Founder & CEO MSK Life Clinic Foundation) அவர்களின் சமுதாய நலனிற்கான ஓர் விழிப்புணர்வு பதிவு!   மத நிறுவனங்கள் மக்களை தங்களுடைய வாடிக்கையாளராக மாற்றுவதில் எடுத்துக் கொள்ளும் கவனத்தை மாற்றி தங்களுடைய வாடிக்கையாளர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற செயல்பாட்டை வடிவமைத்து வாழ்வாதாரத்தை உயர்த்தினால் மதங்கள் என்ற பெயரில் இயங்கும் மதங்கள் என்ற நிறுவனங்களில் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். இதை விடுத்து மதங்களில் வளர்ச்சியை கஸ்டமரை வைத்து அதாவது வாடிக்கையாளர்களின் கூட்டத்தை வைத்து மதிப்பு கூட்டப்பட்ட வேண்டும் என்று நினைப்பதில் தான் உருவாகிறது வேற்று மத துவேஷம்… வன்முறை வார்த்தைகள்… மதங்கள் மக்களை வழிப்படுத்தவா அல்லது மக்களை கூட்டம் கூட்டமாக நம்ப வைப்பதா…  இதைப்பற்றிய தெளிவு இன்று வரை மத நிறுவனங்களுக்கு வரவில்லை…. மதங்கள் கூட்டம் சேர்த்தவா அல்லது மக்களை நெறிப்படுத்தவா.. என்பதில் இன்றளவும் கொள்கை இயற்றப்படவில்லை… கடவுள் நம்பிக்கை அடிப்படையில் உள்ளதா… மத உறுப்பினர்கள் அடிப்படையில் உள்ளதா… மதங்களுக்குள் சண்டையிட்டு முரண்பாடுகள் ஏற்படுத்துவதில...